மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு – 10 பயனுள்ள டிப்ஸ்!

மொபைல் பேட்டரி சேமிப்பு டிப்ஸ் - Mobile Battery Saving Tips
  • மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு : இன்றைய காலகட்டத்தில் நம் தேவைகளையோ, அன்றாட நிகழ்வுகளையோ, புதிய தகவல்களையோ, ஏன் வாழ்க்கை துணையையே மொபைல் மூலமாகத்தான் தேடும் நிலை உள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போன் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியப் இடத்தை பிடித்துவிட்டது.
  • நாம் அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்துகிறோம். ஆனால், அதன் சார்ஜ் குறைத்த பிறகு அடிக்கடி சார்ஜ் செய்வது உண்டு. மொபைல் போனை அதிகம் பயன்படுத்துகிறோமே தவிர, அதில் இருக்கும் பேட்டரியின் தன்மை பற்றி நாம் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
  • பேட்டரி விரைவாக டிஸ்சார்ஜ் (Discharge) ஆகும்போது தான் நாம் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இப்படி போனை அடிக்கடி சார்ஜ் செய்வதால் போனின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். 
  • பேட்டரி சரியாக செயல்படவில்லை என்றால், நமக்கு தேவையான போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், இதனால் பல தவிர்க்க முடியாத இன்னல்களும் ஏற்படலாம். அதனால் தான் மொபைல் போன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதன் பேட்டரியும் முக்கியம். 
  • பேட்டரியை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சில வழிமுறைகள் உள்ளன. இந்த வழிகளைப் பின்பற்றினால், மொபைல்போன் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க முடியும். 

ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

20% முதல் 80% மட்டுமே சார்ஜ் செய்தல்

மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு யுக்திகள் - Tips to Extend Mobile Battery Life
பேட்டரியின் நீடித்த பயனை பெற 10 சிறந்த யுக்திகள்!

மொபைலை 100% வரை சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. 20% முதல் 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது. இது மொபைல் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கும். மொபைலை முழுவதுமாக சார்ஜ் செய்து அதை மீண்டும் முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்யும் போது பேட்டரியின் ஆயுள் குறையும். 

ஏன் 20% முதல் 80% வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்?

i) பேட்டரியின் வேதியியல் கூறுகள் (Chemical properties) சேதம் அடையும்: 

பேட்டரியின் உள்ளே இருக்கும் உறுப்புகள் மிகவும் மென்மையாக இருக்கும். மொபைலை 100% வரை சார்ஜ் செய்யும் போது, பேட்டரியில் அதிக அழுத்தம் உருவாகும். இது பேட்டரியின் உள் கூறுகளை சேதப்படுத்தும். எனவே, பேட்டரியை 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது.

ii) 20%-க்கும் கீழ் சார்ஜ் செய்தால் என்ன ஆகும்?

மொபைலின் சார்ஜ் 20%-க்கு கீழ் செல்லும்போது, அதன் உள் கூறுகள் பாதிக்கக்கூடும். இது பேட்டரியின் செயல்திறனைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மொபைல் 20% வருவதற்கு முன்பே அதை சார்ஜ் செய்து கொள்வது நல்லதாகும். 

iii) 80%-க்கும் மேல் சார்ஜ் செய்தால் என்ன ஆகும்?

மொபைலில் 80%-க்கு மேல் சார்ஜ் இருக்கும்போது சார்ஜ் செய்தால், அதன் ஆயுள் குறையும். இது பேட்டரியின் வேலைத் திறனைப் பாதிக்கும். எனவே, போனை 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது.

அதிக வெப்பத்தில் வைக்காமல் இருத்தல்

லோ பவர் மோடு செயல்படுத்துதல் - Enabling Low Power Mode
பேட்டரி நீடிக்க லோ பவர் மோடுயை உடனே செயல்படுத்துங்கள்!

பேட்டரி அதிக வெப்பத்தைத் தாங்காது. அதனால், மொபைல் போனை நேரடியாக சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. அதிக வெப்பம் பேட்டரியின் வேலைத் திறனைக் குறைக்கும்.

A) ஏன் மொபைல் பேட்டரி அதிக வெப்பத்தில் வைக்கக் கூடாது?

i) அதிக வெப்பத்தைத் தாங்காது: 

பேட்டரியின் உள்ளே இருக்கும் உறுப்புகள் மிகவும் மென்மையாக இருக்கும். இவை அதிக வெப்பத்தைத் தாங்காமல் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, அதிக வெப்பம் உள்ள இடத்தில் போனை வைக்கக் கூடாது.

B) மொபைல் பேட்டரி வெப்பமடையும் போது என்ன செய்ய வேண்டும்? 

i) மொபைல் போனைக் குளிர்ந்த இடத்தில் வைக்கவும்: 

பேட்டரி வெப்பமடையும் போது மொபைல் போனைக் குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். இது பேட்டரியின் வெப்பத்தைக் குறைப்பதோடு, அதன் வேலைத் திறனையும் மேம்படுத்தும். 

ii) அதிக பயன்பாடு இல்லாத ஆப்களை (Apps) மூடுதல்:

அதிக பயன்பாடு இல்லாத ஆப்கள் (Apps) போனில் திறந்திருந்தால் அதை மூட வேண்டும். இது பேட்டரியின் வெப்பத்தைக் குறைக்கும்.

டிஸ்சார்ஜ் செய்யாமல் இருத்தல்

பின்னணி ஆப்ஸ் கட்டுப்பாடு - Restrict Background Apps to Save Battery
பின்னணி செயல்களை கட்டுப்படுத்துவது பேட்டரிக்கு மிகுந்த ஆதாயம் தரும்.

போன் முழுவதுமாக டிஸ்சார்ஜ் ஆனால், பேட்டரியின் ஆயுள் குறையும். போன் 20% வரும் போது அதை உடனடியாக சார்ஜ் செய்வது நல்லது. 

A) ஏன் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது? 

i) பேட்டரியின் உள் கூறுகள் சேதமடையும்:

போன் முழுவதுமாக டிஸ்சார்ஜ் ஆகும்போது, அது அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இது பேட்டரியின் வேலைத் திறனைக் குறைக்கும். 

ii) சார்ஜ் செய்வது கடினம்: 

போனை முழுவதுமாக டிஸ்சார்ஜ் ஆனால், அதை மீண்டும் சார்ஜ் செய்வது கடினமாகும். இது பேட்டரியின் ஆயுளைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. 

B) போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்?

போனின் சார்ஜ் 20%-க்கு கீழ் வருவதற்கு முன்பே அதை உடனடியாக சார்ஜ் செய்வது நல்லதாகும். இது பேட்டரியின் திறனை அதிகரிக்கும்.

Best iPhone models 2025 – Top 5 லிஸ்ட் ரெடி! 2025 சிறந்த ஐபோன் மாடல்கள் பட்டியல் | Best iPhone Models 2025 Top 5 List in Tamil

இரவு முழுவதும் சார்ஜ் செய்யாமல் இருத்தல்

நாம் பெரும்பாலும் இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்து வைப்போம். அப்படிச் செய்யும்போது, போன் 100% சார்ஜ் ஆன பின்பும் சார்ஜ் ஏறிக் கொண்டே இருக்கும். இது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். அதனால், போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்யக்கூடாது. 

அதிக வெப்பமடையும்:

போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் போது பேட்டரி அதிக வெப்பம் ஆகும். இது பேட்டரியின் உள் கூறுகளைப் பாதிக்கும். இதனால், பேட்டரியின் வேலைத் திறன் குறையும்.

அசல் சார்ஜரை மட்டும் பயன்படுத்துதல் 

மொபைல் போனுடன் வரும் அசல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், மற்ற சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது, போன் சரியாக சார்ஜ் ஆகாமல் பேட்டரியின் ஆயுள் குறையும். 

அசல் சார்ஜரின் முக்கியத்துவம்: 

  • அசல் சார்ஜர் பேட்டரியை சரியான முறையில் சார்ஜ் செய்யும். 
  • மற்ற சார்ஜர்கள் போனின் பேட்டரியை சேதப்படுத்தும். 
  • அசல் சார்ஜர் மூலம் போனைச் சார்ஜ் செய்யும்போது பேட்டரி ஆயுள் நீடிக்கும்.

அடிக்கடி சார்ஜ் செய்தல்

போனை அடிக்கடி சார்ஜ் செய்வது நல்லதாகும். போனின் சார்ஜ் 50%-க்கு கீழே வந்து விட்டால், அதை சார்ஜ் செய்ய வேண்டும். இது பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கும். 

அடிக்கடி சார்ஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்: 

  • மொபைல் பேட்டரி வேலைத் திறன் அதிகமாகும். 
  • பேட்டரியின் ஆயுள் நீடிக்கும். 
  • பேட்டரி சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கும்.
2025 சிறந்த Budget Smartphones – Top picks under 10,000! 2025 சிறந்த Budget Smartphones பட்டியல் | Best Budget Phones Under ₹10,000 in 2025

குளிர்ந்த இடத்தில் வைத்தல்

போன் குளிர்ந்த இடத்தில் இருக்கும்போது, அதன் பேட்டரி நீண்ட நாட்கள் நீடிக்கும். ஏனென்றால், அதிக வெப்பம் பேட்டரியின் வேலைத் திறனைக் குறைக்கும். 

போனைக் குளிர்ந்த இடத்தில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்:

  • போனைக் குளிர்ந்த இடத்தில் வைப்பதால், பேட்டரியின் வேலைத் திறன் மேம்படும். 
  • பேட்டரி ஆயுள் நீடிக்கும். 
  • பேட்டரி சேதமடையாது.

போனை அதிகம் பயன்படுத்துதல்

ஒளிர்வு மற்றும் திரை நேர எல்லை அமைப்புகள் - Brightness and Screen Timeout Settings
தொலைநோக்கில் பேட்டரி சேமிக்க ஒளிர்வும் திரையின் நேரமும் முக்கியம்.

மொபைல் போனை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் போனின் சார்ஜ் முழுவதுமாக டிஸ்சார்ஜ் (Discharge) ஆகிவிடும். இது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். அதனால், போனை அடிக்கடி பயன்படுத்துவது அவசியம் ஆகும். 

நீண்ட நாட்கள் பயன்படுத்தாத போது என்ன ஆகும்?

  • போனை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரி முழுவதுமாக டிஸ்சார்ஜ் ஆகிவிடும். 
  • இது பேட்டரியின் வேலைத் திறனைக் குறைக்கும்.

சரியான முறையில் பயன்படுத்துதல்

மொபைல் போனை சரியான முறையில் பயன்படுத்தினால் பேட்டரியின் ஆயுள் நீடிக்கும். இதனால் பேட்டரியின் வேலைத் திறன் மேம்படும்.

போனை சரியான முறையில் பயன்படுத்த சில வழிமுறைகள்: 

  • ஸ்கிரீனை அதிக பிரகாசத்தில் வைக்காமல் இருப்பது நல்லது. அதிக பிரகாசமாக இருக்கும் போது பேட்டரி முழுவதுமாக டிஸ்சார்ஜ் ஆகும். இதனால் பேட்டரி ஆயுள் குறைய வாய்ப்பு உள்ளது. 
  • மேலும், அதிக பயன்பாடு இல்லாத ஆப்களை (Apps) அன்இன்ஸ்டால் (Uninstall) செய்வது நல்லதாகும். ஏனென்றால், அது பேக்-க்ரவுண்டில் (Background) இயங்கிக் கொண்டே இருப்பதால் பேட்டரியின் செயல்பாடும் குறைய வாய்ப்பு உள்ளது.
Oppo Find N5 மெல்லிய & ஃபாஸ்ட்சார்ஜிங் ஸ்மார்ட்போன் Oppo Find N5 – மெல்லிய மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் | Slim & Fast Charging Smartphone in Tamil

பேட்டரியை சரியான நேரத்தில் மாற்றுதல் 

பேட்டரி முழுவதுமாக டிஸ்சார்ஜ் ஆகிவிட்டால், அதனை உடனடியாக மாற்றுவது நல்லதாகும். பழைய பேட்டரியைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது போனின் செயல்திறன் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

பேட்டரியை மாற்றுவதால் ஏற்படும் நன்மைகள்: 

  • போனின் பேட்டரியை மாற்றுவதன் மூலம் போனின் செயல்திறன் அதிகரிக்கும். 
  • போன் பாதிப்படையாமல் நீண்ட நாட்கள் நிலைக்கும்.

மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு பற்றிய எளிமையான அட்டவணை விளக்கம்:

வழிமுறைகள்விளக்கம்
1. 20%-80% வரை சார்ஜ் செய்தல்100% வரை சார்ஜ் செய்யாமல், 20%-80% இடையில் வைத்தால் 
பேட்டரி ஆயுள் நீடிக்கும்.
2. அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்தல்நேரடி சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, 
அதிக வெப்பம் பேட்டரியின் செயல்திறன் பாதிக்கும்.
3. முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்யாமல் இருப்பது20% ஆகும் முன் சார்ஜ் செய்தால் பேட்டரி நீடிக்கும்.
4. இரவு முழுவதும் சார்ஜ் செய்யக்கூடாது100% ஆன பிறகு சார்ஜ் தொடர்வதால், பேட்டரி சேதமடையும்.
5. அசல் சார்ஜர் பயன்படுத்துதல்மற்ற சார்ஜர்கள் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும்.
6. அடிக்கடி சார்ஜ் செய்தல்50%-க்கு கீழ் குறையும்போது சார்ஜ் செய்வது நல்லது.
7. குளிர்ந்த இடத்தில் வைப்பதுஅதிக வெப்பம் பேட்டரி செயல்திறனைக் குறைக்கும்.
8. போனை அடிக்கடி பயன்படுத்துதல்நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகும்.
9. போனை சரியான முறையில் பயன்படுத்துதல்அதிக பிரகாசம், தேவையில்லாத ஆப்கள் 
பேட்டரியின் ஆயுளை விரைவாகக் குறைக்கும்.
10. பழைய பேட்டரியை மாற்றுதல்பழைய பேட்டரியை மாற்றினால், போனின் வேலைத் திறன் அதிகரிக்கும்.
  • மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு : இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. விலை உயர்ந்த மொபைல் போனாக இருந்தாலும் அதன் பேட்டரியின் ஆயுள் காலத்தைப் பொறுத்து தான் அந்த போன் செயல்படும். 
  • சிறந்த ஸ்மார்ட் போன்களைத் தேடி வாங்கினாலும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், பேட்டரி தான் ஒரு போனின் ஆயுள் காலத்தைத் தீர்மானிக்கும். 
  • பேட்டரியின் ஆயுள் குறைவது பொதுவானதாக இருந்தாலும், இந்த 10 வழிமுறைகளைப்  பின்பற்றுவதால் பேட்டரி ஆயுளை நீட்டிக்க முடியும். மொபைல் பேட்டரியை நீண்ட நாட்கள் நீட்டிக்க சிறிய நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது. 
  • பேட்டரிக்குத் தகுந்த பராமரிப்பு வழிகளைப் பின்பற்றி வந்தால் மொபைல் போனின் செயல்திறன் நீண்ட காலம் சிறப்பாக இருக்கும். எனவே, உங்கள் மொபைல் போனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, அதன் பேட்டரியை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்..
  • கீழே பேட்டரி குறித்த கேள்வி மற்றும் பதில்களை வழங்கியுள்ளோம், அதையும் அறிந்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த சிறந்த தகவலை பகிருங்கள்..
OnePlus Nord 4 Amazon தள்ளுபடி – சிறந்த 5G மொபைல்! OnePlus Nord 4 Amazon தள்ளுபடி | Best 5G Smartphone Offer in India

மொபைல் பேட்டரி குறித்து 10 பொதுவான கேள்விகள் (FAQ)

1. மொபைல் பேட்டரியை 100% வரை சார்ஜ் செய்யலாமா?

இல்லை. பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க 20% முதல் 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது.

2. மொபைல் பேட்டரி அதிக வெப்பமானால் என்ன செய்ய வேண்டும்?
மொபைலைக் குளிர்ந்த இடத்தில் வைப்பது நல்லது. மேலும், தேவையில்லாத ஆப்களை மூடுவது நல்லது. ஏனென்றால், அதிக வெப்பம் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும்.

3. போனை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்யலாமா?
இல்லை. பேட்டரி 20% வரும் முன்பே சார்ஜ் செய்ய வேண்டும். முழுவதுமாக டிஸ்சார்ஜ் ஆகும்போது பேட்டரி சேதமடைய வாய்ப்பு உள்ளது.

4. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்யலாமா?
இல்லை. 100% ஆன பின்பும் சார்ஜ் தொடர்வதால், பேட்டரியின் ஆயுள் குறையும்.

5. எந்த சார்ஜரை மொபைலுக்குப் பயன்படுத்த வேண்டும்?
மொபைல் போனுடன் வரும் அசல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற போனின் சார்ஜர்கள் பேட்டரியின் ஆயுளைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.

6. அடிக்கடி சார்ஜ் செய்தால் பேட்டரி பாதிக்குமா?
இல்லை. மொபைல் சார்ஜ் 50% குறையும் போதே சார்ஜ் செய்தால், பேட்டரி ஆயுள் நீடிக்கும்.

7. அதிக நேரம் போனைப் பயன்படுத்தினால் சார்ஜ் குறையுமா?
ஆமாம். அதிகப் பிரகாசம், தேவையில்லாத ஆப்கள் மற்றும் அதிக நேரம் பயன்படுத்தும் போது பேட்டரியின் வாழ்நாள் குறையும்.

8. போனை அதிக வெப்பத்திலிருந்து எப்படிப் பாதுகாக்கலாம்?
நேரடி சூரிய ஒளியில் வைக்காமல் இருப்பது நல்லது. மேலும், அதிக விளையாட்டுகள் (gaming) மற்றும் தேவையில்லாத செயலிகளைத் (apps) தவிர்ப்பது நல்லதாகும்.

9. பழைய பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்?
பேட்டரி விரைவாக டிஸ்சார்ஜ் ஆகி, சார்ஜ் நீண்ட நேரம் ஏறாமல் இருந்தால் பேட்டரியை மாற்றுவது நல்லது.

10. மொபைல் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க சிறந்த வழி என்ன?
20%-80% சார்ஜ் அளவைப் பின்பற்றுதல், அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்தல், தேவையில்லாத ஆப்களை மூடுதல் போன்றவை பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்.

அதிகாரப்பூர்வ தகவல் – Battery University (batteryuniversity.com)

தகவல்களை வீடியோ வடிவில் பார்க்க - https://www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top