திருவாரூர் மாவட்ட செய்திகள்

1. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடல்: கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும், உற்சாக ஊக்கத்தையும் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட செய்திகள்

2. கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி:  பள்ளியில் மாணவிகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்ட செய்திகள்

3. ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நாற்றாங்கால் ஆய்வு: கூடுதல் வட்டார நாற்றாங்கால்: கோட்டூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டார நாற்றாங்கங்காலை நேரில் பார்வையிட்ட ஆட்சியர், அங்குள்ள மரக்கன்றுகளின் பராமரிப்பு முறை குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார்.

திருவாரூர் மாவட்ட செய்திகள்

4. நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் ஆய்வு: ஆதிச்சபுரம் நியாய விலைக் கடை: கோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்ட செய்திகளை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…