CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 2026-ஆம் ஆண்டிற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த மத்திய அரசுப் பணியில் சேர்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
உள்ளடக்கம்
CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026
சுருக்க அட்டவணை
| தலைப்பு | விவரம் |
|---|---|
| படைப் பிரிவு | மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF). |
| பதவியின் பெயர் | கான்ஸ்டபிள் (தொழில்நுட்பம் & வர்த்தகம் மற்றும் பயனியர்). |
| மொத்த காலியிடங்கள் | 9,195 (ஆண்கள் – 9,116, பெண்கள் – 79). |
| விண்ணப்பிக்கக் கடைசி தேதி | 19.05.2026 |
காலியிடங்கள்
CRPF-இல் கான்ஸ்டபிள் (தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பயனியர்) பிரிவுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 9,195 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- தொழில்நுட்பம் & வர்த்தகம் (Technical & Tradesmen): மொத்தம் 9,175 காலியிடங்கள் (ஆண்கள்: 9,096, பெண்கள்: 79). இந்தப் பணியிடங்கள் மாநிலங்கள் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- பயனியர் பிரிவு (Pioneer Wing): மொத்தம் 20 காலியிடங்கள் (ஆண்கள் மட்டும்). இந்தப் பணியிடங்கள், அகில இந்திய அடிப்படையில் (All India Basis) நிரப்பப்படும்.
- தமிழ்நாட்டிற்கான காலியிடங்கள் (Technical & Tradesmen): மொத்தம் 681 (ஆண்கள் – 673, பெண்கள் – 8). தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்த 681 பணியிடங்களுக்குப் போட்டியிடலாம்.
Tamil Nadu Jobs 2026 : Latest Govt & Private Job Notifications – Apply here…
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் 01.01.2026 தேதியின்படி கீழ்க்கண்ட கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
ஓட்டுநர் (Driver)
- 10-ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Transport Vehicle Driving License) கட்டாயம் வைத்திருக்க வேண்டும் மற்றும் டிரைவிங் டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும்.
மோட்டார் மெக்கானிக் வாகனம் (Mechanic Motor Vehicle)
- 10-ஆம் வகுப்பு (10+2 முறையில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் மெக்கானிக் வாகனத் துறையில் 2 வருட ITI சான்றிதழ் மற்றும் 1 வருடப் பணி அனுபவம் (அல்லது) 3 வருடத் தேசிய/மாநில அப்ரண்டிஸ் சான்றிதழுடன் 1 வருடப் பணி அனுபவம்.
மற்ற அனைத்துப் பிரிவுகளுக்கும் (Other Tradesmen)
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட தொழிலில் (Trade) நல்ல திறன் மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பயனியர் பிரிவு (மேசன்/எலக்ட்ரீசியன்)
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அந்தந்தத் தொழிலில் (மேசன் அல்லது எலக்ட்ரீசியன்) குறைந்தது 1 வருடப் பணி அனுபவம். (ITI சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).
Read also: RBI இளநிலை பொறியாளர் வேலைவாய்ப்பு 2026: மாதம் ரூ.91,309 சம்பளம்!
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது 01.01.2026 தேதியின்படி கணக்கிடப்படும்:
- கான்ஸ்டபிள் (ஓட்டுநர்): 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். (02.01.1999 மற்றும் 01.01.2005-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்).
- மற்ற அனைத்துப் பிரிவுகளுக்கும்: 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். (02.01.2003 மற்றும் 01.01.2008-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்).
வயது வரம்பு தளர்வுகள்
- SC/ST பிரிவினர்: 5 ஆண்டுகள்.
- OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்.
- முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): ராணுவப் பணியைக் கழித்த பின் 3 ஆண்டுகள்.
- 1984 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு அரசு விதிகளின்படி சிறப்புத் தளர்வுகள் உண்டு.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்படும் கான்ஸ்டபிள்களுக்கு (அனைத்துப் பிரிவுகளுக்கும்) மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின்படி (Pay Level-3) சிறப்பான சம்பளம் வழங்கப்படும்:
- அடிப்படைச் சம்பளம் (Basic Pay): மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை.
- இது தவிர அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), பயணப்படி (TA), சீருடைப்படி, ஆபத்துப்படி (Risk Allowance), இலவச மருத்துவ வசதி மற்றும் ஓய்வூதியத் திட்டப் பலன்கள் (NPS) என மத்திய காவல் படையின் அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும்.
Read also: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2026: மாதம் ரூ. 27,000 சம்பளத்தில் வேலை!
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட 6 கட்டத் தேர்வு முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT): 100 மதிப்பெண்களுக்கான ஆன்லைன் தேர்வு (ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெறும்).
- உடற்திறன் தேர்வு (Physical Efficiency Test – PET): ஓட்டப்பந்தயம் (Race) நடைபெறும். பதவிகளைப் பொறுத்து ஓட வேண்டிய தூரம் மற்றும் நேரம் மாறுபடும் (உதாரணமாக, ஓட்டுநருக்கு 24 நிமிடங்களில் 5 கி.மீ ஓட வேண்டும்).
- உடல் அளவீட்டுத் தேர்வு (Physical Standard Test – PST): உயரம், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) மற்றும் எடை ஆகியவை அளக்கப்படும். (ஆண்களுக்குக் குறைந்தபட்ச உயரம் 170 செ.மீ, பெண்களுக்கு 157 செ.மீ).
- தொழில் திறன் தேர்வு (Trade/Skill Test): விண்ணப்பித்த தொழில் தொடர்பான செய்முறைத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் (இதில் 20 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம்).
- ஆவணச் சரிபார்ப்பு (Document Verification – DV): அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.
- மருத்துவப் பரிசோதனை (Detailed Medical Examination – DME): CRPF மருத்துவக் குழுவால் விரிவான உடல் மற்றும் கண் பரிசோதனை (Medical Fitness) நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
பாடத்திட்டம்
கணினி வழித் தேர்வு (CBT) மொத்தம் 2 மணி நேரம் நடைபெறும். 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும் (10-ஆம் வகுப்புத் தரத்தில்):
- பொது அறிவுத்திறன் மற்றும் பகுத்தறிவு (General Intelligence and Reasoning): 25 கேள்விகள் (25 மதிப்பெண்கள்).
- பொது அறிவு (General Knowledge and Awareness): 25 கேள்விகள் (25 மதிப்பெண்கள்).
- அடிப்படை கணிதம் (Elementary Mathematics): 25 கேள்விகள் (25 மதிப்பெண்கள்).
- ஆங்கிலம் அல்லது இந்தி (English/Hindi): 25 கேள்விகள் (25 மதிப்பெண்கள்).
- எதிர்மறை மதிப்பெண் (Negative Marking): ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் (1/4) கழிக்கப்படும்.
Read also: SSC வேலைவாய்ப்பு 2026: 10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!
தேவையான ஆவணங்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதும், ஆவணச் சரிபார்ப்பின் போதும் (DV) கீழ்க்கண்ட ஆவணங்கள் கட்டாயம் தேவை:
- புகைப்படம் மற்றும் கையொப்பம்: சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் (3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாகவும், புகைப்படம் எடுத்த தேதி அச்சிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்) மற்றும் வெள்ளைத் தாளில் கருப்பு மையில் இட்ட கையொப்பம் (ஸ்கேன் செய்யப்பட்டது).
- அடையாளச் சான்று: ஆதார் கார்டு / வாக்காளர் அட்டை / பான் கார்டு / ஓட்டுநர் உரிமம்.
- கல்விச் சான்றிதழ்கள்: 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (வயது மற்றும் கல்வித் தகுதிக்கான அடிப்படை ஆதாரம்).
- தொழில்நுட்பச் சான்றிதழ்கள்: கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (ஓட்டுநர் பதவிக்கு), ITI சான்றிதழ் (மெக்கானிக் பதவிக்கு).
- பிற சான்றிதழ்கள்: இருப்பிடச் சான்றிதழ் (Domicile/Permanent Resident Certificate), சாதிச் சான்றிதழ் (SC/ST/OBC/EWS – பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசு வடிவத்தில்), முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ் மற்றும் உயரம்/மார்பளவு தளர்வு கோருவோருக்கான சான்றிதழ்.
விண்ணப்பக் கட்டணம்
- General, EWS மற்றும் OBC பிரிவினர் (ஆண்கள் மட்டும்): ரூ. 100 (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்).
- SC, ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்துப் பிரிவுப் பெண்கள்: இவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- கட்டணத்தை BHIM UPI, Net Banking, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கியத் தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 20.04.2026.
- விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி: 19.05.2026.
- அட்மிட் கார்டு (Admit Card) வெளியீடு: ஒவ்வொரு தேர்வுக்கும் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு CRPF இணையதளத்தில் வெளியிடப்படும்.
- கணினி வழித் தேர்வு (CBT): தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Read also: ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 : 11127 ஏஎல்பி பதவிக்கான காலியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை
| CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பைத் தெரிந்துகொள்ள | Click here |
| விண்ணப்பிக்க | Click here to Apply |
விண்ணப்பதாரர்கள் RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- படி 1 (புதிய பதிவு): மேலே இரண்டாவதாகக் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைக் கிளிக் செய்து “Apply here” என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களின் பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்யவும். OTP Verification முடிந்த பின்பு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உங்கள் மின்னஞ்சல் அல்லது SMS-க்கு வரும்.
- படி 2 (விவரங்களை நிரப்புதல்): உங்கள் லாகின் ஐடியைப் பயன்படுத்தி மீண்டும் இணையதளத்தில் நுழைந்து (Login), உங்கள் தனிப்பட்ட விவரங்கள், முகவரி, கல்வித் தகுதி மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி (Post) ஆகியவற்றைத் தவறில்லாமல் நிரப்பவும்.
- படி 3 (ஆவணப் பதிவேற்றம்): விதிமுறைகளின்படி, புகைப்படம் எடுத்த தேதி அச்சிடப்பட்ட உங்களின் சமீபத்திய வண்ணப் புகைப்படம் (50-100 kb) மற்றும் கையொப்பம் (50-100 kb) ஆகியவற்றை JPG/JPEG பார்மெட்டில் பதிவேற்றம் (Upload) செய்யவும்.
- படி 4 (கட்டணம் செலுத்துதல்): உங்களின் விவரங்களை ஒருமுறை முழுமையாகச் சரிபார்த்துவிட்டு, உங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை (ரூ. 100) ஆன்லைன் மூலம் செலுத்தவும். (கட்டண விலக்கு பெற்றவர்களுக்கு இந்தப் படி தேவைப்படாது).
- படி 5 (சமர்ப்பித்தல் & பிரிண்ட் அவுட்): கட்டணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டவுடன் உங்கள் விண்ணப்பத்தை “Submit” செய்யவும். இறுதியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (Application Form) பிரிண்ட் அவுட் எடுத்து வருங்காலத் தேவைக்காகப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். (இதைப் தபாலில் அனுப்பத் தேவையில்லை).
CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026 – FAQs
1) CRPF கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி எப்போது?
இந்த CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026-க்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் 19.05.2026-க்குள் CRPF இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
2) இந்த வேலைவாய்ப்பிற்குத் தேவையான கல்வித் தகுதி என்ன?
இந்த CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் பணிகளுக்கு ஓட்டுநர் உரிமம் அல்லது ITI சான்றிதழ் கட்டாயமாகும்.
3) CRPF கான்ஸ்டபிளுக்கான வயது வரம்பு என்ன?
ஓட்டுநர் பதவிக்கு 21 முதல் 27 வயதிற்குள்ளும், மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் 18 முதல் 23 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் (SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டும், OBC-க்கு 3 ஆண்டும் தளர்வு உண்டு).

