நீரிழிவு நோய் உணவுமுறை – சிறந்த 7 நாள் திட்டம் 2025

நீரிழிவு நோய் - 7 நாள் உணவுத்திட்டம் | 7-Day Diet Plan for Diabetic Patients in Tamil

நீரிழிவு நோய் : இன்றைய உணவு முறையால் பலர் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோய் என்பது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு நிலையாகும்.

இன்சுலின் (Insulin) குறைபாடு அல்லது இன்சுலின் செயல்பாடு குறைவதால், இந்த சர்க்கரை நோய் உருவாகிறது.

இதற்கு உணவுப் பழக்கங்களும் காரணமாக இருக்கின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சரியான உணவை, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

இந்தப் பதிவில்,

  • நீரிழிவு நோய் என்றால் என்ன?
  • உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவம்.
  • நீரிழிவுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள்.
  • நீரிழிவுக்கான சிறந்த 7 நாள் உணவுத்திட்டம்.
  • FAQs.

ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பாப்போம்.

நீரிழிவு நோய் என்றால் என்ன?

நம்முடைய உடலில் இன்சுலின் (Insulin) என்ற ஹார்மோன் சரியாக செயல்படாவிட்டால், நீரிழிவு நோய் ஏற்படும்.

இந்த ஹார்மோன், சர்க்கரையை (Glucose) செல்களுக்குள் கொண்டு சென்று ஆற்றலாக (Energy) மாற்ற உதவுகிறது.

ஆனால், தேவையான அளவு இன்சுலின் உற்பத்தியாகாமல் இருந்தால், ரத்தத்தில் குளுக்கோஸ் தேங்கி இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நீரிழிவு நோய் உணவுமுறை முக்கியத்துவம்

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுமுறை முக்கியத்துவம் | Importance of Diet for Diabetic Patients in Tamil
நீரிழிவு நோயாளிகளுக்கான சரியான உணவுமுறை ஏன் முக்கியம்?

இரத்த சர்க்கரை அளவை சீராக்குதல் 

நீரிழிவு நோய் உணவுமுறை, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சீரான உணவுப் பழக்கம், உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதையும், உணவுக்கு முன் திடீரெனக் குறைவதையும் தடுக்கிறது.

சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க முடியும். 

நீரிழிவு நோய் சிக்கல்களைக் குறைத்தல்

நீண்ட காலத்திற்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது இதயம், சிறுநீரகம், கண்கள், நரம்புகள் போன்ற பல்வேறு உறுப்புகளைப்  பாதிக்கக் கூடும்.

சீரான உணவு முறை, இந்த சிக்கல்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், ஆரோக்கியம் மேம்பட்டு சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாக்க உதவுகின்றன. 

உடல் எடையைப் பராமரித்தல்

உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக அடி வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதால் இன்சுலின் உற்பத்தி குறையும்.

7 Days Diet Plan – உடல் எடை குறைக்க தமிழ் டிப்ஸ் 2025!  7 Days Diet Plan – உடல் எடை குறைக்க சிறந்த தமிழ் டிப்ஸ் 2025 | Weight Loss Tips in Tamil

எனவே, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது அவசியமாகும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். 

மருந்துகளின் தேவைகளைக் குறைத்தல்

உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால், இன்சுலின் அல்லது பிற மருந்துகளின் தேவைகளைக் குறைக்க முடியும். இது மருந்துகளின் பக்க விளைவுகளைத் தவிர்க்க உதவுகிறது. 

சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்தல் 

நீரிழிவு நோயாளிகள் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதங்கள் (Protein) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

உணவு நேரத்தை ஒழுங்குபடுத்துதல்

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உணவுகளை சாப்பிடுவது, இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. இதனால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

நீரிழிவு நோய் உணவுமுறைக்குத் தேவையான முக்கிய சத்துக்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் | Essential Nutrients for Diabetic Patients in Tamil
நீரிழிவு நோயாளிகள் தேவைப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள்

மாவுச்சத்து (Carbohydrates)

மாவுச்சத்து, இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கும். ஆனால், அனைத்து மாவுச்சத்துக்களும் ஒரே மாதிரியாக இருக்காது. முழு தானியங்கள், பருப்பு வகைகள், சில காய்கறிகளில் உள்ள சிக்கலான மாவுச்சத்து (Complex carbohydrates), மெதுவாக ஜீரணமாகி இரத்த சர்க்கரையைப் படிப்படியாக உயர்த்தும்.

வெள்ளை ரொட்டி, இனிப்பு பலகாரங்கள், குளிர்பானங்கள் போன்ற எளிய மாவுச்சத்து உணவுகள் (Simple carbohydrates), இரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்கும்.

எனவே சிக்கலான மாவுச்சத்து கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

புரதம் (Protein)

புரதம், திசு (Tissue) வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கிறது. இது ஆற்றலை அதிகரிப்பதோடு, தசைகளை சரிசெய்கிறது. மேலும், இது இரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்காது. மாவுச்சத்துடன் புரதத்தை சேர்த்து சாப்பிடுவது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

தளபதி 69 – ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய் புதிய லுக் தளபதி 69: ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய் புதிய Look | Vijay in New Look from Jananayagan Shooting Spot

கொழுப்புகள் (Fats)

கொழுப்புகள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும். ஆனால், சரியான கொழுப்புகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

கொட்டைகள், விதைகள், அவகேடோ மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (Mono unsaturated & Poly unsaturated fats) ஆகிய நல்ல கொழுப்புகளை எடுத்துக்கொள்வது நல்லது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் (Vitamins and Minerals)
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முக்கியமானவை. குறிப்பாக, குரோமியம் (Chromium), மெக்னீசியம் (Magnesium), வைட்டமின் – டி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் (Vitamin – D & B-complex) போன்ற சத்துக்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம்.

இந்த சத்துக்கள், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

நீரிழிவு நோய் – சிறந்த 7 நாள் உணவுமுறை திட்டம்

நீரிழிவை கட்டுப்படுத்த சிறந்த 7 நாள் உணவுத்திட்டம் | Best 7-Day Diet Plan to Control Diabetes in Tamil
நீரிழிவு கட்டுப்பாட்டுக்கான சிறந்த 7 நாள் உணவுமுறை திட்டம்
ஞாயிற்றுக்கிழமை

காலை உணவு (8:00 – 8:30 AM)
4 இட்லி, சாம்பார் 1/2 கப், பச்சை அல்லது தக்காளி சட்னி 1 தேக்கரண்டி. இட்லி மெதுவாக ஜீரணமாகி, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.

நடு-காலை சிற்றுண்டி (11:00 – 11:30 AM)
1 கப் பச்சைப் பயறு முளை கட்டியது. இது நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. இது இரத்த சர்க்கரையை சீராக வைக்கும்.

மதிய உணவு (2:00 – 2:30 PM)
3 சப்பாத்தி, 1/2 கப் சாலட், மீன் குழம்பு (100 கிராம் மீன்), 1/2 கப் முட்டைக்கோஸ் பொரியல். சப்பாத்தி மற்றும் மீன் புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை  வழங்கும்.

மாலை சிற்றுண்டி (4:00 – 4:30 PM)
1 பகுதி பழம் (வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற அதிக ஆற்றல் உள்ள பழங்களைத் தவிர்க்கவும்). குறைந்த சர்க்கரை உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

டயாலிசிஸ் உணவுமுறை 7நாள் வழிகாட்டி "Dialysis Diet 7 Days Plan in Tamil – Kidney Patient Meal Guide Image"

இரவு உணவு (8:00 – 8:30 PM)
2 சப்பாத்தி, 1/2 கப் தக்காளி பொரியல். சப்பாத்தி மற்றும் தக்காளி எளிதில் ஜீரணமாகி, இரவில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

திங்கட்கிழமை 

காலை உணவு (8:00 – 8:30 AM)
2 துண்டு பிரவுன் பிரெட் (Brown Bread), 1 துண்டு குறைந்த கொழுப்புள்ள சீஸ், 1 வேகவைத்த முட்டை, 1/2 கப் குறைந்த கொழுப்புள்ள பால். பிரவுன் பிரெட் நார்ச்சத்தையும் (Fiber), முட்டை புரதத்தையும் (Protein) மற்றும் பால் கால்சியத்தையும் (Calcium) வழங்குகிறது.

நடு-காலை சிற்றுண்டி (11:00 – 11:30 AM)
1 பகுதி பழம் (வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற அதிக ஆற்றல் உள்ள பழங்களைத் தவிர்க்கவும்). குறைந்த சர்க்கரை உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

மதிய உணவு (2:00 – 2:30 PM)
1 கப் காய்கறி புலாவ், 1/2 கப் சோயா சங்ஸ் குழம்பு, 1/2 கப் குறைந்த கொழுப்புள்ள தயிர். காய்கறி புலாவ் நார்ச்சத்தையும், சோயா புரதத்தையும் மற்றும் தயிர் கால்சியத்தையும் வழங்குகிறது.

மாலை சிற்றுண்டி (4:00 – 4:30 PM)
1 கப் லேசான தேநீர், 2 கோதுமை ரஸ்க். தேநீர் புத்துணர்ச்சி அளிக்கும். ரஸ்க் குறைந்த அளவு நார்ச்சத்து வழங்கும்.

இரவு உணவு (8:00 – 8:30 PM)
2 சப்பாத்தி, 1/2 கப் வெண்டைக்காய்ப் பொரியல். சப்பாத்தி மற்றும் வெண்டைக்காய் எளிதில் ஜீரணமாகி, இரவில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

செவ்வாய்க்கிழமை

காலை உணவு (8:00 – 8:30 AM)
3 சப்பாத்தி, 1/2 கப் உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு. சப்பாத்தி நார்ச்சத்து வழங்கும். உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி, புரதம் மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டை வழங்குகிறது.

நடு-காலை சிற்றுண்டி (11:00 – 11:30 AM)
1/2 கப் வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை. இது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும்.

பிரதமர் மோடியை சந்தித்த பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ்! தில்ஜித் டோசன்ஜ் பிரதமர் மோடி சந்திப்பு புகைப்படம் – 2025 செய்திகள்

மதிய உணவு (2:00 – 2:30 PM)
1 கப் அரிசி, 1/2 கப் பருப்பு, 1/2 கப் பாலக் கீரை பொரியல், 1/2 கப் குறைந்த கொழுப்புள்ள தயிர். அரிசி, பருப்பு, பாலக் கீரை மற்றும் தயிர் ஆகியவை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.

மாலை சிற்றுண்டி (4:00 – 4:30 PM)
1 பகுதி பழம் (வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற அதிக ஆற்றல் உள்ள பழங்களைத் தவிர்க்கவும்). குறைந்த சர்க்கரை உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

இரவு உணவு (8:00 – 8:30 PM)
1 கப் உடைத்த கோதுமை உப்புமா, 1/2 கப் பீன்ஸ் பொரியல். உடைத்த கோதுமை நார்ச்சத்துக்களை வழங்கும். பீன்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.

புதன்கிழமை

காலை உணவு (8:00 – 8:30 AM)
2 வெந்தய பராத்தா, 1 தேக்கரண்டி பச்சை சட்னி. வெந்தயம், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும். பராத்தா, நார்ச்சத்துக்களை வழங்கும்.

நடு-காலை சிற்றுண்டி (11:00 – 11:30 AM)
1 பகுதி பழம் (வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற அதிக ஆற்றல் உள்ள பழங்களைத் தவிர்க்கவும்). குறைந்த சர்க்கரை உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

மதிய உணவு (2:00 – 2:30 PM)
1 கப் அரிசி, 150 கிராம் சிக்கன் குழம்பு, 1 கப் வெள்ளரிக்காய் சாலட். அரிசி மற்றும் சிக்கன் புரதத்தை வழங்கும், வெள்ளரிக்காய் சாலட், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்களை வழங்கும்.

மாலை சிற்றுண்டி (4:00 – 4:30 PM)
1 கப் லேசான தேநீர், 1 கப் பிரவுன் அரிசி அவல் போஹா. தேநீர் புத்துணர்ச்சி அளிக்கும். பிரவுன் அரிசி அவல் போஹா நார்ச்சத்துக்களை வழங்கும்.

இரவு உணவு (8:00 – 8:30 PM)
3 கோதுமை தோசை, 1/2 கப் பாகற்காய் பொரியல். கோதுமை தோசை நார்ச்சத்து வழங்கும். பாகற்காய் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.

வியாழக்கிழமை

காலை உணவு (8:00 – 8:30 AM)
1 கப் காய்கறி ஓட்ஸ் உப்புமா, 1/2 கப் குறைந்த கொழுப்புள்ள பால். ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்தது. பால் கால்சியம் மற்றும் புரதச் சத்துக்களை வழங்கும்.

அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – நிதியமைச்சர் சந்திப்பு!  அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – Indian Post Digital Update 2025

நடு-காலை சிற்றுண்டி (11:00 – 11:30 AM)
1 கப் சாதாரண தயிர், பச்சைக் காய்கறிகள் அல்லது வறுத்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். தயிர், கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகளை (Probiotics) வழங்கும். காய்கறிகள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை வழங்கும்.

மதிய உணவு (2:00 – 2:30 PM)
1/2 கப் அரிசி, 2 சப்பாத்தி, 1/2 கப் கிட்னி பீன்ஸ் குழம்பு, 1/2 கப் புடலங்காய்ப் பொரியல். அரிசி மற்றும் சப்பாத்தி, கார்போஹைட்ரேட் வழங்கும். கிட்னி பீன்ஸ், புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்கும். புடலங்காய் வைட்டமின்களை வழங்கும்.

மாலை சிற்றுண்டி (4:00 – 4:30 PM)
1 கப் வேகவைத்த கொண்டைக்கடலை, 1 கப் லேசான தேநீர். கொண்டைக்கடலை, புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்கும், தேநீர் புத்துணர்ச்சி அளிக்கும்.

இரவு உணவு (8:00 – 8:30 PM)
2 சப்பாத்தி, 1/2 கப் கலவை காய்கறி குழம்பு. சப்பாத்தி மற்றும் காய்கறி குழம்பு ஆகியவை நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை வழங்கும்.

வெள்ளிக்கிழமை 

காலை உணவு (8:00 – 8:30 AM)
1 கப் கலவை காய்கறி போஹா, 1/2 கப் குறைந்த கொழுப்புள்ள பால். போஹா, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை வழங்கும். பால், கால்சியம் மற்றும் புரதச் சத்துக்களை வழங்கும்.

நடு-காலை சிற்றுண்டி (11:00 – 11:30 AM)
1 பகுதி பழம் (வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற அதிக ஆற்றல் உள்ள பழங்களைத் தவிர்க்கவும்). குறைந்த சர்க்கரை உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

மதிய உணவு (2:00 – 2:30 PM)
3 சப்பாத்தி, 1/2 கப் கொத்தவரங்காய்ப் பொரியல், 1/2 கப் மீன் குழம்பு (100 கிராம் மீன்). சப்பாத்தி, கார்போஹைட்ரேட் வழங்கும். கொத்தவரங்காய் பொரியல் மற்றும் மீன் குழம்பு புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்கும்.

மாலை சிற்றுண்டி (4:00 – 4:30 PM)
1 கப் தேநீர், 2 பிஸ்கட் (நியூட்ரிசாய்ஸ், டைஜஸ்டிவா அல்லது ஓட்மீல்). தேநீர் புத்துணர்ச்சி அளிக்கும், பிஸ்கட், குறைந்த அளவு நார்ச்சத்துக்களை வழங்கும்.

இரவு உணவு (8:00 – 8:30 PM)
2 சப்பாத்தி, 1/2 கப் பீர்க்கங்காய்ப் பொரியல். சப்பாத்தி கார்போஹைட்ரேட் வழங்கும். பீர்க்கங்காய்ப் பொரியல், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்கும்.

சனிக்கிழமை

காலை உணவு (8:00 – 8:30 AM)
2 உத்தப்பம், 1 தேக்கரண்டி பச்சை சட்னி. உத்தப்பம், அரிசி மற்றும் உளுந்து மாவில் செய்யப்படுவதால், இதில் நார்ச்சத்து மற்றும் புரதச் சத்துக்கள் அதிகமாக இருக்கும். பச்சை சட்னி சுவைக்காக சேர்க்கப்படுகிறது.

2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி! 2025 AI தொழில்நுட்ப வளர்ச்சி – Impact of AI on Human Life

நடு-காலை சிற்றுண்டி (11:00 – 11:30 AM)
1 கப் வேகவைத்த கொண்டைக்கடலை. கொண்டைக்கடலை, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான சிற்றுண்டி. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

மதிய உணவு (2:00 – 2:30 PM)
1 கப் அரிசி, 1/2 கப் சோயா சங்ஸ் குழம்பு, 1/2 கப் வெண்டைக்காய்ப் பொரியல், சிறிய அளவு குறைந்த கொழுப்புள்ள தயிர். அரிசி மற்றும் சோயா சங்ஸ் புரதச் சத்துக்களை வழங்கும்.

வெண்டைக்காய்ப் பொரியல் மற்றும் தயிர் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்களை வழங்கும்.

மாலை சிற்றுண்டி (4:00 – 4:30 PM)
1 பகுதி பழம் (வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற அதிக ஆற்றல் உள்ள பழங்களைத் தவிர்க்கவும்). குறைந்த சர்க்கரை உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம்.

இரவு உணவு (8:00 – 8:30 PM)
1 கப் உடைத்த கோதுமை உப்புமா, 1/2 கப் பீன்ஸ் பொரியல். உடைத்த கோதுமை நார்ச்சத்துக்களை வழங்கும், பீன்ஸ் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. இது இரவில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.

நீரிழிவு நோய் உணவுமுறை – 7 நாள் உணவு அட்டவணை 

இந்த அட்டவணை, மேற்கண்ட தகவல்களைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

நாள்காலைநடுகாலைமதியம்மாலைஇரவு
ஞாயிறுஇட்லிபயிறுசப்பாத்தி, மீன்பழம்சப்பாத்தி
திங்கள்பிரெட், முட்டைபழம்புலாவ்தேநீர்சப்பாத்தி
செவ்வாய்சப்பாத்திகொண்டைக்கடலைஅரிசி, பருப்புபழம்உப்புமா
புதன்பராத்தாபழம்அரிசி, சிக்கன்அவல்தோசை
வியாழன்ஓட்ஸ்தயிர்அரிசி, சப்பாத்தி, பீன்ஸ்கொண்டைக்கடலைசப்பாத்தி
வெள்ளிபோஹாபழம்சப்பாத்தி, மீன்பிஸ்கட்சப்பாத்தி
சனிஉத்தப்பம்கொண்டைக்கடலைஅரிசி, சோயாபழம்உப்புமா

நீரிழிவு நோய் உணவுமுறை – FAQs

1) நீரிழிவு நோய் என்றால் என்ன?

நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் அல்லது தேவையான அளவு உற்பத்தி செய்யாமல் போவதால் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்.

2) நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் யாவை?

சர்க்கரை நிறைந்த உணவுகள், வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, இனிப்பு பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

3) நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் யாவை?

நீரிழிவு நோய் – காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரத உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

4)நீரிழிவு நோயாளிகள் உணவு நேரத்தை எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்?

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உணவுகளை சாப்பிட வேண்டும். சிறிய அளவிலான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

5) நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் யாவை?

நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் ஆகும்.

6) நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி செய்வது அவசியமா?

ஆம், நீரிழிவு நோயாளிகள் தினமும் உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

7) நீரிழிவு நோயாளிகள் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

8) நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?
ஆம், நீரிழிவு நோயாளிகள் குறைந்த சர்க்கரை உள்ள பழங்களை சாப்பிடலாம். ஆனால் வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற அதிக சர்க்கரை உள்ள பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

9) நீரிழிவு நோயாளிகள் மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவுடன், உணவுத் திட்டம் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மேலும், இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

10) நீரிழிவு நோயாளிகள் மன அழுத்தத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்?
நீரிழிவு நோய் – யோகா, தியானம் மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்! "Top Laptops ₹20000-₹50000 for Students and Office Use – Tamil Laptop Guide"

நீரிழிவு நோய் உணவுமுறையை நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

சரியான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தைக் குறைத்தல் ஆகியவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

சர்க்கரை நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் புரத உணவுகளை உட்கொள்வது நல்லது. 

இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

(Note: மேற்கண்ட பதிவு, தகவலின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாகும். எனவே, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டு, இந்த உணவு முறையைக் கடைபிடிப்பது நல்லது).

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways

Managing diabetes with a 7-day diet plan can help control blood sugar levels naturally. This balanced meal plan includes nutrient-rich foods that support diabetes management. Following the right diet choices can improve overall health and prevent sugar spikes. Start this healthy diabetes-friendly meal plan today for better results!

Comment Box

    Scroll to Top