ஐடிஐ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) தொழிற்பயிற்சி பெற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் மொத்தம் 500 காலிப்பணியிடங்களுக்கு 1 வருட கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில், மாத உதவித்தொகையும் வழங்கப்படும். இது இளைஞர்கள் நேரடியாக பணி அனுபவத்தைப் பெறவும், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகவும் உதவும். இதன் முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த மாநகர போக்குவரத்து கழகத்தின் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல், எலெக்ட்ரீஷியன், ஆட்டோ எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், டர்னர், பெயிண்டர் மற்றும் வெல்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.
Read also : 60000 சம்பளம்; மத்திய அரசு வேலை, டிகிரி போதும்!
காலிப் பணியிடங்கள் மற்றும் உதவித்தொகை
மெக்கானிக்கல் மோட்டார் வாகனம் பிரிவில் அதிகபட்சமாக 373 பணியிடங்களும், ஃபிட்டர் பிரிவில் 40 பணியிடங்களும், எலெக்ட்ரீஷியன் பிரிவில் 33 பணியிடங்களும், வெல்டர் பிரிவில் 14 பணியிடங்களும் உள்ளன. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ. 14,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் சிறப்பு முகாம்
இந்தத் 500 பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்ய, ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் செப்டம்பர் 10, 2025 அன்று காலை 10 மணி முதல் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
ஐடிஐ தகுதி பெற்றவர்கள் அனைவரும் நேரடியாக இந்த முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
சாணக்கிய நீதி

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!
எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!
Key Insights & Best Takeaways
The Chennai Metropolitan Transport Corporation (MTC) is offering a one-year apprenticeship program for 500 ITI graduates in various trades like Mechanic, Electrician, Fitter, and Welder. Trainees will receive a monthly stipend of ₹14,000, and this program is a valuable opportunity for gaining practical experience and improving future job prospects. Candidates can apply by attending a special camp scheduled for September 10, 2025, at the MTC Training School in Chromepet.
Read also : Oil India Recruitment 2025 – டிகிரி முடித்திருந்தால் 1 லட்சம் வரை சம்பளம்!
தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!
தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox