பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் – 25% மானியம்

பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் - 25% மானியம் வழங்கும் NABARD DEDS Scheme!

இளைஞர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கும், அதே நேரத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதுதான் பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (DEDS). இதன் முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (DEDS)

இந்தியாவில் பால் பண்ணைத் துறையை வலுப்படுத்தவும், அத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்குக் கடனுதவி வழங்குவதன் மூலம் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இது கிராம மட்டத்தில் பால் பதப்படுத்துதலை ஊக்குவிப்பதன் மூலம், தரமான பால் பொருட்களை வழங்கவும் உதவுகிறது.

தொடக்கம்

இந்தப் பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், 2010-ஆம் ஆண்டு, மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையால் தொடங்கப்பட்டது.

யார் விண்ணப்பிக்கலாம்?

  • பால் பண்ணையாளர்கள்.
  • அரசு சாரா நிறுவனங்கள் (NGOs).
  • மகளிர் சுய உதவிக்குழுக்கள்.
  • பால் கூட்டுறவு சங்கங்கள்.
  • உற்பத்தியாளர் நிறுவனங்கள்.

முன்னுரிமை

இந்தப் பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் SC/ST சமூகத்தினர், பெண்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

CM Solar Rooftop Subsidy திட்டம் – 50000 வரை மானியம்! CM Solar Rooftop Subsidy திட்டம் - 50000 வரை மானியம்! Tamilnadu Government Solar Scheme!

தகுதி

விண்ணப்பதாரர் இதற்கு முன்பாக மற்ற நிதி நிறுவனங்களில் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தி இருக்க வேண்டும்.

மானிய விவரங்கள் மற்றும் சலுகைகள்

இந்தத் திட்டத்தின் கீழ், பால் பண்ணை அமைத்தல், கன்று வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், குளிர்பதன சேமிப்பு வசதிகள் மற்றும் பால் விற்பனை நிலையம் அமைத்தல் ஆகியவற்றுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

  • பொதுப் பிரிவினர்: மொத்த திட்டச் செலவில் 25% மானியமாக வழங்கப்படும்.
  • எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்: மொத்த திட்டச் செலவில் 33.33% மானியமாக வழங்கப்படும்.
  • சொந்தப் பங்களிப்பு: திட்டச் செலவு ரூ. 1 லட்சத்திற்கும், அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரர் 10% சொந்தப் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்

இந்தப் பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் பலன் பெறுபவர்கள், பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகள் வரை இருக்கும். பால் பண்ணைக் கடன்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் சலுகைக் காலம் கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தத் திட்டத்தை நபார்டு (NABARD – தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி) செயல்படுத்துகிறது.

  • திட்ட அறிக்கைத் தயாரிப்பு: செலவுகள், கடன் தேவை, எதிர்பார்க்கப்படும் வருமானம் போன்றவற்றை விவரிக்கும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.
  • வங்கி அணுகுதல்: நபார்டு அங்கீகரித்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளுக்குச் சென்று திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து, விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும்.
  • ஆவணங்கள்: ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நிலம் தொடர்பான ஆவணங்கள் (தேவைப்பட்டால்) மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மானியப் பெறுதல்: கடன் ஒப்புதல் பெற்று முதல் தவணை வழங்கப்பட்டவுடன், வங்கி மானியத்திற்காக நபார்டுக்கு விண்ணப்பிக்கும். மானியம் கிடைத்த பிறகு, மீதமுள்ள தொகையை மட்டுமே வட்டியுடன் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
Mahila Samriddhi Yojana – பெண்களுக்கு 1.40 லட்சம் வரை தொழில் கடன்! Mahila Samriddhi Yojana - பெண்களுக்கு ரூ. 1.40 லட்சம் வரை தொழில் கடன் details!

பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் – FAQs

1) பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (DEDS) முக்கிய நோக்கம் என்ன?

இந்தியாவின் பால் பண்ணைத் துறையை வலுப்படுத்துவதும், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

2) பொதுப் பிரிவினருக்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது?

பொதுப் பிரிவினருக்கு மொத்த திட்டச் செலவில் 25% மானியமாக வழங்கப்படுகிறது.

3) இந்தத் திட்டத்தைச் எந்த வங்கி செயல்படுத்துகிறது?

இந்தத் திட்டத்தை நபார்டு (NABARD) செயல்படுத்துகிறது.

    Key Insights & Best Takeaways!

    The Dairy Entrepreneurship Development Scheme (DEDS), launched in 2010 by the central government, aims to boost dairy production and create self-employment opportunities by providing subsidized bank loans. The scheme offers a substantial subsidy (25% for General, 33.33% for SC/ST) for various activities like setting up dairy farms, purchasing equipment, and cold storage facilities, with the funding managed through NABARD. This initiative prioritizes women, SC/ST, and small farmers, requiring a detailed Project Report for application through approved banks.

    நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

    தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
    எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

    எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

    Comment Box

      Scroll to Top