பொதுவாக, பெண்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க விரும்பினாலும், அதற்குத் தடையாக நிதிப் பிரச்சனை இருக்கலாம். ஆனால், அதைப் போக்கும் வகையில், SBI மூலம் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குறைந்த வட்டி விகிதம் மற்றும் பிணையமில்லா தொழில் கடன் வாய்ப்புகள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா? அதுதான் Stree Shakti Yojana திட்டம். இந்த ஸ்த்ரீ சக்தி யோஜனா என்ற திட்டம் எப்படி உங்கள் தொழில் கனவுகளை உண்மையாக மாற்ற முடியும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Stree Shakti Yojana என்றால் என்ன?
Stree Shakti Yojana அல்லது SBI Stree Shakti Package என்பது பெண் தொழில்முனைவோர்களுக்காக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பில் 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிறப்பு தொழில் கடன் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம், ஏற்கனவே உள்ள வணிகத்தை விரிவுபடுத்தலாம், மேலும் குறைந்த வட்டி விகிதத்தில் எந்தவிதப் பிணையமும் இல்லாமல் கடன் பெறலாம்.
இந்த Stree Shakti Yojana திட்டம், பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களை நிதி ரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் தொழில்முனைவு மேற்கொள்வது மட்டுமில்லாமல், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் உறுதுணையாக இருக்கும்.
Read also : LIC காப்பீட்டுத் திட்டம் – வெறும் 25 ரூபாய் முதலீட்டில் 20 லட்சம்!
Stree Shakti Yojana திட்டத்தின் முக்கிய நோக்கம்
Stree Shakti Yojana திட்டத்தின் முதன்மையான நோக்கம், பெண்கள் தொழில்முனைவோராக மாறும் வழிகளை ஊக்குவிப்பதே ஆகும். பெண்களுக்குத் தொழில் கடன்களைக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குவதன் மூலம், அவர்கள் நிதி பற்றிய பிரச்சனைகளில் சிக்காமல் தொழில் செய்ய முடியும்.
இந்தத் திட்டம், பெண் தொழில்முனைவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் வணிகம் வளர்ச்சியடைந்து சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
SBI Stree Shakti Yojana திட்டத்தின் நன்மைகள்
SBI Stree Shakti Yojana திட்டத்தின் முக்கிய நன்மைகள் பல உள்ளன. முதலாவது, இந்தத் திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது.
கடன் தொகை, பெண்ணின் தொழில்முறை நிலை மற்றும் வணிக வகையைப் பொறுத்து மாறும். இதனால், புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களும், ஏற்கனவே இயங்கும் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் பெண்களும் இதில் பயனடையலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் திருப்பிச் செலுத்தும் காலம் நெகிழ்வானதாகவும், நிர்வகிக்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், பெண்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். குறிப்பாக, பெண்கள் தொழில் தொடங்குவதன் மூலம், உள்ளூர் அளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி சமூக பொருளாதார வளர்ச்சியும் உயரும்.
Read also : Vishwakarma Yojana – கைவினைக் கலைஞர்களுக்கான ஆதாரம்!
கடன் தொகை விவரங்கள்
ஸ்த்ரீ சக்தி யோஜனையின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
- சில்லறை வணிகத்திற்கான கடன்: ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை.
- வணிக நிறுவனங்களுக்கான கடன்: ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை.
- தொழில் வல்லுநர்களுக்கான கடன்: ரூ. 50,000 முதல் ரூ. 25 லட்சம் வரை.
- சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்: ரூ. 50,000 முதல் ரூ. 25 லட்சம் வரை.
குறிப்பு: ரூ.10 லட்சம் வரை கடனுக்கு எந்தவிதப் பிணையமும் தேவையில்லை.
வட்டி விகிதம்
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் பொருந்தும். ஆனால், ரூ. 2 லட்சம் க்கு மேல் கடன் பெறும் பெண்களுக்கு தற்போதைய வட்டியில் 0.5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், பெண்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல், கடன் செலுத்தும் பொறுப்பை எளிதாக நிர்வகிக்க முடியும்.
விண்ணப்பதாரரின் தகுதி
Stree Shakti Yojana திட்டத்தின் கீழ் கடன் பெற பெண்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்.
- பெண்கள் மட்டுமே நடத்தும் நிறுவனத்தில் குறைந்தது 50% பங்குகள் பெண்களிடம் இருக்க வேண்டும்.
- சில்லறை விற்பனை, உற்பத்தி, சேவை தொடர்பான வணிகத்தில் ஈடுபட்ட பெண்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
- மருத்துவர்கள், அழகுக்கலை நிபுணர்கள், கட்டிடக் கலைஞர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் இந்தத் திட்டத்தில் பங்குபெறலாம்.
- வணிகம் MSME (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) பிரிவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள், அரசு அமைப்புகள் நடத்தும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களில் (EDP) பங்கேற்றிருக்க வேண்டும்.
Read also : UPSC படிப்பவர்களுக்கு மாதம் ரூ. 7500 வழங்கும் “நான் முதல்வன்” திட்டம்!
தேவையான ஆவணங்கள்
Stree Shakti Yojana திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற பெண்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- ஆதார் அட்டை.
- பான் கார்டு.
- மின்சார ரசீது / சொத்து வரி ரசீது / பாஸ்போர்ட்.
- ரேஷன் கார்டு.
- சுயமாக எழுதப்பட்ட விரிவான திட்ட அறிக்கை.
- கடந்த 6 – 12 மாதங்களுக்கான வங்கி அறிக்கை.
- வருமானச் சான்றிதழ்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- வாடகை ஒப்பந்தம் (நிறுவனம் வாடகைக்கு இருந்தால்).
விண்ணப்பிக்கும் முறை
பெண் தொழில்முனைவோர்கள், அருகிலுள்ள SBI வங்கி கிளைக்கு நேரில் சென்று, அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு, வங்கி ஊழியரிடம் ஸ்த்ரீ சக்தி யோஜனாக்கான விண்ணப்பத்தை விரும்புகிறீர்கள் என்று தெரிவித்தால், விண்ணப்பப் படிவத்தை வழங்குவார்கள்.
அதைப் பிழையில்லாமல் பூர்த்தி செய்து, வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். அனைத்து தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின் கடன் ஒப்புதல் வழங்கப்படும் மற்றும் கடன் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
Read also : முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!
SBI Stree Shakti Yojana – FAQs
பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்து, அவர்களுக்குக் குறைந்த வட்டியில் நிதி உதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ரூ. 2 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் பெண்களுக்கு நடைமுறையில் உள்ள வட்டியில் 0.5% தள்ளுபடி அளிக்கப்படும்.
Key Insights & Best Takeaways
The SBI Stree Shakti Yojana is a collateral-free, low-interest loan scheme launched by the SBI and the Central Government in 2000 to empower women entrepreneurs by providing financial aid up to ₹25 Lakh. The key takeaway is the benefit of a 0.5% interest rebate on loans over ₹2 Lakh and no collateral required for loans up to ₹10 Lakh, helping women start or expand businesses across manufacturing, service, and trading sectors.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox















