OnePlus offer 2025 – ரூ.4500 வரை தள்ளுபடி!

OnePlus Offer 2025 - ரூ.4500 தள்ளுபடி

OnePlus offer 2025 : பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Oneplus, Amazon தளத்தில் வருகிற ஏப்ரல் 13, 2025 வரை ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் (OnePlus Red Rush Days Sale) என்ற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், Oneplus நிறுவனத்தின் பிரபலமான நோர்ட் (Nord) வரிசையில் உள்ள சில புதிய மாடல்களுக்கு சிறப்பான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பதிவில்,

  • OnePlus ஸ்மார்ட்போன்களின் தள்ளுபடி விலைகள்.
  • சிறப்பம்சங்கள்.
  • ஒப்பீட்டு அட்டவணை.
  • FAQs.

ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

OnePlus offer 2025

ஒன்பிளஸ் நோர்ட் 4 விலை (OnePlus Nord 4 Price)

OnePlus Nord 4 விவரங்கள் மற்றும் சிறப்பு தள்ளுபடி
OnePlus Nord 4 – பிரீமியம் டிசைன் மற்றும் மேம்பட்ட செயல்திறன்!

ஒன்பிளஸ் நோர்ட் 4 மொபைல் போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு (Memory) கொண்ட ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.29,498-ஆக உள்ளது. தற்போது, அமேசான் தளத்தில் நடைபெறும் ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சிறப்பு விற்பனையின் காரணமாக, இந்த போனுக்கு ரூ.4,500 தள்ளுபடி (Discount) வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த மொபைலை வெறும் ரூ.24,998 என்ற பட்ஜெட் விலையில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும். மேலும், ஐசிஐசிஐ (ICICI) வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி சலுகையும் உள்ளது.

சிறப்பம்சங்கள்

திரை (Display)

ஒன்பிளஸ் நோர்ட் 4, 6.74 இன்ச் அளவிலான அமோலெட் டிஸ்பிளேவைக் (AMOLED display) கொண்டுள்ளது. இதன் தெளிவுத்திறன் 2772 x 1240 பிக்சல்கள் ஆகும். இது 2150 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸையும், 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் கொண்டுள்ளது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சியும் (Dimming frequency) இதில் உள்ளது.

இயங்குதளம் மற்றும் செயல்திறன் (Platform and performance)

இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தையும், ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 யூசர் இன்டர்ஃபேஸையும் (Oxygen OS 14 user interface) கொண்டுள்ளது. இதன் செயல்திறனுக்காக ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் சிப்செட் (Octa-core Snapdragon 7 Plus Gen 3 4nm chipset) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராபிக்ஸ் தேவைகளுக்காக அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உள்ளது.

கேமரா (Camera)

ஒன்பிளஸ் நோர்ட் 4 பின்புறத்தில் 50 MP முக்கிய கேமரா உள்ளது. இது சோனி எல்ஒய்டி 600 சென்சாரைக் (Sony LYD600 sensor) கொண்டது. கூடுதலாக, இது 8 MP அல்ட்ரா வைடு கேமரா சோனி ஐஎம்எக்ஸ்355 (8 MP Ultra Wide Camera Sony IMX355) சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 MP கேமரா சாம்சங் எஸ்5கேபி9 (16 MP Camera Samsung S5KB9) சென்சாருடன் உள்ளது.

Realme GT 7 & GT 8 Pro -  Realme GT 7 & GT 8 Pro வெளியீட்டு தேதி, அம்சங்கள், விலை!
பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging)

இந்த மொபைலில் 5500mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை விரைவாக சார்ஜ் செய்வதற்கு 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடியோ மற்றும் பாதுகாப்பு (Audio & Security)

ஒன்பிளஸ் நோர்ட் 4, சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் பாதுகாப்பிற்காக, திரையின் உள்ளேயே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) வழங்கப்பட்டுள்ளது.

வண்ண விருப்பங்கள் (Colors)

இந்த ஸ்மார்ட்போன் 3 கவர்ச்சியான வண்ணங்களில் கிடைக்கிறது.

  • மெர்குரியல் சில்வர் (Mercurial Silver).
  • ஒயாசிஸ் கிரீன் (Oasis Green).
  • அப்சிடியன் மிட்நைட் (Obsidian Midnight).

வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப இந்த வண்ணங்களில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

கோடைக்கால உணவுகள் : உடலுக்கு நல்ல 12 தேர்வுகள்! கோடைக்கால உணவுகள்- Healthy & Cooling Foods – Best Hydrating Fruits & Drinks for Summer
வடிவமைப்பு (Design)

நீங்கள் மெட்டாலிக் பாடி (உலோகத்தாலான உடல்) கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை விரும்பினால், ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் உறுதியான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு, பிரீமியம் தோற்றத்தை அளிக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 விலை (OnePlus Nord CE4 Price)

OnePlus Nord CE4 சிறப்பம்சங்கள் மற்றும் சலுகை
OnePlus Nord CE4 – மத்திய வரம்பில் மேம்பட்ட அம்சங்கள்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 ஸ்மார்ட்போன், 2 விதமான ரேம் மற்றும் சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.21,998 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.23,998 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஐசிஐசிஐ (ICICI) வங்கி கிரெடிட் கார்டு மூலம் இந்தப் போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடிக்குப் பிறகு, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனை வெறும் ரூ.19,998 என்ற ஆரம்ப பட்ஜெட் விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட மாடலுக்கான விலையாகும். அதிக சேமிப்பு கொண்ட மாடலை வாங்க விரும்பினால், தள்ளுபடிக்குப் பிறகு ரூ.21,998-க்கு வாங்கிக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

திரை (Display)

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4, 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவுடன் (AMOLED display) வருகிறது. இது ஃபுல்எச்டிபிளஸ் (FullHD Plus – FHD+) தெளிவுத்திறன் (2412 x 1080 பிக்சல்கள்), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate) மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch sampling rate) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி (Dimming frequency) மற்றும் 1100 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

“வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!” "வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை – WhatsApp Scam Mistakes Tamil 2025"
இயங்குதளம் மற்றும் செயல்திறன் (Platform and performance)

இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 யூசர் இன்டர்ஃபேஸைக் (Oxygen OS 14 user interface) கொண்டுள்ளது. மேலும், இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் சிப்செட் (Octa-core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm chipset) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு கிராபிக்ஸ் கார்டைக் (Adreno 720 GPU graphics card) கொண்டுள்ளது.

கேமரா (Camera)

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization – OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய சோனி எல்ஒய்டி 600 சென்சார் (Sony LYD600 sensor) கொண்ட 50 MP முக்கியக் கேமராவையும், சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் (Sony IMX355 sensor) கொண்ட 8 MP அல்ட்ரா வைடு கேமராவையும் (Ultra wide camera) கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 16 MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!” "Top Laptops ₹20000-₹50000 for Students and Office Use – Tamil Laptop Guide"
கூடுதல் அம்சங்கள்

இந்தப் போன், IP54 மதிப்பீட்டின்படி நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் கொண்டது. இது 5500mAh பேட்டரியையும், 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) வசதியையும் கொண்டுள்ளது. டார்க் குரோம் (Dark chrome) மற்றும் செலடன் மார்பிள் (Celadon Marble) ஆகிய 2 வண்ண விருப்பங்களில் இது கிடைக்கிறது. சிறந்த பேட்டரி மற்றும் கேமரா அம்சங்களை பட்ஜெட் விலையில் விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் விலை (OnePlus Nord CE4 Lite Price)

OnePlus Nord CE4 Lite - 2025 சிறந்த டீல்
Nord CE4 Lite – சிறந்த விலையில் OnePlus அனுபவம்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போன், 2 சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.17,998 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.20,998 ஆகவும் உள்ளது.

தற்போது நடைபெறும் ரெட் ரஷ் டேஸ் சிறப்பு விற்பனையின் காரணமாக, இந்தப் போன்களுக்கு ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடிக்குப் பிறகு, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனின் ஆரம்ப விலை வெறும் ரூ.16,497 ஆக உள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட மாடலுக்கான விலையாகும். அதிக சேமிப்பு கொண்ட மாடலை வாங்க விரும்பினால், தள்ளுபடிக்குப் பிறகு ரூ.19,498-க்கு வாங்கிக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

திரை (Display)

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போன், 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் (Full HD+ AMOLED display) கொண்டுள்ளது. இதன் தெளிவுத்திறன் 2400 x 1080 பிக்சல்கள் ஆகும். இந்த டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate), 2100 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch sampling rate) ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இது, முந்தைய ஒன்பிளஸ் மாடல்களைப் போலவே இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) உடன் வருகிறது.

ரூ.5000க்கு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – பட்டியல்! ரூ.5000க்கு Best Budget Smartphones List 2025
இயங்குதளம் மற்றும் செயல்திறன் (Platform and performance)

இந்த ஸ்மார்ட்போன், அட்ரினோ 619 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Adreno 619 GPU graphics card) மற்றும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் சிப்செட் (Octa-core Qualcomm Snapdragon 695 6nm chipset) மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா (Camera)

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization – OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய அதே சோனி எல்ஒய்டி 600 சென்சார் (Sony LYD600 sensor) கொண்ட 50 MP முக்கிய கேமரா உள்ளது. கூடுதலாக, 2 MP டெப்த் கேமரா (Depth camera) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 MP முன்புற கேமரா வசதியும் உள்ளது.

பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging)

இந்த மொபைலில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 80W சூப்பர்வூக் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

வண்ண விருப்பங்கள் (Colors)

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட்,

  • சூப்பர் சில்வர் (Super Silver).
  • மெகா ப்ளூ (Mega Blue).
  • அல்ட்ரா ஆரஞ்ச் (Ultra Orange).

ஆகிய 3 வெவ்வேறு வண்ணங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

“பிப்ரவரி 2025 5G ஸ்மார்ட்போன்கள் விலை & அம்சங்கள்” பிப்ரவரி 2025 5G ஸ்மார்ட்போன்கள் | February 2025 Budget 5G Smartphones Details

OnePlus offer 2025ஒப்பீட்டு அட்டவணை

போன் மாடல்ரேம்/ஸ்டோரேஜ்அசல் விலை (ரூ)தள்ளுபடி (ரூ)விற்பனை விலை (ரூ)கூடுதல் சலுகை
நோர்ட் 4 (Nord 4)8GB + 256GB29,4984,50024,998ICICI கார்டுக்கு கூடுதல் Discount இருக்கலாம்
நோர்ட் 4 (Nord 4)8GB + 128GB    21,998    2,000    19,998    ICICI கிரெடிட் கார்டுக்கு ₹2,000 Discount  
8GB + 256GB23,9982,00021,998ICICI கிரெடிட் கார்டுக்கு ₹2,000 Discount
நோர்ட் சிஇ4 லைட் (Nord CE4 Lite)8GB + 128GB  17,998    1,500    16,497    Red Rush Days Discount    
8GB + 256GB20,9981,50019,498Red Rush Days Discount  

Offer in Amazon click here..

“TOP 3 பட்ஜெட் ஹெட்போன்கள் ரூ.500-க்கு – ஒப்பீடு 2025!” ₹500-க்கு TOP 3 பட்ஜெட் ஹெட்போன்கள் ஒப்பீடு 2025 | Top 3 Budget Headphones Comparison Under ₹500

OnePlus offer 2025 – FAQs

1) ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் எப்போது வரை  இருக்கும்?

ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் சேல் ஏப்ரல் 13, 2025 வரை இருக்கும்.

2) நோர்ட் 4 போனின் ஆரம்ப விலை என்ன? 

நோர்ட் 4 போனின் ஆரம்ப விலை ரூ. 29,498 ஆகும். ஆனால், தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 24,998-யில் வழங்கப்படுகிறது.

3) நோர்ட் சிஇ4 போனுக்கு என்ன பேங்க் ஆஃபர் உள்ளது?

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டிற்கு (ICICI credit card) ரூ. 2,000 தள்ளுபடி உள்ளது.

4) நோர்ட் சிஇ4 லைட்டில் என்ன சார்ஜிங் வசதி உள்ளது?

நோர்ட் சிஇ4 லைட்டில் 80W சூப்பர்வூக் சார்ஜிங் வசதி உள்ளது.

5) இந்த OnePlus சேலில் என்னென்ன நோர்ட் போன்கள் உள்ளன? 

நோர்ட் 4 (Nord 4), நோர்ட் சிஇ4 (Nord CE4), நோர்ட் சிஇ4 லைட் (Nord CE4 Lite).

இந்த OnePlus Red Rush Days Sale ஏப்ரல் 13, 2025 உடன் முடிவடைகிறது. அதனால், விலைக்கு ஏற்ப உங்கள் ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

“சிறந்த 5G பட்ஜெட் போன்கள் 2025 – Best 5G Smartphones” 2025-ல் சிறந்த 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் | Best 5G Budget Smartphones in 2025

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox 

Quick English Recap – Key Insights & Best Takeaways!

OnePlus is having a Red Rush Days Sale on Amazon until April 13, 2025, featuring discounts on their Nord series phones. The Nord 4, Nord CE4, and Nord CE4 Lite are available at reduced prices, with the Nord 4 starting at ₹24,998 after discount and offering a strong camera and performance. The Nord CE4 starts at ₹19,998 with an ICICI card offer, highlighting its camera and fast charging, while the budget-friendly Nord CE4 Lite begins at ₹16,497, emphasizing its large battery and display. This sale presents a good opportunity to purchase a new OnePlus Nord phone at a lower price within the specified timeframe.

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்!

ஒப்போ நிறுவனம், தன்னுடைய புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான OPPO K13 5G-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கவர்ச்சியான வடிவமைப்பு, சக்திவாய்ந்த செயலி மற்றும் பெரிய…

ByByAmirthavarshini RApr 23, 2025

Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை!

Ghibli Image Scam : சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் Ghibli புகைப்படங்களை உருவாக்கும் செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய புகைப்படங்களை…

ByByAmirthavarshini RApr 15, 2025

Ghibli image ChatGPT vs Grok : எது சிறந்தது?

Ghibli image : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், AI-யை அடிப்படையாகக் கொண்டு படங்களை உருவாக்கும் திறன் கொண்ட அம்சங்கள் வந்துவிட்டன. கடந்த சில…

ByByAmirthavarshini RApr 13, 2025

Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்!

Realme நிறுவனம் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், Realme GT 7 மற்றும் GT 8 Pro என இரண்டு…

ByByAmirthavarshini RMar 30, 2025

வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!

வாட்ஸ்அப் மோசடி 2025 : இன்றைய தொழில்நுட்பக் காலகட்டத்தில் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. நண்பர்களுடன் உரையாடுவது முதல் பணம் அனுப்புவது…

ByByTN News BoxMar 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *