அனைவரின் மனதைக் கொள்ளைகொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்துதான். ஆண்டுதோறும் மாற்றமடையும் புதிய ஆட்டக்காரர்கள், வியூகங்கள் என சுவாரசியம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த முறையும், நம்முடைய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிறைய மாற்றங்களுடன் தொடரில் தனது ஆட்டத்திற்க்காக தயாராகி வருகிறது. இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் (IPL 2026 CSK) தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி மீண்டும் வெற்றி வாகை சூடிவார்களா CSK?
IPL 2026 ஏலம் ஆரம்பம்
இந்தியாவில் மிகவும் சிறப்பாகவும் பிரபலமான நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 13 தேதி ஆரம்பமாகி டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த ஏலத்திற்காக, அனைத்து அணிகளும் தயாராகிவருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களின் அணியில் பங்குபெறும் வீரர்களின் பட்டியலை ஐபில் நிர்வாகத்திடம் வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சரியாக ஒரு மாத காலமே இருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் அடுத்த கட்ட நகர்வு பற்றி தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றன.
Shreyas Iyer Next Captain?
IPL 2026 CSK அணியில் பெரிய மாற்றங்கள் ஏன்?
நடந்து முடித்த இரண்டு சீசன்களிளும் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லத் முடியாமல் CSK அணி பின்தங்கியதால், இந்த முறை வெற்றி என்பதை இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வரவிருக்கிறது. அத்தோடு அணியின் முக்கிய மற்றும் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் அஸ்வின் அவர்கள் தனது ஓய்வை அறிவித்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிதி இருப்பு ரூ. 9.75 கோடி வரை அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாமல், ராகுல் திரிப்பாதி, விஜய் சங்கர், சாம் கரண், டேவான் கான்வே,தீபக் ஹூடா ஆகிய முக்கிய வீரர்களும் அணியிலிருந்து விடுவிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்களால், CSK அணியின் கையிருப்பு தொகை சுமார் ரூ. 40 கோடி அளவுக்குப் பெரிய நிதி உருவாகியுள்ளது. இதனை பயன்படுத்தி ஏலத்தில் திறமையான வீரர்களை எடுக்கலாம் என சொல்லப்படுகிறது.
வியூகம் மற்றும் குறிக்கோள் – IPL 2026 CSK
டிசம்பர் மாத இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ள மினி ஏலத்தில் சிறந்த திறமையான மற்றும் முக்கிய வீரர்களை குறிவைத்து அவர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் CSK அணி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளம் வீரரான சஞ்சு சாம்சன் போன்ற திறமை படைத்த வீரர்களை ஏலத்தில் எடுக்க தோனி மற்றும் CSK நிர்வாகம் முனைப்பு காட்டும் என தங்களது கருத்துகளை கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Virat Kohli opens up – “சாயம் பூசியது போதும்…”
IPL 2026 CSK
கடந்த சீசனில் 10வது இடத்தில் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இப்போது நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இளமையான மற்றும் திறமையான வீரர்களின் பலத்துடன் ஒரு வலுவான அணியை உருவாக்கி, வெற்றிகரமான ஒரு CSK அணியுடன் தங்கள் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி அடைவது மூலமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தீவிரமாகத் தயாராகி வருகிறது.. CSK இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லுமா? உங்கள் கருத்தை Comment-ல சொல்லுங்க..
IPL 2026 CSK – FAQs
தோனி IPL 2026 சீசனில் விளையாடுவாரா?
பதில்: தற்போது தோனி CSK அணியின் முக்கிய முடிவெடுப்பாளராக செயல்படுகிறார். அவர் IPL 2026 சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதை பற்றி நிர்வாகம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தோனி விளையாட்டு நிலைமை குறித்து அணி முறைப்படி அறிவிப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2026 மினி ஏலம் எப்போது நடைபெறுகிறது?
பதில்: IPL 2026 மினி ஏலம் டிசம்பர் 13 முதல் 15 வரை நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அணைத்து அணியினரும், அணியின் வீரர்கள் பட்டியல்ளை நவம்பர் 15க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
IPL 2026 செய்திகள் எங்கு படிக்கலாம்?
IPL 2026 மற்றும் CSK தொடர்பான அனைத்து புதிய அப்டேட்டுகளையும் TN News Box இணையதளத்தில் தினசரி படிக்கலாம்.
IPL 2026 CSK அணி எப்போது அறிவிக்கப்படும்?
பதில்: ஜனவரி 2026ல் CSK புதிய அணி பட்டியலை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2026 CSK மினி ஏலத்தில் எந்த வீரர்களை குறிவைக்கிறது?
பதில்: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற திறமையான வீரர்களை CSK குறிவைத்து வாங்க வாய்ப்பு அதிகம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 மகளிர் T20 உலகக் கோப்பை அட்டவணை ரெடி!
Table of Contents
Key Insights & Best Takeaways!
has begun its IPL 2026 CSK preparations with major team reshuffling after missing playoffs in the last two seasons. The mini auction is scheduled from December 13 to 15, 2025, and all franchises must submit retained and released player lists by November 15. Following Ashwin’s retirement, CSK gains ₹9.75 crore and plans to release five players — Deepak Hooda, Vijay Shankar, Rahul Tripathi, Devon Conway, and Sam Curran — creating a total purse of ₹40 crore for the auction.
With this strong budget, CSK is expected to target key stars like Sanju Samson and young domestic talents to rebuild a competitive squad. Dhoni, continuing his leadership role, is believed to be guiding the team’s revival strategy. Fans anticipate a stronger comeback as CSK aims to reclaim its playoff position and deliver an exciting 2026 season filled with fresh faces and renewed energy.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox












