- பளபளப்பான சருமம் : இன்றைய காலகட்டத்தில் தோல்களைப் பராமரிப்பதற்குப் பல காஸ்மெட்டிக் பொருட்கள் வந்துவிட்டன. ஆனால், விலை உயர்வின் காரணமாக பலரால் இந்தப் பொருட்களை வாங்க முடிவதில்லை. அது மட்டுமில்லாமல், சிலர் தாங்கள் தோலின் தன்மையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், முகத்திற்கான கிரீம்களைப் போட்டுக் கொண்டு, அதில் இருக்கும் ரசாயனத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
- ஆனால், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம் முகத்தைப் பாதுகாப்பாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆம், சருமத்தைப் பாதுகாப்பாகவும், இயற்கையாகவும் பராமரிப்பதற்குப் பல வகையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
- இதைப் பயன்படுத்தி நீங்கள் அதிக செலவு இல்லாமல் நிமிடத்தில் பளபளப்பாகவும், ஆரோக்கியமான சருமத்தையும் பெற முடியும். சுத்தமான மற்றும் அழகான தோலை விரும்பும் அனைவருக்கும் இந்த வீட்டு வைத்தியங்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றை உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்க முடியும்.
- இவை உங்களின் சருமப் பிரச்சனைகளை மாற்றி, உங்கள் தோலை அதிக பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பதிவில் உங்கள் சருமத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு 5 எளிமையான மற்றும் பயனுள்ள இயற்கை வீட்டு வைத்தியங்களைப் பற்றியும், அவற்றை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
இதில்,
- சிறப்பம்சங்கள்
- எப்படிப் பயன்படுத்துவது
- யாருக்குப் பயனளிக்கும்
- இயற்கையாக ஒளிரும் சருமத்திற்கான சிறந்த டிப்ஸ்
- உங்கள் சருமத்திற்கான சிறந்த தீர்வு எது
போன்ற முக்கிய தகவல்களை இணைத்துள்ளோம் படித்து பயன்பெறுங்கள் நண்பர்களே..
பளபளப்பான சருமம் – 5 Simple Kitchen Tips!
Honey & Lemon Face Pack
1.தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்
இது சருமத்திற்கு உடனடி பளபளப்பைத் தரும் மிகச் சிறந்த இயற்கை வைத்தியமாகும். இந்த மாஸ்க் சருமத்தை ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். மேலும், இதில் எந்த ஒரு கெமிக்கல்களும் கிடையாது. இதனால், உங்களின் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்
இயற்கை மாய்ஸ்டுரைசர்
- தேன் என்பது ஒரு இயற்கை மாய்ஸ்டுரைசர் (Moisturizer) ஆகும். இது உங்கள் சருமத்திற்கு நன்கு ஈரப்பதத்தை அளித்து, சருமத்தைக் காக்கும்.
- தேனில் உள்ள “பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள்”, சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. இது கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளுக்கு எதிரான ஒரு நல்ல பொருளாகும்.
பிரகாசமான சருமம்
- எலுமிச்சை என்பது வைட்டமின் – சி (Vitamin – C) நிறைந்துள்ள ஒரு சிறந்த பொருளாகும். இது சருமத்தைப் பிரகாசமாக்கி, அதன் தரத்தை மேம்படுத்தும்.
- எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் (Citric acid) கரும்புள்ளிகளைப் குறைக்கும் பண்பைக் கொண்டுள்ளது. அதனால், இது உங்கள் சருமத்தைப் பிரகாசமாகக் காட்டும்.
எப்படிப் பயன்படுத்துவது?
- முதலில், 1 தேக்கரண்டி தேனை எடுத்து, அதனுடன் 1/2 தேக்கரண்டி புதிய எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, எலுமிச்சை சாறு புதியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், இதில் அதிகமாக “வைட்டமின் – சி (Vitamin – C) மற்றும் சிறந்த சிட்ரிக் அமிலம் (Citric acid)” இருக்கும். இது சருமத்திற்குப் பிரகாசத்தைத் தரும்.
- இந்த 2 பொருட்களையும் சரியாகக் கலந்து ஒரு பேஸ்ட் பதத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
- இந்தக் கலவையை உங்கள் முகத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். முகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமமாகத் தடவுவது முக்கியமாகும்.
- இந்த மாஸ்கை 15 நிமிடங்கள் வைத்து, அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள்.
- சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, இந்த மாஸ்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு உடனடி பளபளப்பு கிடைக்கும்.
மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!
யாருக்குப் பயனளிக்கும்?
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும், கரும்புள்ளிகள் அதிகமாக உள்ளவர்களுக்கும் இந்த மாஸ்க் ஒரு சிறந்த முறையாக இருக்கும்.
Aloe Vera Gel Face Pack for Glowing Skin
2.கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் என்பது இயற்கையாகவே தோல் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ள பொருளாகும்.இது உங்களின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சிறப்பம்சங்கள்
சேதமடைந்த சருமத்தைக் குணப்படுத்துதல்
- கற்றாழையில் இயற்கையாகவே குளிர்ச்சி தரும் தன்மை உள்ளதால், இது சருமத்தில் உள்ள எரிச்சல், சிவப்புத் தன்மை போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
- சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்தால் சன்பர்ன் (Sunburn) ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது, கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவிக் கொண்டால் அது குளிர்ச்சியையும், ஆறுதலையும் தரும்.
முகப்பருவை குறைத்தல்
- முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் புண்களைக் கற்றாழை ஜெல் குறைக்கிறது.
- இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (Anti-inflammatory properties) முகப்பருவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
சருமத்தை ஈரப்பதம் ஆக்குதல்
- கற்றாழை ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசராக (Moisturizer) செயல்படுகிறது.
- இது எந்தவிதமான ரசாயனங்களும் இல்லாமல் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
எப்படிப் பயன்படுத்துவது?
- முதலில் ஒரு புதிய கற்றாழை இலையை எடுத்து, அதன் மேல்புறத்தை வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கரண்டியால் அதன் மிதமான ஜெல்லி போன்ற பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கிண்ணத்தில் சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
- பின்பு, கற்றாழை ஜெல்லை மெதுவாக உங்கள் முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். கண்கள் மற்றும் வாயைத் தவிர்த்து, மற்ற இடங்களில் மெல்லியதாக அப்ளை செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்தில் நன்றாக ஊடுருவிச் செயல்பட உதவும்.
- கற்றாழை ஜெல்லை அப்ளை செய்துவிட்டு, இரவு முழுவதும் உங்கள் முகத்தில் வைத்திருக்கலாம். ஏனென்றால், இதில் இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை உள்ளது. அதனால், இரவு நேரத்தில் உங்கள் சருமத்தைக் குணப்படுத்தி மிருதுவாக்கும்.
- அடுத்த நாள் காலையில் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
- சருமத்தில் நல்ல மாற்றங்களைப் பெறுவதற்கு இந்த முறையைத் தினமும் பின்பற்றலாம். இதன் மூலம் உங்கள் முகம் இயற்கையாகவே பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
போலி பாதாம்களை கண்டறிய டிப்ஸ் – எளிய வழிகள்!
யாருக்குப் பயனளிக்கும்?
முகப்பரு பாதிப்புக்கு உள்ளான சருமங்களில் இந்த கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
பளபளப்பான சருமம் – Turmeric & Yogurt Face Pack
3.மஞ்சள் மற்றும் தயிர் பேக்
இயற்கையான முறையில் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு மஞ்சள் மற்றும் தயிர் பேக் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது உங்கள் முகத்தின் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை சேர்ப்பதோடு, உங்கள் முகத்தைப் பிரகாசமாக்கும்.

சிறப்பம்சங்கள்
சரும பளபளப்பு
- மஞ்சளில் உள்ள இயற்கையான பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.
- இது சருமத்தின் நிறத்தை சமப்படுத்தி, சருமத்தைப் பளபளப்பாகச் செய்கிறது.
புதிய தோற்றம்
- தயிரில் “லாக்டிக் அமிலம் (Lactic acid) உள்ளது. இது இயற்கையாகவே இறந்த சரும செல்களை நீக்கி, புதிய மற்றும் மென்மையான தோற்றத்தை அளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
- இதனால், உங்களின் சருமம் சீராகவும், பளபளப்பாகவும் மாறும். அது மட்டுமில்லாமல், தயிர் உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி அதை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
- 1/2 டீஸ்பூன் மஞ்சளுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள். ஒரு சிறிய பாத்திரத்தில் திடமாக இல்லாமல் க்ரீமி பதத்தில் கலந்து கொள்ளுங்கள்.
- பின்பு, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் மெல்லியதாக அப்ளை செய்து கொள்ளுங்கள். இந்தப் பேக்கைப் போட்ட பிறகு, 15 – 20 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும்.
- 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் குளிர்ந்த நீரில் மெதுவாகக் கழுவி விடுங்கள். தேவைப்பட்டால், மென்மையான துணியிலும் துடைக்கலாம்.
- உங்கள் சருமம் இயற்கையாகப் பிரகாசிப்பதற்கு வாரத்திற்கு 2 முறை இந்தப் பேக்கைப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தி வரும்போது, முகம் சீராகவும், பளபளப்பாகவும் மாறும்.
உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? சிறந்த வழி-NMES!
யாருக்குப் பயனளிக்கும்?
சீரற்ற சரும நிறம் உள்ளவர்களும், கருவளையங்கள் உள்ளவர்களும் இந்தப் பேக்கைப் பயன்படுத்தி வரும்போது, இவையெல்லாம் சரியாகும்.
Cucumber & Rose Water Toner
4.வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் டோனர்:
வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டிலும் சருமத்திற்கு நன்மை தரும் இயற்கை மூலப்பொருட்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், இது முகத்தில் உள்ள வீக்கத்தையும், எரிச்சலையும் குறைக்க உதவுகிறது. மேலும், ரோஸ் வாட்டர் முகத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தையும் மென்மையையும் அளிக்கிறது.

சிறப்பம்சங்கள்
புத்துணர்ச்சி
- வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. அதனால், இது முகத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
- மேலும், இது முகத்தில் ஏற்படும் சிவப்புத் தன்மை மற்றும் எரிச்சலைக் குறைத்து புத்துணர்ச்சியை அளிக்கிறது.
இயற்கையான பளபளப்பு
- ரோஸ் வாட்டர், தோலின் பிஹெச் (pH) நிலையை சரி செய்ய உதவுவதோடு, நம் முகத்தை மென்மையாக்குகிறது.
- இது முகத்தில் கூடுதல் எண்ணெய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி, இயற்கையான முறையில் பளபளப்பை வழங்குகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
- ஒரு சிறிய வெள்ளரிக்காயை அரைத்து, அதன் சாறை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
- அதில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒரு கிளீன் ஸ்ப்ரே பாட்டிலில் (Spray bottle) இந்தக் கலவையை ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.
- முகத்தைக் கழுவிய பிறகு, இந்த டோனரை முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளலாம். இல்லையென்றால், ஒரு காட்டனை (Cotton) வைத்து மெதுவாக தடவிக் கொள்ளலாம்.
- இதைத் தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் பயன்படுத்தலாம்.
Successful SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்!
யாருக்குப் பயனளிக்கும்?
எண்ணெய்ப் பசை கொண்ட சருமம் மற்றும் உணர்த்திறன் (Sensitivity) வாய்ந்த சருமத்திற்கு இந்த டோனர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பளபளப்பான சருமம் – Coconut Oil Massage
5.தேங்காய் எண்ணெய் மசாஜ்:
தேங்காய் எண்ணெய் என்பது சருமத்திற்குப் பயன் தரும் இயற்கை நிவாரணமாகும். இது தோலுக்கு ஆழமாக ஊட்டமளித்து, தேவையான ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது. மேலும், இது வறண்ட தோலை மென்மையாகவும் ,பளபளப்பாகவும் மாற்றும் தன்மையைக் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
இளமையாக இருக்க
- தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே ஆக்சிஜனேற்றிகள் (Antioxidants) நிறைந்துள்ளன.
- இது தோலை சுருங்க விடாமல் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
கொழுப்பு அமிலங்கள் (Fatty acids)
இதில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் (Fatty acids) இருப்பதால் முகத்தை ஈரப்பதம் ஆக்கி, வறண்ட தோலைக் குணப்படுத்த உதவுகிறது.
ஆழமான ஊட்டச்சத்து அளித்தல்
இது முகத்தின் உட்புறம் வரை சென்று ஊட்டம் அளித்து, சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.
சருமத்தை மென்மையாக்குதல்
இது வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தைப் பளபளப்பாக மாற்றுகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
- உங்கள் உள்ளங்கையில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய் தூய்மையாகவும், ரசாயனம் இல்லாத எண்ணையாகவும் இருக்க வேண்டும்.
- எண்ணெயை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது முகத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால், எண்ணெயை இரவு முழுவதும் வைத்துவிட்டு காலை நேரத்தில் முகத்தை சுத்தமாகக் கழுவலாம்.
- உங்களுக்கு எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள சருமமாக இருந்தால், 30 நிமிடங்களுக்குப் பிறகு மிதமான கிளன்சர் (Face Wash) கொண்டு முகத்தைக் கழுவலாம்.
- உங்களுக்கு மென்மையான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டுமென்றால், ஒவ்வொரு இரவும் இதைச் செய்யலாம்.
Goji Berries in Tamil – மருத்துவ உலகில் ஏற்படும் அற்புதம்!
யாருக்குப் பயனளிக்கும்?
வறண்ட மற்றும் கரடு முரடான சருமத்திற்கும், குளிர் காலத்தில் தோல் பராமரிப்பிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
இயற்கையாக ஒளிரும் பளபளப்பான சருமம் பெற சிறந்த டிப்ஸ்
- பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு வெளிப்புற பராமரிப்பைத் தாண்டி, உட்புற பராமரிப்பும் முக்கியமாகும்.
- சரியான உணவு, நீரேற்றம் (Hydration), தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை சரியாக கடைபிடிப்பதன் மூலம் உங்கள் சருமத்தின் இயற்கையான அழகு வெளிப்படும்.
நீரேற்றமாக இருத்தல் (Staying hydrated)
- தினமும் குறைந்தது 2 – 3 தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.
- ஏனென்றால், இது உங்களின் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி, உடலை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
- நீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
ஆரோக்கியமான உணவு
- உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து (Protein) நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- வெள்ளரிக்காய், கீரைகள், கேரட், மாதுளை, பப்பாளி போன்றவை சருமத்திற்கு மிகுந்த ஊட்டச்சத்தை அளிக்கும்.
- ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்ப்பது நல்லதாகும். ஏனென்றால், அவை முகத்தை வறட்சி அடையச் செய்வதோடு, முகப்பருவை ஏற்படுத்தக் கூடும்.
போதுமான தூக்கம்
- தினமும் 7 – 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும். ஏனென்றால், தூக்கம் சருமத்தைப் புதுப்பிப்பதோடு, கண்களைச் சுற்றி வரும் கரு வளையங்களைத் தடுக்கும்.
- தூக்கம் இல்லாமல் இருப்பதால், முகம் சோர்வில் இருப்பது போல் தோற்றமளிக்கச் செய்யும்.
இந்தியப் பங்குச் சந்தை 2025 – Stock Market Trends & Tips!
Exercise and Yoga for Glowing Skin
பளபளப்பான சருமம் பெற உடற்பயிற்சி மற்றும் யோகா

- தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா அல்லது எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்வது நல்லதாகும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தைப் பளபளப்பாகச் செய்யும்.
- உடற்பயிற்சியால் வியர்வை வெளியேறுவதன் மூலம், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, முகம் பிரகாசமாகக் காட்சி அளிக்கும்.
உங்கள் சருமத்திற்கான சிறந்த தீர்வைத் தேர்வு செய்யுங்கள்
- பளபளப்பான சருமம் பெற மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு விலை உயர்ந்த அழகு சிகிச்சை பொருட்கள்தான் வேண்டும் என்பது அவசியம் இல்லை. உங்கள் சமையலறையில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே எளிதான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களைச் செய்து கொள்ளலாம்.
- இந்தப் பதிவில் கூறியுள்ள அனைத்து வழிமுறைகளும் அனைத்து தோல்வகைகளுக்கும் ஏற்றவைகளாக உள்ளன. அவை சருமத்தை ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் மாற்ற உதவும்.
- மேலும், இந்தப் பொருட்கள் ரசாயனமில்லாமல் வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடியவை ஆகும். இவற்றில் உங்கள் தோலுக்கு எது மிகவும் பொருத்தமாக இருப்பது என்பதைத் தேர்வு செய்து தொடங்குங்கள்.
- தொடர்ந்து பயன்படுத்தினால் சிற மாற்றங்களை நீங்கள் உணரலாம். வெளிப்புறப் பராமரிப்பைத் தாண்டி, உட்புற பராமரிப்பும் மிகவும் அவசியமாகும்.
- தினமும் போதுமான தண்ணீரைக் குடிப்பது, ஆரோக்கியமான உணவு உண்பது, போதுமான தூக்கம் பெறுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பளபளப்பான சருமம் பெற : உங்களுக்கு எந்தத் தீர்வு மிகவும் பிடித்தது என்பதை எங்களுக்குக் கருத்துகளில் தெரியப்படுத்துங்கள்!
இயற்கை அழகு குறிப்புகள் & வீட்டில் தயாரிக்கக்கூடிய சரும பராமரிப்பு வழிகள்: Healthline
ஆயுர்வேத சரும பராமரிப்பு வழிகாட்டி – தேசிய ஆயுஷ் ஆயுர்வேத தளம்
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways
- Want naturally glowing skin? Simple kitchen ingredients can help achieve clear and radiant skin.
- Honey and Lemon Face Pack helps in brightening skin and reducing dark spots naturally.
- Aloe Vera Gel soothes the skin, prevents acne, and keeps it hydrated.
- Turmeric and Yogurt Face Pack has anti-inflammatory properties for healthy skin.
- Cucumber and Rose Water Toner refreshes the skin and reduces puffiness.
- Coconut Oil Massage deeply nourishes and gives long-lasting glow to the skin.
- Final Tip: Regular skin care using natural ingredients improves skin texture and enhances natural radiance.