Best iPhone models 2025 – Top 5 லிஸ்ட் ரெடி!

2025 சிறந்த ஐபோன் மாடல்கள் பட்டியல் | Best iPhone Models 2025 Top 5 List in Tamil
  • Best iPhone models 2025 : ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற கனவு பல பேருக்கு இருந்து வருகிறது. ஆனால், அதன் விலை அதிகமாக இருப்பதால் சிலருக்கு அது கனவாகவே ஆகிவிடுகிறது. 
  • காரணம், ஐபோன்கள் புதிதாக வெளியாகும் போது ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள விலையில் தான் வெளியாகிறது. அந்த நேரத்தில் ஐபோன்களை வாங்குவதில் சிலர் சிரமப்படுவதுண்டு. ஆனால், இப்போது அந்த கவலை வேண்டாம். 
  • ஏனென்றால், ஈசியாக வாங்கும் வகையில் ரூ. 80,000-க்கும் கீழ் கிடைக்கக்கூடிய சிறந்த ஐபோன் மாடல்களை நாங்கள் உங்களுக்குப் பட்டியலிட்டு தந்துள்ளோம். இதில் ஓல்டு மாடல் முதல் நியூ மாடல் வரை உள்ள ஐபோன்கள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளோம்.
  • இந்த விலையில் நீங்கள் ஐபோன் வாங்குவதை யோசித்துக் கொண்டிருந்தால், Best iPhone models 2025 இல் எந்த மாடல் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆகியவற்றைக் குறித்து விரிவாகப் இந்த பதிவில் வழங்கியுள்ளோம், இது உங்களுக்கு Best iPhone models 2025 – இல் நல்ல ஐபோனை தேர்வு செய்ய உதவியாக இருக்கும்.

Best iPhone models 2025

ஐபோன் 13 (iPhone 13) 

iPhone 13 சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் | Apple iPhone 13 Features & Price Details in Tamil
iPhone 13 – 2025-ல் மதிப்புள்ள ஒரு ஐபோன் மாடல்!

A) முக்கியக் குறிப்புகள்:

  • காட்சி (Display):  6.1 இன்ச் Super Retina XDR Display.
  • செயலி (Processor):  A15 Bionic சிப்.
  • கேமரா (Camera):  12MP முக்கிய கேமரா +  12MP அல்ட்ரா வைடு கேமரா, HDR10 மற்றும் Dolby Vision.
  • பேட்டரி (Battery): 3,240mAh.
  • விலை:  ரூ. 49,900/-

B) சிறப்பம்சங்கள்:

i) அழகான புகைப்படங்களை எடுக்க “சிறந்த கேமரா” வசதி:

  • இதில் “12MP முக்கிய கேமரா (Main camera) மற்றும் 12MP அல்ட்ரா வைடு கேமரா (Ultra wide camera)” ஆகிய “இரட்டைக் கேமரா அமைப்பு” உள்ளது.
  • இதனால், புகைப்படங்கள் சிறந்த தெளிவோடு இருக்கும்.
  • வீடியோக்களில் “ஆழத்தைக் கூட்டி, தானாகவே ஃபோகஸை மாற்றும் சினிமாட்டிக் மோட்” சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.
  • இதன் “12MP TrueDepth கேமரா”, சிறந்த செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்கை வழங்குகிறது.
  • இதன் “HDR10 மற்றும் Dolby Vision” கேமரா வசதியின் மூலம் “Netflix, Disney+ Hotstar, YouTube” போன்ற பிளாட்ஃபாம்களில் HD மற்றும் HDR வீடியோக்களை மிகவும் அழகாகக் காணலாம்.

ii) வேகமான செயல்திறன் (Processor):

  • இதில் “A15 Bionic சிப்” இருப்பதால், இந்த ப்ராசஸர் iPhone 12-ஐ ஒப்பிடுகையில் வேகமாகவும் திறமையாகவும் செயல்படுகிறது.
OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்! OPPO K13 5G வெளியீடு 2025 | New Oppo Smartphone Launch with Stunning Design and Features
  • இதன் “4-Core GPU”, கேமிங், வீடியோ எடிட்டிங் போன்றவற்றில் சக்திவாய்ந்த அனுபவத்தை வழங்குகிறது.
  • இதன் “5G ஆதரவு”, விரைவான இணைய இணைப்பிற்கு உகந்ததாக உள்ளது.

iii) நீண்ட நாள் நீடிக்கும் “பேட்டரி”:

  • இதில் “3,240mAh” பேட்டரி இருப்பதால், 19 மணி நேரம் வீடியோ பார்ப்பதற்கான வசதி உள்ளது.
  • இதன் “MagSafe சார்ஜிங்” வசதி மூலம் வேகமாக வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) செய்யலாம்.

iv) வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு

  • இதில் “Ceramic Shield” வசதி இருப்பதால், முந்தைய மாடல்களை விட 4 மடங்கு அதிக வலுவான திரைப் பாதுகாப்பு வசதி உள்ளது.
  • இதில் “Water & Dust Resistance” வசதி இருப்பதால், மழை, தூசி ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.

v) பாக்ஸில் இருப்பவை

  • ஐபோன் 13 மொபைல்.
  • USB-C to Lightning கேபிள்.
  • 1 வருட ஆப்பிள் உத்தரவாதம்.

vi) விலை மற்றும் சலுகை:

  • வழக்கமான விலை: ரூ. 49,900/- (128GB).
  • சலுகை விலை: ரூ. 45,400/- (ரூ. 4,500 தள்ளுபடி).

iPhone 13
Official Specs: iPhone 13 Official Specifications on Apple Website
Expert Review: iPhone 13 Review on GSMArena
Related Link: Best iPhones to Buy in 2025 – TN News Box

C) யாருக்குச் சிறந்தது?

Best iPhone models 2025 - இல் சிறந்த கேமரா தரம், விரைவான செயல்திறன், நீண்ட நேர பேட்டரி ஆயுள் மற்றும் புதிய iOS 17 அம்சங்களைப் பெற விரும்பினால், இந்த ஐபோன் 13 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஐபோன் 14 (iPhone 14)

iPhone 14 முக்கிய அம்சங்கள் மற்றும் விலை | Apple iPhone 14 Features & Price in Tamil
“iPhone 14 – 2025-ல் பிரிமியம் லுக் & பர்ஃபார்மன்ஸ்!

A) முக்கியக் குறிப்புகள்:

  • காட்சி (Display):  6.1 இன்ச் Super Retina XDR Display.
  • செயலி (Processor):  A15 Bionic சிப்.
  • கேமரா (Camera):  12MP முக்கிய கேமரா +  12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 4K Dolby Vision-இல் சினிமாட்டிக் மோட்.
  • பேட்டரி (Battery): 3,279 mAh.
  • விலை:  ரூ. 59,900/-

B) சிறப்பம்சங்கள்:

i) சிறந்த “கேமரா” வசதி:

  • ஐபோன் 14-ல் “12MP முக்கிய கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைடு கேமரா” உள்ளது. இதன் மூலம், எல்லா நிலைகளிலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்.
  • கைகோர்த்து எடுக்கப்படும் வீடியோக்களில் நிலையான காட்சிகளைப் பெற முடியும்.
  • இதன் “4K Dolby Vision சினிமாட்டிக் மோட்” மூலம், வீடியோக்களில் சிறந்த ஃபோகஸ் (Focus) மற்றும் திரையில் ஆழம் (Depth) கிடைக்கும்.

ii) வேகமான செயல்திறன் (Processor):

  • இதில் “A15 Bionic சிப் 5-core GPU” இருப்பதால், இது மிகவும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது.
  • இதன் “5G ஆதரவு”, விரைவான இணைய இணைப்பிற்கு உகந்ததாக உள்ளது.

iii) பேட்டரி ஆயுள்:

  • இதில் “20 மணி நேரம் வீடியோ பிளேபேக்” இருப்பதால், ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
  • இதன் பேட்டரி ஆயுள், உடனடி பயனுக்கு உகந்ததாகவும், எந்த நேரமும் சிறந்த பயன்பாட்டையும் வழங்கும்.
Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam

iv) பாதுகாப்பு (Crash Detection):

  • இதன் “Crash Detection” வசதி மூலம் ஒரு மிகப்பெரிய கார் விபத்தைக் கண்டறிந்து, தானாகவே உதவிக்கு அழைக்க முடியம் இது பயனர்களின் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

v) வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு:

  • இதில் “Ceramic Shield” இருப்பதால், திரையைப் பாதுகாக்கும்.
  • இதில் “Water & Dust Resistance” வசதி இருப்பதால், மழை, தூசி ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.

vi) பாக்ஸில் இருப்பவை:

  • ஐபோன் 14 மொபைல்.
  • USB-C to Lightning கேபிள்.
  • 1 வருட ஆப்பிள் உத்தரவாதம்.

vii) விலை மற்றும் சலுகை:

  • வழக்கமான விலை: ரூ. 59,900/- (128GB).
  • சலுகை விலை: ரூ. 53,900/- (ரூ. 6,000 தள்ளுபடி).

iPhone 14
Official Specs: iPhone 14 Official Specifications on Apple Website
Expert Review: iPhone 14 Review on GSMArena
Related Link: Best Smartphones for 2025 – TN News Box

C) யாருக்குச் சிறந்தது?

Best iPhone models 2025 - இல் சிறந்த கேமரா அமைப்பு, பிரத்யேக Crash Detection பாதுகாப்பு, 20 மணி நேரம் வீடியோ ப்ளேபேக் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை விரும்புபவர்களுக்கு இந்த ஐபோன் 14 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Best iPhone models 2025ஐபோன் SE (iPhone SE)  

iPhone SE 2025 சிறந்த பட்ஜெட் ஐபோன் | Best Budget iPhone SE in Tamil
iPhone SE – குறைந்த விலையில் Apple ஸ்மார்ட்போன்!

A) முக்கியக் குறிப்புகள்:

  • காட்சி (Display): 4.7 இன்ச் Retina HD டிஸ்ப்ளே.
  • செயலி (Processor):  A15 Bionic சிப்.
  • கேமரா (Camera): 12MP முக்கிய கேமரா +  7MP FaceTime HD முன்புற கேமரா.  
  • பேட்டரி (Battery):  2018 mAh.
  • விலை:  ரூ. 54,900/-

B) சிறப்பம்சங்கள்:

i) கேமரா:

  • இதில் “12MP முக்கிய கேமரா” இருப்பதால், இது Smart HDR 4, Photographic Styles மற்றும் Portrait Mode-ஐக் கொண்டுள்ளது.
  • இதன் “4K வீடியோ (60fps வரை)” மூலம் மிகவும் தெளிவான வீடியோக்களை எடுக்க முடியும்.
  • செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கான “7MP FaceTime HD முன்புற கேமராவைக்” கொண்டுள்ளது.

ii) அதிவேக செயல்திறன் (Processor):

  • ஐபோன் 13-ல் பயன்படுத்திய அதே “A15 Bionic சிப்” ப்ராசஸர் இருப்பதால், செயல்பாடு மிகவும் வேகமாக இருக்கும்.
  • இதில் “5G இணைப்பு” இருப்பதால், இன்டர்நெட் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் மிகவும் வேகமாக இருக்கும்.

iii) பேட்டரி:

  • இதில் “15 மணி நேரம் வீடியோ பிளேபேக்” இருப்பதால், ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.
Ghibli image ChatGPT vs Grok : எது சிறந்தது? ChatGPT மற்றும் Grok Ghibli image comparison | Who is best in creating Ghibli style images?

iv) பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு:

  • “Home Button-ல்” உள்ள “Touch ID” பாதுகாப்பு மூலம் விரைவாக அன்லாக் செய்யலாம்.
  • இதில் “Ceramic Shield Glass” இருப்பதால்,அதிக பாதுகாப்பு மற்றும் வலுவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
  • இது 1 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் நீர் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால், இது  “IP67” சான்றிதழைக் கொண்டுள்ளது.

v) பாக்ஸில் இருப்பவை:

  • ஐபோன் SE (2022) மொபைல்.
  • USB-C to Lightning கேபிள்.
  • 1 வருட ஆப்பிள் உத்தரவாதம்.

vi) விலை:

  • ரூ. 54,900/- (128GB).

iPhone SE 3rd Generation
Official Specs: iPhone SE 3rd Gen Official Specifications on Apple Website
Expert Review: iPhone SE 3rd Gen Review on GSMArena
Related Link: Best Budget iPhones 2025 – TN News Box

C) யாருக்குச் சிறந்தது?

Best iPhone models 2025 - இல் எளிதாகக் கையாளக்கூடிய ஐபோன்களை விரும்புபவர்களுக்கும், தரமான கேமரா மற்றும் 4k வீடியோ வசதிகளை பெற விரும்புபவர்களுக்கும், Touch ID மற்றும் Home Button-ஐ விரும்புபவர்களுக்கும் இந்த ஐபோன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Best iPhone models 2025

ஐபோன் 15 (iPhone 15)

iPhone 15 புதிய சாம்சங் போட்டிக்கு பதிலடி | iPhone 15 Tamil Review
iPhone 15 – புதிய டிசைனுடன் உயர் தரம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ்!

A) முக்கியக் குறிப்புகள்:

  • காட்சி (Display):  6.1 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே.  
  • செயலி (Processor):  A16 Bionic சிப்.
  • கேமரா (Camera): 48MP முக்கிய கேமரா  
  • பேட்டரி (Battery):  3,349mAh  
  • விலை:  ரூ. 69,900/-

B) சிறப்பம்சங்கள்:

i) தகவல்களை எளிதாகக் காண Dynamic Island:

  • “Dynamic Island” மூலம் உங்கள் அழைப்புகள், மெசேஜ்கள், இசைக் கட்டுப்பாடுகள் மற்றும் லைவ் அப்டேட்டுகளை நீங்களே சுலபமாகக் காணலாம்.
  • “Uber பயணம், கேம் ஸ்கோர்” போன்றவற்றைத் திரையின் மேல் பகுதியிலேயே கண்டறியலாம்.

ii) கேமரா:

  • இதன் “48MP முக்கிய கேமரா” மூலம் அதிக விவரங்களுடன் பிரமாதமான புகைப்படங்களை எடுக்கலாம்.
  • இதன் “2X Telephoto Zoom” வசதி, அருகிலுள்ள பொருட்களைத் தெளிவாக ப்ளர் (Blur) இல்லாமல் படம் எடுக்க உதவுகிறது.
  • இதன் “மேம்பட்ட போர்ட்ரெய்ட் மோட்” மூலம், புகைப்படத்திற்குப் பிறகு கூட, நீங்கள் ஃபோகஸை மாற்றலாம்.
2025 Best Budget Smartphones – 20,000-க்கு கீழ் டாப் லிஸ்ட்! ₹20,000-க்கு கீழ் 2025 Best Budget Smartphones – Realme, Redmi, Samsung, Moto வின் சிறந்த போன்கள்

iii) செயலி (Processor):

  • இதன் முன்னணி iPhone செயலியான “A16 Bionic Chip” மூலம் வேகமான செயல்பாடு மற்றும் மென்மையான அனுபவம் கிடைக்கும்.
  • இதில் உள்ள “சமயோசித புகைப்படத் தொழில்நுட்பம் (Computational Photography)”, புகைப்படத் தரத்தை அதிகரிக்கும் AI தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
  • இதில் “Voice Isolation” இருப்பதால், அழைப்புகளின் போது பின்னணி சத்தம் குறைந்து குரல் தெளிவாக இருக்கும்.

iv) நீண்ட நாள் பேட்டரி மற்றும் USB-C சார்ஜிங்:

  • ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் செயல்படும்.
  • இதன் “USB-C சார்ஜிங்” மூலம் ஐபோன் 15-ஐ “Mac, iPad, Apple Watch” போன்றவற்றுடன் ஒரே கேபிளால் சார்ஜ் செய்யலாம்.
  • iPhone 15 மூலம் Apple Watch/AirPods-ஐ சார்ஜ் செய்யலாம்.

v) வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு:

  • இதன் “நிறமூட்டிய கண்ணாடி & அலுமினிய வடிவமைப்பு”, வலுவான மற்றும் அழகான தோற்றத்தைத் தருகிறது.
  • இதில் “Ceramic Shield திரை” இருப்பதால், இது முந்தைய மாடல்களை விட அதிகமாகக் கரடுமுரடாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
  • இதன் “Water & Dust Resistance”, மழை மற்றும் தூசி போன்றவற்றை எதிர்த்துப் போராடும்.
  • இதில் உள்ள “Crash Detection” வசதி, வாகன விபத்து நடந்தால், தானாகவே அவசர சேவையை அழைக்கும்.

vi) பாக்ஸில் இருப்பவை:

  • ஐபோன் 15 மொபைல்.
  • USB-C சார்ஜிங் கேபிள்.
  • 1 வருட ஆப்பிள் உத்தரவாதம்.

vii) விலை மற்றும் சலுகை:

வழக்கமான விலை: ரூ. 69,900/- (128GB).

சலுகை விலை: ரூ. 63,900/- (ரூ. 6,000 தள்ளுபடி).

iPhone 15
Official Specs: iPhone 15 on Apple Website
Expert Review: iPhone 15 Review on GSMArena
Related Link: Top Flagship Smartphones 2025 – TN News Box

C) யாருக்குச் சிறந்தது?

Best iPhone models 2025 - இல் மிகச் சிறந்த கேமரா வசதியை விரும்புபவர்களுக்கும், USB சார்ஜிங் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை விரும்புபவர்களுக்கும், வேகமான  A16 Bionic செயலியை விரும்புபவர்களுக்கும், இந்த ஐபோன் 15 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Best iPhone models 2025

ஐபோன் 16 (iPhone 16)

iPhone 16 புதிய அம்சங்கள் மற்றும் டிசைன் லீக்ஸ் | iPhone 16 Tamil Tech News
iPhone 16 – புதுப்பிப்பு வடிவம் மற்றும் அதிநவீன கேமரா தொழில்நுட்பம்!

A) முக்கியக் குறிப்புகள்:

  • காட்சி (Display): 6.1 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே.  
  • செயலி (Processor):  A18 Chip. 
  • கேமரா (Camera):  48MP Fusion கேமரா.  
  • பேட்டரி (Battery):  3,561 mAh.  
  • விலை:  ரூ. 79,900/-

B) சிறப்பம்சங்கள்:

i) புத்திசாலியான AI அனுபவம் (Apple Intelligence ):

  • இதில் உள்ள “Apple Intelligence”, உங்கள் எழுத்துப் பாணியை மேம்படுத்தவும், பதில்களை வழங்கவும், வேலைகளை எளிதாக்கவும் உதவுகிறது.
  • இதில் “தனியுரிமைப் பாதுகாப்பு” இருப்பதால், உங்கள் தரவை Apple-லால் கூட அணுக முடியாது.

ii) கேமரா: 

  • இதன் “Camera Control மூலம் Zoom, Depth of Field” போன்றவற்றை விரைவாக மாற்றலாம்.
  • இதன் “48MP Fusion கேமரா”, மிகவும் கூர்மையான மற்றும் உயர்தர புகைப்படங்களை வழங்கும்.
  • இதன் “Ultra-Wide Camera (Auto Focus உடன்)” மூலம் Macro புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தெளிவாக எடுக்கலாம்.
  • இதில் “2X Telephoto Zoom” வசதி இருப்பதால், அருகிலுள்ள பொருட்களை பெரியதாகவும், தெளிவாகவும் படம் எடுக்க முடியும்.
  • இதன் “Photographic Styles” மூலம் உங்கள் படங்களுக்கு வண்ணம் மற்றும் ஒளி திருத்தங்களை செய்யலாம்.
6000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன் – முழு விவரம்! ரூ.6000 கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் தேர்வு – Budget Mobile Tamil Tips

iii) செயலி (Processor):

  • iPhone 16-இல் “A18 Chip” உள்ளது. இது “A16 Bionic”-ஐ விட 2 தலைமுறைகளை முன்னேறியுள்ளது.
  • சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோ செயல்பாடுகளை ஆதரிக்கிறது.
  • “Console-நிலை கேமிங்” அனுபவத்துடன் சக்திவாய்ந்த செயல்திறனைக் கொண்டுள்ளது.

iv) பேட்டரி ஆயுள்:

  • “22 மணி நேரம் வரை” வீடியோ பிளேபேக் வழங்கும் நீண்ட கால பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது.
  • “USB-C கேபிள்” மூலம் சார்ஜ் செய்யலாம்.
  • MagSafe சார்ஜிங் மூலம் வேகமான வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தைப் பெறலாம்.

v) பாதுகாப்பு அம்சங்கள்:

  • இதில் “Crash Detection” இருப்பதால், உங்கள் கார் கடுமையாக மோதினாலும், உதவிக்கு அழைக்க iPhone தானாகவே உதவுகின்றது.

vi) பாக்ஸில் இருப்பவை:

  • ஐபோன் 16 மொபைல்.
  • USB-C சார்ஜிங் கேபிள்.
  • 1 வருட ஆப்பிள் உத்தரவாதம்.

vii) விலை மற்றும் சலுகை:

  • வழக்கமான விலை: ரூ. 79,900/- (128GB).
  • சலுகை விலை: ரூ. 73,400/- (ரூ. 6,500 தள்ளுபடி).

iPhone 16
Official Specs: iPhone 16 on Apple Website
Expert Review: Rumors & Leaks on MacRumors
Related Link: Smartphones in 2025 – TN News Box

C) யாருக்குச் சிறந்தது?

Best iPhone models 2025 - இல் அட்டகாசமான புகைப்பட அனுபவத்தைப் பெறுவதற்கும், கேமிங் ரசிகர்களுக்கும், பாதுகாப்பை முக்கியமாகப் பார்ப்பவர்களுக்கும், நீண்ட பேட்டரி ஆயுள் தேவைப்படுபவர்களுக்கும் இந்த போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Best iPhone models 2025

ஒப்பீட்டு அட்டவணை

மாடல்காட்சி  (Display)செயலி  (Processor)கேமரா  (Camera)பேட்டரி  (Battery)விலை (Price)யாருக்குச் சிறந்தது?
ஐபோன் 136.1″ Super Retina XDRA15 Bionic12MP + 12MP3,240mAhரூ.49,900
(ரூ. 45,400 சலுகை)
சிறந்த கேமரா, வேகமான செயலி, நீண்ட பேட்டரி
ஐபோன் 146.1″ Super Retina XDRA15 Bionic (5-Core GPU)12MP + 12MP, 4K Dolby Vision3,279mAhரூ. 59,900
(ரூ. 53,900 சலுகை)
சிறந்த கேமரா, Crash Detection, நீண்ட பேட்டரி
ஐபோன் SE (2022)4.7″ Retina HDA15 Bionic12MP + 7MP2,018mAhரூ. 54,900எளிதாகக் கையாளக்கூடிய, Touch ID விரும்புபவர்கள்
ஐபோன் 156.1″ Super Retina XDR OLEDA16 Bionic48MP + 12MP3,349mAhரூ. 69,900
(ரூ. 63,900 சலுகை)
சிறந்த கேமரா, USB-C சார்ஜிங், நீண்ட பேட்டரி
ஐபோன் 166.1″ Super Retina XDR OLEDA18 Chip48MP Fusion3,561mAhரூ. 79,900
(ரூ. 73,400 சலுகை)
AI வசதி, சிறந்த கேமரா, கேமிங், நீண்ட பேட்டரி

இந்த Best iPhone models 2025பட்டியலில் இருந்து உங்களின் தேர்வு எது என்பதை எங்களுக்கு கருத்துக்களின் மூலம் தெரியப்படுத்துங்கள்.

Best iPhone models 2025 சிறந்த தேர்வு எது?

இந்த ஐபோன்கள் ஓவ்வொன்றும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. உங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த ஐபோனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 

2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி! AI மூலம் ஒரே நேரத்தில் 1000 வேலைக்கு விண்ணப்பம் செய்த நபர் | AI Applying for 1000 Jobs at Once

Best iPhone models 2025 – FAQs

1) ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14-ன் வேறுபாடு என்ன?

  • ஐபோன் 14-ல் Crash Detection, சிறந்த கேமரா மற்றும் 20 மணி நேர வீடியோ பிளேபேக் வசதிகள் உள்ளன. ஆனால், ஐபோன் 13-ல் A15 Bionic சிப் மற்றும் சிறந்த செனிமாட்டிக் மோட்  வசதிகள் உள்ளன.    

2) ஐபோன் SE (2022) யாருக்குச் சிறந்தது?

  • ஐபோன் SE (2022) சிறிய மற்றும் எளிதாகக் கையாளக்கூடிய மொபைலாகும். இது 4K வீடியோ மற்றும் A15 Bionic சிப் தேவைப்படுபவர்களுக்குச்  சிறந்தது.

3) ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16-ன் வேறுபாடு என்ன?    

  • ஐபோன் 16-ல் A18 சிப், 48MP Fusion கேமரா மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் உள்ளது. ஆனால், ஐபோன் 15-ல் A16 சிப் மற்றும் USB-C சார்ஜிங் வசதி உள்ளது.  

4) ஐபோன் 13-ல் உள்ள பேட்டரி ஆயுள் எப்படி?  

  • ஐபோன் 13-ல் 3,240mAh பேட்டரி உள்ளது. இது 19 மணி நேரம் வீடியோ பிளேபேக் வசதியைக் கொண்டுள்ளது.

5) ஐபோன் 14 வாங்குவது ஏன் சிறந்தது? 

  • ஐபோன் 14-ல் சிறந்த கேமரா, Crash Detection பாதுகாப்பு, மற்றும் 20 மணி நேர வீடியோ பிளேபேக் வசதி உள்ளது.

Best iPhone models 2025

“மேலும் இது போன்ற புதிய சிறந்த தகவல்களை பெற, tnnewsbox.com-ஐ இப்போதே subscribe செய்யுங்கள்!”
TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways

This article compares the best iPhone models under ₹80,000 in 2025, focusing on the iPhone 13, iPhone 14, iPhone SE, and iPhone 15. It covers key specs like camera, battery, performance, and pricing to help users choose the right model. Each iPhone is analyzed based on user needs such as gaming, photography, and long-term updates. With clear pros and cons, the guide is ideal for anyone planning an iPhone purchase in 2025.

Comment Box

    Scroll to Top