• Home
  • அரசியல்
  • 2026 தேர்தல் வியூகம்! எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு?

2026 தேர்தல் வியூகம்! எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு?

2026 தேர்தல் வியூகம் – எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

2026 தேர்தல் வியூகம் : ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த இவிகேஎஸ். இளங்கோவனின் மறைவுக்குப் பிறகு, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த முறை கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திமுக போட்டியிட்ட நிலையில், இந்த முறை திமுக நேரடியாகக் களமிறங்க உள்ளதாகத் தெரிவித்தது.

திமுக-விற்கு அதிகார பலமும், பண பலமும் இருப்பதால் இந்தத் தேர்தல் நியாயமாக நடக்காது என்று எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்த நிலையில், இவர்களை ஆதரிக்கும் விதமாக தேமுதிக கட்சியும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது.

2026 தேர்தல் வியூகம் – பழனிச்சாமி உத்தரவு

2019-ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலிருந்து அதிமுக தோல்வியையே சந்தித்து வருகின்றது.

வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக அதிமுக நிர்வாகிகளைத் துவண்டு விட வைக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டுதான் தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அறிந்துகொள்ளுங்கள் - பரந்தூரிலிருந்து மக்கள் சந்திப்பு! தயாராகும் விஜய்! பரந்தூர் மக்கள் சந்திப்பு Vijay Public Meeting Preparation

இந்நிலையில் திமுக கட்சியும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது.இதற்கிடையே, சென்னையில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் வெளியாகியுள்ளன.

2026 தேர்தல் வியூகம் – ஒரு நாளைக்கு 3 தொகுதி

பொங்கலுக்குப் பிறகு ஒரு நாளைக்கு 3 தொகுதிகள் விகிதம் அனைத்துத் தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்யப்போவதாகவும், சுற்றுப் பயணத்தைக் கோவையிலிருந்து தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து வெளியில் பேசினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், 27 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை மாணவரணியில் சேர்க்க வேண்டும் என்றும், 9 பேர் கொண்ட யூத் கமிட்டியை விரைவாக அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மகளிர் கிரிக்கெட் 2025 – இலங்கை அணியின் New ODI list! இலங்கை மகளிர் ஒடிஐ அணியின் பட்டியல் | Sri Lanka Women’s ODI Cricket Squad 2025

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • EPS (Edappadi Palaniswami) has announced new strategies for the 2026 Tamil Nadu elections.
  • Focus on AIADMK’s revamped organizational structure and field plans.
  • Key orders issued by EPS to party workers for early preparation.
  • Strong emphasis on grassroots-level mobilization and alliance talks.
  • 2026 elections expected to reshape the political dynamics of Tamil Nadu.

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *