புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!

"புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் – Health Benefits & Uses in Tamil"

புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் : முன்பெல்லாம் ஒவ்வொரு இல்லத்திலும் கட்டாயமாக ஒரு தோட்டமாவது இருக்கும். ஆனால் இப்போது, ஒரு வீட்டில் ஒரு செடி இருந்தாலே அது பெரிய வியப்புக்குரிய விஷயமாக உள்ளது. அதுவும் பலர் அந்தச் செடியை வேறு தேவைகளுக்காக வெட்டி விடுகிறார்கள். சில இல்லங்களில் சில மரங்கள் எதற்காக இருக்கின்றன என்றே அறியாமல் வைத்திருப்பார்கள். அப்படி ஒரு மரம்தான் புங்கை மரம்.

ஆனால், இந்த மரத்தில் நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களும், வியக்க வைக்கும் பல சிறப்பம்சங்களும் நிறைந்துள்ளன. இந்தப் பதிவில் புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் – Pungai Tree Medicinal Uses

"புங்கை மரத்தின் மருத்துவ நன்மைகள் – Natural Remedies for Skin and Health"
“புங்கை மரத்தின் பத்திரமான மருத்துவ குணங்கள்!”

இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைகளில் ஒன்று ஆயுர்வேத மருத்துவம். இது பல உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இயற்கை வழியில் குணப்படுத்த உதவுகிறது. இந்த முறையில் மூலிகைகளுக்கும், தாவரங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது.

அப்படிப்பட்ட மருத்துவ மூலிகைகளில் ஒன்றாக புங்கை இருக்கிறது. புங்கை மரத்தின் விதைகள், பூ, இலைகள், வேர் மற்றும் சாம்பல் அனைத்தும் பல மருத்துவ அம்சங்களைத் தருகின்றன.

இது நம் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் பயன்படுகிறது. 

உடல் எடையைக் குறைக்கும் தினைகள் சிறந்த 5 வகைகள்! உடல் எடையைக் குறைக்கும் தினைகள் | Top 5 Millets for Natural Weight Loss Tamil

1) பற்கள் மற்றும் ஈறுகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு

புங்கை மரத்தின் விதைகள், இலைகள் மற்றும் சருகுகள் பல் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாக இருக்கின்றன.

பல் வீக்கம், ஈறுகளில் ஏற்படுகின்ற துவாரங்கள் மற்றும் பல் வலியைக் குறைப்பதற்கு புங்கை மரத்தின் சாம்பலோடு சிறிது உப்பு சேர்த்து பற்களில் பூசிக்கொள்ளலாம்.

இது பற்களை வலுப்படுத்தி, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள்

2) வைரஸ் தொற்றுகள் (Viral Infections)

புங்கை மரமானது ஆன்ட்டி பாக்டீரியல் (Anti-bacterial) மற்றும் ஆன்ட்டி வைரல் (Anti-viral) தன்மைகளுக்குப் பேர் பெற்றது. இந்த மரம் தொற்று நோய்களை எதிர்க்கும் வல்லமையைக் கொண்டது.

காய்ச்சல், நோய்த் தொற்றுகள் மற்றும் சளி போன்ற உடல் பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வை அளிக்கிறது.

டயாலிசிஸ் உணவுமுறை 7நாள் வழிகாட்டி "Dialysis Diet 7 Days Plan in Tamil – Kidney Patient Meal Guide Image"

3) வாத நோய் மற்றும் தோல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

புங்கையின் விதைகள் மற்றும் இலைகள் வாத நோய், உடலில் அரிப்பு மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளைக் குணமாக்கப் பயன்படுகிறது. மேலும், இது தோல் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் – Pungai Tree Medicinal Uses

4) கீழ்வாதத்திற்கு மருத்துவத் தீர்வு

மரத்தின் இலை, வேர் மற்றும் சாம்பல் கீழ்வாதம் போன்ற வலிகளுக்குப் பயன்படுகிறது. இந்த மரத்தின் இயற்கைத் தன்மைகள் கீழ்வாதத்தைக் குறைக்கிறது. மேலும், இது உடலில் வீக்கம், வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

5) மூட்டு வலி நிவாரணி

மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் (Moringa oil) மூட்டு வலி மற்றும் மசாஜ் செய்யப் பயன்படுகிறது. இது உடலின் சோர்வை நீக்கி, வலி மற்றும் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

இந்த மரம், ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு சிறந்த மூலிகையாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் உடலுக்குப் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும், இந்த மரம் இயற்கையான முறையில் பல நோய்களைக் குணப்படுத்துகிறது.

டேனிங் நீங்க சருமம் பொலிவாக – 5 சமையலறை டிப்ஸ்! டேனிங் நீக்கும் வீட்டு முறைகள் – Natural skin glow tips in Tamil

அது மட்டுமில்லாமல், இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத மூலிகையாகவும் இருக்கிறது. ஆனால், இதைப் பற்றித் பலருக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அதனால், இதைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருக்கும் மரங்களைப் பாதுகாத்து, அதன் மருத்துவப் பலன்களைப் பெறுவோம்.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways

  • Pungai Tree Medicinal Uses: Widely used in Ayurveda & Siddha medicine for treating viral infections, skin diseases, and joint pain.
  • Natural Dental & Skin Care: Pungai leaves, seeds, and bark help with tooth pain, gum infections, skin allergies, and inflammation.
  • Joint Pain & Arthritis Relief: Pungai oil and herbal extracts are effective for arthritis, muscle stiffness, and nerve disorders.
  • Traditional Healing & Immunity Boost: Used for fevers, respiratory infections, bacterial diseases, and chronic pain relief.

Releated Posts

Early Meals முக வீக்கத்தைக் குறைக்குமா? உண்மை இதோ!

Early Meals : முகத்தில் ஏற்படும் வீக்கம் என்பது நம்மில் பலருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை. குறிப்பாக, காலையில் இந்த நிலை ஏற்படும். முந்தைய…

ByByVignesh MJun 25, 2025

Blood Sugar அதிகமாக உள்ளதா? இந்த 10 அறிகுறிகளைக் கவனிக்கவும்!

Blood Sugar : இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது, இந்தக் காலக்கட்டத்தில் பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாக உள்ளது. ஆனால், இந்த…

ByByVignesh MJun 24, 2025

அடிக்கடி வாய்ப்புண் வருகிறதா? சிறந்த இயற்கை தீர்வுகள் இதோ!

வாய்ப்புண் குணமாக இயற்கை வைத்தியங்கள் : சமீபகாலமாக பலரும் வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியக் காரணமாகும்.…

ByByVignesh MJun 20, 2025

Belly Fat Loss Vegetables – தினமும் சாப்பிட வேண்டியவை!

Belly Fat Loss : உடல் எடையைக் குறைக்கவும், குறிப்பாக தொப்பையைக் குறைக்கவும் முயற்சிக்கும்போது, சரியான உணவு முறை மிகவும் முக்கியம் ஆகும். உடற்பயிற்சியுடன்…

ByByVignesh MJun 17, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *