ஜியோ பயனாளர்களுக்கு YouTube Premium : இந்தியாவில் பிரபல பிராட்பேண்ட் நிறுவனமான “ஜியோ” மக்களுக்குப் பயனுள்ள வகையில் பல சிறப்பம்சங்களுடன் கூடிய சேவைகளை வழங்கி வருகின்றது. இதன் மூலமாக மக்கள் பல வகைகளில் பயன்பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது ஜியோ நிறுவனம் ஒரு அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. தன்னுடைய ஜியோ ஃபைபர் (Jio Fiber) மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் (Jio Air Fiber) வாடிக்கையாளர்களுக்கு YouTube Premium சேவையை 2 ஆண்டுகள் இலவசமாக வழங்கி, அதன் பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட் பெய்டு சேவைகளின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த சலுகையானது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு யூ டியூப் வீடியோக்களை விளம்பரம் இல்லாமல் பின்புலத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கும், ஆஃப்லைனில் வீடியோக்களை பார்ப்பதற்கும் வசதிகளை வழங்கியுள்ளது.
ஜியோ பயனாளர்களுக்கு YouTube Premium சேவை
சிறப்பம்சங்கள்
1) விளம்பரம் இன்றி வீடியோக்கள்
யூ டியூபில் வீடியோக்கள் பார்ப்பதற்கு பெரும்பாலும் இடையூறாக இருப்பது விளம்பரங்கள்தான். இதனைத் தவிர்க்கும் வகையில், ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லாத அனுபவத்தைத் தந்து சரியான முறையில் மேம்படுத்தியுள்ளது. அதனால், யூ டியூப் வீடியோக்களை மக்கள் எளிதாகப் பார்க்க முடியும்.
OnePlus offer 2025 – ரூ.4500 வரை தள்ளுபடி!
2) பின்புலத்தில் வீடியோக்கள்
முன்பு பயனர்கள் மொபைலில் வீடியோ பார்க்கும் போது ஸ்கிரீன் டைம் முடிந்தாலும், மற்ற செயல்களில் ஈடுபட்டாலும் வீடியோக்கள் இயங்காது. ஆனால், தற்போது வந்துள்ள சலுகை மூலம் யூ டியூப் வீடியோக்கள் தொடர்ந்து இயக்கப்படும். இது பயனர்கள் பாடல்கள் அல்லது பாட்காஸ்டுகள் (Podcasts) கேட்பதற்கு உதவியாக இருக்கும்.
3) ஆஃப்லைனில் வீடியோக்கள்:
பயனர்கள் யூ டியூப் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து இணையதள வசதி இல்லாமல் ஆஃப்லைனில் பார்க்க முடியும். இந்த வசதி பயணிக்கும் போதும், குறைந்த இன்டர்நெட் இணைப்பில் இருக்கும் போதும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
4) யூ டியூப் மியூசிக்
YouTube Premium சேவையின் மூலம் யூ டியூப் மியூசிக் (YouTube Music) சேவையையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம், பயனர்கள் விளம்பரம் இல்லாமல் பாடல்களைக் கேட்டு, விரும்பியவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜியோவின் 2 வருடத் திட்டங்கள்
ஜியோ நிறுவனமானது தன்னுடைய ஜியோ ஃபைபர் (Jio Fiber) மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் (Jio Air Fiber) வாடிக்கையாளர்களுக்கு யூ டியூப் பிரிமியம் வசதியை 24 மாதங்கள் இலவசமாக வழங்கியுள்ளது. இதற்கான திட்டங்கள் மற்றும் அதன் விலை விவரங்கள் இதோ:
ஜியோ YouTube Premium இலவசம்
திட்டத்தின் பெயர் விலை
- i) ஜியோ ஃபைபர்/ஏர் ஃபைபர் ரூ. 888
- ii) ஜியோ ஃபைபர்/ஏர் ஃபைபர் ரூ. 1199
- iii) ஜியோ ஃபைபர்/ஏர் ஃபைபர் ரூ. 1499
- iv) ஜியோ ஃபைபர்/ஏர் ஃபைபர் ரூ. 2499
- v) ஜியோ ஃபைபர்/ஏர் ஃபைபர் ரூ. 3499
இந்தத் திட்டங்கள் முழுவதும் YouTube Premium சேவையை உடனே வழங்கி, பயனர்களுக்கு அதிக வசதிகளைத் தருகின்றது.
Also Checkout – தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு! IT Hub in Coimbatore?
ஜியோவின் நோக்கம்
ஜியோ நிறுவனம் தனது பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட் பெய்டு சேவைகளின் அனுபவத்தை மேம்படுத்த இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக வீடியோக்களை அதிகமாக பார்ப்பவர்களுக்கும், சிறந்த அனுபவத்திற்காக ஸ்மார்ட் டிவி, மொபைல் போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கும் மிகவும் வசதியாக இருக்கும்.
Quick English Recap – Key Insights & Best Takeaways
Key Insights:
- Jio users can now access YouTube Premium for free.
- This offer is a part of Jio’s special promotion for 2025.
- To avail of the offer, Jio users must follow a simple activation process.
- YouTube Premium features include ad-free content, background play, and YouTube Music access.
Best Takeaways:
- If you’re a Jio user, this is a great opportunity to enjoy YouTube Premium without any additional cost.
- The process to activate is simple and quick.
- Get uninterrupted content experience with YouTube Premium, including exclusive features for Jio customers.