உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் : மாறிவிட்ட நவீன வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள், பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. செயற்கை முறைகளைத் தவிர்த்து, உங்கள் சமையலறையில் உள்ள இயற்கைப் பொருட்களைக் கொண்டே எடையைக் குறைப்பதற்கான 5 எளிய வழிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ்
வெந்தயம்

வெந்தயம் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒரு அஞ்சறைப் பெட்டி பொருளாகும். இதை நாம் தினசரி உணவில் உட்கொண்டு வருகிறோம். ஆனால், இதில் உடல் எடையைக் குறைப்பதற்கான அபூர்வ சக்தி உள்ளது.
வெந்தயத்தின் பயன்கள்:
- வெந்தயம் உடலின் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, உடலில் சேமிக்கப்படும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
- இது உடலின் இன்சுலின் (Insulin) நிலையைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- இது மலச்சிக்கலைப் போக்கி, செரிமானத்தை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.
- வயிறு பெரிதாகிக் காணப்படுவதைக் குறைக்கும் (Bloating).
- இது உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
எப்படிப் பயன்படுத்துவது?
- இரவு நேரத்தில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் நீரில் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகவும்.
- தொடர்ந்து 2-3 மாதங்கள் இந்த முறையைப் பின்பற்றி வந்தால், எடை குறைவது கண்டிப்பாகத் தெரியும்.
வெந்தயம் சாப்பிடுவதற்கு சில வழிமுறைகள்:
- வெந்தயத்துடன் தயிரைக் கலந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கும்.
- வெந்தயத்தைப் பொடியாக அரைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்
உடல் கொழுப்பைக் கரைக்கும் சிறந்த மருந்து
எலுமிச்சை மற்றும் தேனில் இயற்கையாகவே கொழுப்பைக் கரைக்கும் தன்மை உள்ளது.
எலுமிச்சை:
- எலுமிச்சையில் வைட்டமின் – சி (Vitamin – C) மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் (Antioxidants) உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றம் அதிகரிப்பதால், உடலில் உள்ள கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகிறது.
- எலுமிச்சை சாற்றில் உள்ள பெக்டின் (Pectin) என்ற நார்ச்சத்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், உணவைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க முடியும்.
தேன் எடையைக் குறைக்க எப்படி உதவுகிறது:
- தேன் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரிக்க உதவுகிறது.
- இதனால் உணவு எளிதாக ஜீரணமாகி, கழிவுகள் வெளியேறுகிறது.
- தேன் உடலின் நச்சுக்களை (Toxins) வெளியேற்றி, ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவுகிறது.
- தேன் உணவுக்கு இடையில் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்துகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
- உடல் கொழுப்பைக் கரைத்து எடையைக் குறைக்க “தேன் மற்றும் எலுமிச்சை” மிகச் சிறந்த இயற்கை மருத்துவ முறையாகும்.
- இதைச் சரியாக பயன்படுத்தினால், உடலில் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
எப்படித் தயாரிப்பது?
- 1 கப் சூடான அல்லது வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும்.
- அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
- பின்னர், 1 தேக்கரண்டி தூய தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இதைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- இந்த முறையைத் தினமும் தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதைக் காண முடியும்.
மேலும் சில வழிகள்:
- எலுமிச்சை சாறை ஊறுகாயாக சேர்த்து உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
- தேனுடன் சுக்கு பொடி கலந்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
Latest Tamil Health Tips (23.12.2025)
| தலைப்பு | முழு விவரம் |
|---|---|
| மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்! | Click here… |
| உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினைகள் | Click here… |
| 6 மாத குழந்தைக்கு திட உணவு – முழு வழிகாட்டி! | Click here… |
| முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்! | Click here… |
கறிவேப்பிலை

கொழுப்பைக் குறைக்கும் இயற்கை மருந்து
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில் பல மருத்துவ சிறப்பம்சங்கள் உள்ளன.
கறிவேப்பிலையின் பயன்கள்:
- கறிவேப்பிலை, உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
- இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு (Diabetes) ஏற்படாமல் தடுக்கிறது.
- மேலும், இது உடலில் உள்ள செரிமானப் பிரச்சனைகளைத் தீர்த்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
- இது உடலின் நச்சுக்களை (Toxins) வெளியேற்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எப்படிப் பயன்படுத்துவது?
- காலையில் வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடலாம்.
- கறிவேப்பிலைப் பொடியைத் தயார் செய்து உணவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
சுக்கு

உடல் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரிக்கும்
சுக்கின் மருத்துவப் பயன்கள்:
- இது உடல் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
- வயிறு பெரிதாக இருப்பதைக் குறைக்கிறது (Bloating).
- இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும்.
- இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.
- இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- இது உடலில் உள்ள நச்சுச்சத்துக்களை வெளியேற்றும்.
- வயிற்றுப் பகுதியில் அதிகமாக சேரும் கொழுப்பைக் குறைக்கும்.
எப்படிப் பயன்படுத்துவது?
- 1 கப் வெந்நீரில் 1 தேக்கரண்டி சுக்குப் பொடியைச் சேர்த்து தினமும் குடிக்கலாம்.
- சுக்கைத் தேநீராக (Ginger Tea) தயார் செய்தும் குடிக்கலாம்.
பச்சைத் தேநீர் (Green tea)

உடல் கொழுப்பைக் கரைக்கும் இயற்கை மூலிகை
பச்சைத் தேநீரின் நன்மைகள்:
- உடல் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது.
- சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, உடல் பருமனைக் குறைக்கும்.
- மூளை செயல்பாட்டை மேம்படுத்தி, நரம்புப் பிரச்சனைகளைக் குறைக்கும்.
- உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்ஸிடென்டுகளை (Antioxidants) வழங்கும்.
எப்படிப் பயன்படுத்துவது?
- ஒரு டீ பேக்கை அல்லது 1 தேக்கரண்டி பச்சைத் தேயிலைப் பொடியை 1 கப் சூடான நீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம்.
- இதை தினமும் 2-3 முறை குடிக்கலாம். இதன் மூலம் உடல் எடை குறையும்.
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – அட்டவணை
| முறை | பயன்கள் |
| வெந்தயம் | உடலின் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, கொழுப்பைக் கரைக்கும். |
| எலுமிச்சை & தேன் | நச்சுச்சத்துகளை நீக்கி, வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கும். |
| கறிவேப்பிலை | கொழுப்பைக் கரைத்து, நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. |
| சுக்கு (உலர்ந்த இஞ்சி) | செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்கும். |
| பச்சைத் தேநீர் (Green Tea) | உடலின் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, உடல் பருமனைக் குறைக்கும். |
கூடுதல் உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ்
உடல் எடையைக் குறைப்பதற்கு “சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நீர் பருகுதல்” போன்றவை முக்கியமானதாகும்.
இயற்கையான முறையில் எடையைக் குறைப்பதற்கு ஒரு சில கூடுதல் தகவல்கள் இதோ!
உடற்பயிற்சி
தினமும் உடல் இயக்கம் அவசியமாகும்
- உடற்பயிற்சி ஏன் முக்கியம்?உடற்பயிற்சியின் மூலம் உடலின் அதிகப்படியான கொழுப்பு கரைந்து, ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவுகிறது.
- தினமும் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
உடற்பயிற்சி எப்படி செய்யலாம்?
i) நடைப் பயிற்சி (Walking):
- தினமும் 30 – 45 நிமிடங்கள் நடப்பதால், உடலின் மெட்டபாலிசம் (Metabolism) அதிகரித்து, கொழுப்பு கரையும்.
- காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப் பயிற்சி செய்வது நல்லதாகும்.
ii) யோகா (Yoga):
- யோகா, உடலின் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, மனதிற்கும் உடலிற்கும் ஆரோக்கியத்தை வழங்கும்.
- குறிப்பாக, சூர்ய நமஸ்காரம், பத்மாசனம் (Padmasana) போன்ற யோகாசனங்கள் எடையைக் குறைக்க உதவுகின்றன.
iii) வீட்டில் செய்யக்கூடிய பயிற்சிகள்:
- வீட்டில் இருப்பவர்கள் “ஸ்குவாட், புஷ்-அப், பிளாங் (Plank)” போன்ற எளிய பயிற்சிகளை செய்யலாம்.
- தினமும் 15-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தண்ணீர் பருகுதல்
உடல் எடையைக் கட்டுப்படுத்தும் ஒரு எளிமையான வழி
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
- “தண்ணீர்” உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
- ஒரு நாளைக்கு 8 – 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- இது உடல் எடையைக் குறைக்கும் ஒரு சக்தி வாய்ந்த வழியாக செயல்படுகிறது.
தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
i) கொழுப்பைக் கரைக்கும்:
- தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் (Metabolism) அதிகரித்து, அதிகப்படியான கொழுப்பு உடலில் இருந்து வெளியேறும்.
- மேலும், இது வயிற்றை நிரப்பி பசியுணர்வைக் குறைக்கும். உணவிற்கு முன்பு 1 கிளாஸ் தண்ணீர் குடித்தால், அதிகமாக பசி இருக்காது.
ii) உடலின் கழிவுகளை வெளியேற்றும்:
- தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள டாக்ஸின்கள் (Toxins) வெளியேறும்.
- இதன் மூலம் உடல் எடை குறையும்.
iii) செரிமானத்தை மேம்படுத்துதல்:
- மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை நீக்கி ஆரோக்கியமான வாழ்க்கையைத் தரும்.
- தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1 கப் வெண்ணீர் குடிக்கலாம்.
- உணவிற்கு முன்பும், உணவிற்குப் பின்பும் சிறிதளவு தண்ணீர் பருகலாம்.
- உடற்பயிற்சியை முடித்த பிறகு சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – என்ன உணவுகளை சேர்க்கலாம்?
- உடல் எடையைக் குறைக்க சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- உணவில் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு இருந்தால், உடல் எடை அதிகரிக்கும்.
- எனவே, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
i) பழங்கள் (Fruits):
- தினமும் ஒன்று அல்லது இரண்டு பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.”
- ஆப்பிள், நாரந்தை, திராட்சை, அவகாடோ, பப்பாளி, குடைமிளகாய்” போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லதாகும்.
ii) காய்கறிகள் (Vegetables):
- அதிகமான நார்ச்சத்து (Fiber) மற்றும் விட்டமின் (Vitamins) நிறைந்த “பசலைக் கீரை, முட்டைக்கோசு, முருங்கைக்கீரை, வெங்காயம்” போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதாகும்.
iii) புரதச்சத்து (Protein) நிறைந்த உணவுகள்:
- “பருப்பு வகைகள், முட்டை, கோழி, மீன், பால், தயிர்” போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம்.நம்முடைய உணவில் அதிகப்படியான புரதம் (Protein) இருந்தால், அது நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவும்.
என்ன உணவுகளைக் குறைக்க வேண்டும்?
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – கீழே உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது:
i) எண்ணெய் மற்றும் மசாலா உணவுகள்:
- அதிக எண்ணெய், மசாலா, காரம், பொரித்த உணவுகளைக் குறைக்க வேண்டும்.இவை உடலில் அதிகப்படியான கொழுப்பை சேர்க்கும்.
ii) சர்க்கரை நிறைந்த உணவுகள்:
- அதிக சர்க்கரை, இனிப்புகள், சாக்லேட், பெப்சி, கோலா போன்ற குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
iii) ஜங்க் உணவுகள் (Junk Foods):
- பீட்சா, பர்கர், பிரெட், கேக், சமோசா, பஜ்ஜி, வடை போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.இது உடலில் தேவையற்ற கொழுப்பை அதிகமாக சேர்க்கும்.
குறிப்பு
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ்
- எடையைக் குறைக்க விரும்பினால், சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நீர் பருகுதல் ஆகியவற்றை இணைந்து கடைப்பிடிக்க வேண்டும்.
- ஒரு நாள், இரண்டு நாளில் உடல் எடை குறையாது. தொடர்ந்து 2-3 மாதங்கள் இந்த முறைகளை பின்பற்றினால், உடலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
- அதிகமாக டயட்டில் இருப்பதை விட, மிதமான அளவில் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு, உடற்பயிற்சியை (Exercise) அதிகரிப்பதன் மூலம் உடல் எடை குறையும்.
- உடல் எடையை குறைப்பதற்குப் பல வழிகள் இருந்தாலும், வேகமான முறையை தேர்ந்தெடுப்பதில் தான் நாம் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகிறோம்.
- ஆனால், அப்படிச் செய்வதன் மூலம் உடல்நிலை பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதனால், உடல் எடையைக் குறைப்பதற்கு குறைந்தது 2 – 3 மாதங்கள் நம் பழக்கவழக்கங்களை சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம், உடல் எடை குறைவது மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
(பின்குறிப்பு: உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – இவை அனைத்தும் தகவலின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பொதுவான செய்திகளாகும். மக்கள் அவரவர்களின் உடல் நிலைக்கு ஏற்றவாறு ஆலோசகர்களை அணுகி, இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது).
இந்த பதிவில்,
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – FAQs
1) உடல் எடை குறைய எலுமிச்சை மற்றும் தேனை எப்போது அருந்த வேண்டும்?
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
2) உடல் எடையைக் குறைக்க வெந்தயம் எப்படி உதவுகிறது?
வெந்தயம் உடலின் மெட்டபாலிசத்தை (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரித்து சேமிக்கப்படும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
3) உடல் எடையைக் குறைக்க தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Key Insights & Best Takeaways!
Discover 5 simple weight loss tips that are easy to follow and naturally effective. From using fenugreek seeds to drinking green tea, each method promotes fat burning and improves digestion. These natural remedies help maintain a healthy lifestyle without side effects. Perfect for those seeking easy weight loss solutions at home.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox











