Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்!

Realme GT 7 & GT 8 Pro வெளியீட்டு தேதி, அம்சங்கள், விலை!

Realme நிறுவனம் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், Realme GT 7 மற்றும் GT 8 Pro என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளது. இவை இரண்டும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான அம்சங்களுடன் வரவிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலை முதல் உயர்நிலை அம்சங்கள் வரை விரும்பும் பயனர்களுக்கு இவை சிறந்த தேர்வாக அமையலாம்.

இந்தப் பதிவில் புதிய ஸ்மார்ட்போன்களின்,

  • செயல்திறன் (Performance).
  • பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging).
  • வடிவமைப்பு மற்றும் வெளியீடு (Design & Release).
  • எதிர்பார்க்கப்படும் விலை (Expected price).
  • FAQs.

ஆகிய விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

Realme GT 7

Realme GT 7 Mobile Specs, Display & Performance
Realme GT 7 – புது Snapdragon Chip, AMOLED Display!

செயல்திறன் (Performance)

இது MediaTek Dimensity 9400+ சிப்செட் உடன் வருகிறது. இது அதிவேகமான செயல்திறனை வழங்கும். இதன் மூலம் கேமிங் மற்றும் பிற செயலிகளைப் பயன்படுத்துவது மிகவும் வசதியாக இருக்கும். இது 6nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதன் வெப்பம் மற்றும் பேட்டரி பயன்பாடு குறைவாக இருக்கும்.

பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging)

இந்த ஸ்மார்ட்போனில் 7,000mAh பேட்டரி வசதி உள்ளதால், இது நீண்ட நேரம் நீடிக்கும். மேலும், இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging) வசதி இருப்பதால், இந்தப் போனை மிகக் குறுகிய நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!” "Top Laptops ₹20000-₹50000 for Students and Office Use – Tamil Laptop Guide"

வடிவமைப்பு மற்றும் வெளியீடு (Design & Release)

இது, GT 6 -ஐ விட மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலில் சீனாவில் ஏப்ரல் மாதம் அறிமுகமாகும். பின்பு இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை (Expected price)

இந்திய சந்தையில் சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 35,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme GT 8 Pro

Realme GT 8 Pro 200MP Camera & 5500mAh Battery
Realme GT 8 Pro – 200MP Camera, 5500mAh Battery!

செயல்திறன் (Performance)

இந்த ஸ்மார்ட்போன், Snapdragon 8 Elite 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் மேம்பட்ட செயல்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

காட்சி (Display)

இந்தப் போனில் 2K ரெசல்யூஷன் (2K Resolution) கொண்ட OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்பதால், இது சிறந்த காட்சி அனுபவத்தைத் தரும்.

பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging)

GT 8 Pro -விலும் 7,000mAh பேட்டரி இருக்கும். மேலும், இதில் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் (Ultrasonic fingerprint sensor) மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (Periscope telephoto camera) போன்ற உயர்நிலை அம்சங்களும் இதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி! 2025 AI தொழில்நுட்ப வளர்ச்சி – Impact of AI on Human Life

வெளியீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை

இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும். பின்பு, இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 45,000 முதல் ரூ. 55,000 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Realme Official Website – Click here..

Realme GT 7 மற்றும் GT 8 Pro FAQs

1) Realme GT 7 எப்போது முதலில் வெளியாகும்?

Realme GT 7ஏப்ரல் மாதம் சீனாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

2) Realme GT 7 -ல் பேட்டரி எவ்வளவு உள்ளது?

Realme GT 7 -ல் பேட்டரி வசதி 7,000mAh உள்ளது.

3) Realme GT 8 Pro -வில் டிஸ்ப்ளே வசதி எப்படி இருக்கும்?

GT 8 Pro -வில் 2K OLED டிஸ்ப்ளே வசதி உள்ளது.

4) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி எவ்வளவு?

GT 7 -ல் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

5) இரண்டு போன்களிலும் பெரிய பேட்டரி வசதி உள்ளதா?

ஆம், இரண்டு போன்களிலும் 7,000mAh பேட்டரி வசதி உள்ளது.

ரூ.5000க்கு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – பட்டியல்! ரூ.5000க்கு Best Budget Smartphones List 2025

இதுபோன்ற சிறந்த தகவல்களைத் தொடர்ந்து பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Quick English Recap – Key Insights & Best Takeaways

Realme’s new GT 7 and GT 8 Pro phones will be powerful with fast processors. Both will have big 7,000mAh batteries and quick charging. The GT 7 is expected around ₹30-35k, while the GT 8 Pro with a better screen and camera could be ₹45-55k. They aim to offer great performance at different prices.

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *