மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயின் கீழ் இயங்கும் IRFC-யில் ரூ. 1.40 லட்சம் சம்பளம்!

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026 - IRFC ரயில்வேயில் ரூ. 1.40 லட்சம் சம்பளம்!

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026: இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் IRFC (Indian Railway Finance Corporation) நிறுவனத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு வேலையில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

தலைப்புவிவரம்
நிறுவனம்IRFC (Indian Railway Finance Corporation Limited).
பதவிகள்Assistant (NE5 Level) & Assistant Manager/Finance (E1 Level).
மொத்த காலியிடங்கள்23
சம்பளம்ரூ. 21,000 முதல் ரூ. 1,40,000 வரை.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி01.05.2026
  • Assistant (NE5 Level): மொத்தம் 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Assistant Manager (Finance – E1 Level): மொத்தம் 7 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து 23 காலியிடங்கள் உள்ளன.

  • Assistant: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B. Com பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன் CA (அல்லது) CMA இன்டர்மீடியட் (Intermediate) முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Manager (Finance): B.Com பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் மற்றும் முழுமையாக CA/CMA முடித்திருக்க வேண்டும். அல்லது, Finance பிரிவில் முழுநேர MBA / PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
  • அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (வயது வரம்பு 01.01.2026 அன்றைய தேதியின்படி கணக்கிடப்படும் ).
  • வயது தளர்வுகள்: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் , OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 ஆண்டுகள். அதிகபட்ச வயது வரம்பில் அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு.
  • Assistant பதவிக்கு: அடிப்படைச் சம்பளமாக ரூ. 21,000 முதல் ரூ. 74,000 வரை வழங்கப்படும். வருடத்திற்குச் சுமார் ரூ. 8 லட்சம் CTC ஆகக் கிடைக்கும்.
  • Assistant Manager பதவிக்கு: அடிப்படைச் சம்பளமாக ரூ. 40,000 முதல் ரூ. 1,40,000 வரை வழங்கப்படும். வருடத்திற்குச் சுமார் ரூ. 16 லட்சம் CTC ஆகக் கிடைக்கும்.

இந்த அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் இதர படிகள் (Allowances) வழங்கப்படும்.

  • கணினி வழித் தேர்வு (CBT): விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முதலில் எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசல் (Original) சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
  • நேர்காணல் (Interview): Assistant Manager (Finance) பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் நேர்காணல் நடைபெறும்.
  • மருத்துவப் பரிசோதனை (Medical Test): இறுதிக் கட்டமாக உடல்தகுதி மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.
  • இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடைபெறும். தவறான பதில்களுக்கு 1/4 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (Negative Marking).
  • பகுதி A (50 கேள்விகள்): கணிதம் (20), பொது அறிவு (10), ரீசனிங் (10), ரயில்வே மற்றும் IRFC பற்றிய அடிப்படை அறிவு (10) ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
  • பகுதி B (50 கேள்விகள்): விண்ணப்பிக்கும் துறை சார்ந்த பாடங்களான Corporate Accounting, Income Tax, Auditing, Financial Management, Banking போன்றவற்றிலிருந்து கேள்விகள் வரும்.
  • 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பிறந்த தேதியைச் சரிபார்க்க).
  • B.Com பட்டப்படிப்பு மற்றும் CA/CMA/MBA மதிப்பெண் மற்றும் பட்டச் சான்றிதழ்கள்.
  • சரியான படிவத்தில் உள்ள சாதிச் சான்றிதழ் (OBC-NCL/SC/ST/EWS).
  • ஏற்கனவே அரசுப் பணியில் இருந்தால் தடையில்லாச் சான்றிதழ் (NOC).
  • ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு (PAN).
  • பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட உங்கள் கையொப்பம் மற்றும் இடது கை கட்டைவிரல் ரேகை.
  • General / OBC-NCL / EWS பிரிவினருக்கு: ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
  • SC / ST / மாற்றுத்திறனாளிகள் (PwBD) / முன்னாள் ராணுவத்தினர் / திருநங்கைகள்: கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை (முற்றிலும் இலவசம்).
  • கட்டணத்தை ஆன்லைன் மூலம் (UPI / Credit Card / Net Banking) மட்டுமே செலுத்த வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி – 04.04.2026
  • விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி – 01.05.2026 (இரவு 23:45 மணி வரை).
  • கணினி வழித் தேர்வு (CBT) நடைபெறும் மாதம் (உத்தேசமாக): ஜூன் 2026.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளRead IRFC Job Notification Details
விண்ணப்பிக்கClick here to Apply
  • படி 1: முதலில், மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைக் கிளிக் செய்து, IRFC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • படி 2: புதிய பயனர்கள் “Register” பட்டனைக் க்ளிக் செய்து, உங்களின் பெயர், மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை உள்ளிட்டு, OTP மூலமாகப் பதிவு செய்து கொள்ளவும்.
  • படி 3: உங்களின் மொபைல் அல்லது இமெயிலுக்கு வந்த Login ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி மீண்டும் உள்ளே (Login) செல்லவும்.
  • படி 4: அப்ளிகேஷன் ஃபார்மில் உங்களின் கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பிழையின்றிச் சரியாக நிரப்பவும்.
  • படி 5: நோட்டிபிகேஷனில் குறிப்பிடப்பட்டுள்ள அளவில் உங்கள் புகைப்படம், கையொப்பம், கட்டைவிரல் ரேகை மற்றும் தேவையான சான்றிதழ்களை அப்லோட் (Upload) செய்யவும்.
  • படி 6: விவரங்களை ஒருமுறை சரிபார்த்த பின்பு, தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்தவும் (விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்குக் கட்டணம் செலுத்தும்படி வராது).
  • படி 8: இறுதியாக விண்ணப்பத்தை “Submit” செய்துவிட்டு, எதிர்காலத் தேவைக்காக அதைப் பிரிண்ட் (Print Out) எடுத்து வைத்துக் கொள்ளவும். இதைப் தபால் மூலம் அனுப்பத் தேவையில்லை.
1) IRFC வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

IRFC பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் கடைசி தேதி 01.05.2026 ஆகும்.

2) IRFC வேலைவாய்ப்பிற்கான கல்வித் தகுதி என்ன?

60% மதிப்பெண்களுடன் B. Com தேர்ச்சியோடு CA, CMA அல்லது முழுநேர MBA (Finance) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3) IRFC Assistant மற்றும் Assistant Manager பணிகளுக்கான சம்பளம் எவ்வளவு?

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ரூ. 21,000 முதல் ரூ. 1,40,000 வரை வழங்கப்படும்.

IRFC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026: மத்திய அரசின் கீழ் இயங்கும் IRFC நிறுவனம், நிதி மற்றும் வணிகவியல் பட்டதாரிகளுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய சிறப்பான வேலைவாய்ப்பை வழங்குகிறது. எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய வெளிப்படையான நடைமுறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களின் அனைத்து அசல் ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு, மே 1, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ரயில்வே துறையில் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள இளைஞர்களுக்கு இது ஒரு மாபெரும் பொன்னான வாய்ப்பாகும்.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top