அரிசி எப்போது தவிர்க்க வேண்டும்? நிபுணர்களின் அறிவுரை!

அரிசி எப்போது தவிர்க்க வேண்டும் – Expert Nutritionist Tips

இந்தியர்களின் பிரதான உணவான அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம். இது உடலுக்கு ஆற்றலை அளித்தாலும், அளவும் நேரமும் தவறினால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இதன் முழு ஆரோக்கியப் பலனைப் பெற, அரிசி எப்போது தவிர்க்க வேண்டும் என்று இங்கு முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அரிசி உணவின் பாதிப்பு மற்றும் தவிர்க்கும் நன்மைகள் – Diet Awareness
சில நேரங்களில் அரிசியை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றது!
  • அரிசி என்பது எளிதாக ஜீரணமாகக் கூடிய ஒரு உணவு என்றாலும், அதை இரவில் சாப்பிடும்போது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும். 
  • மேலும், இரவில் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கக்கூடும். அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர், இரவு நேரங்களில் அரிசியைத் தவிர்ப்பது நல்லதாகும்.
  • அரிசி உடலுக்கு நன்மைகளைத் தரும் என்றாலும், அதை உண்ணும் நேரத்தைப் பொறுத்துதான் அதன் நன்மை தீமைகள் அமையும். 
  • புதுடெல்லி பிஎஸ்ஆர்ஐ (PSRI) மருத்துவமனையின் உளவியல் நிபுணர் “தேப்ஜானி பானர்ஜி”, “மதிய நேரம்தான் அரிசி சாப்பிட சரியான நேரம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
  • வெள்ளை அரிசியை தாண்டி, கருப்பு அரிசி அல்லது சாம்பல் நிற அரிசியில் உள்ள வைட்டமின் பி (Vitamin B), மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. 
  • இந்த அரிசியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், இது உங்களின் பசியையும் கட்டுப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
  • ஆராய்ச்சியின் படி, மக்களால் “வெள்ளை அரிசி” தான் பெரும்பாலாக உட்கொள்ளப்படுகிறது. ஆனால், இதில் குறைவான ஊட்டச்சத்துகளும், நார்ச்சத்துக்களுமே உள்ளன. 
  • வெள்ளை அரிசியை அடிக்கடி உண்ணும் போது, ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோய்ப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த அரிசியை உட்கொள்ளும் போது, அவர்களின் சுகர் லெவல் அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வெள்ளை அரிசியைத் தவிர்ப்பது நல்லதாகும். 
  • அதற்கு மாறாக பழுப்பு நிற அரிசி மற்றும் சிவப்பு நிற அரிசி ஆகியவற்றை உட்கொள்ளலாம். ஏனென்றால், இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளன.
தலைப்புமுழு விவரம்
மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!Click here…
உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினைகள்Click here…
6 மாத குழந்தைக்கு திட உணவு – முழு வழிகாட்டி!Click here…
முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்!Click here… 
  • அரிசியில் உள்ள கலோரிகள், அவற்றின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வேறுபடுகிறது. 100 கிராம் சமைத்த அரிசிக்கு சுமார் 130 கலோரிகள் கிடைக்கின்றன. 
  • சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் 200 கிராம் அரிசியில் சுமார் 260 கலோரிகள் கிடைப்பதாகக்  கூறப்படுகிறது. அதே சமயத்தில், பழுப்பு நிற அரிசியை சமைத்தால், அது குறைவான கலோரிகளையே வழங்குகிறது. அதாவது, 100 கிராம் அரிசிக்கு சுமார் 110 கலோரிகளை வழங்குகிறது. 
  • இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால், இது நீண்ட நேரத்திற்கு ஆற்றலை வழங்கும்.
  • அரிசியை நேரம் தவறி சாப்பிட்டால் : அரிசி எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்றாலும், இரவில் சாப்பிடும்போது உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறிப்பாக, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், இதை இரவில் உண்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • சாதத்தில் ஸ்டார்ச்சும், கார்போஹைட்ரேட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலில் எளிதில் கலந்து கரைந்துவிடும். அதே சமயத்தில், உங்களின் ரத்த குளுக்கோஸ் அளவு முழுமையாக அதிகரிப்பதற்கும் இதுவே காரணமாகும். எனவே, அதை அளவாக உட்கொள்வது நல்லது.
  • அரிசி, எடை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கும். ஏனென்றால், இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்கள் அதிக கலோரிகளைக்  கொண்டுள்ளது. இது நம் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
  • இரவு நேரத்தில் சாதம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். ஆனால், நீங்கள் தூங்கப் போகும்போது, உங்களின் உடல் ஊட்டச்சத்தை ஏற்றுக் கொள்ளாது. இதனால், மறுநாள் காலை உங்களுக்குப் பயங்கர பசி உணர்வு தோன்றும்.
  • நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், சாதத்தை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லதாகும். அதற்குப் பதிலாக சாலட் மற்றும் சூப்பை சாப்பிடலாம். 
  • உங்களால் அரிசியை விட முடியவில்லை என்று நினைத்தால், பழுப்பு அரிசியை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், இது உடல் எடையைக்  குறைப்பதற்கான சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளது.
1) அரிசி உணவைச் சாப்பிட மிகவும் சரியான நேரம் எது?

மதிய நேரமே அரிசி உணவைச் சாப்பிட மிகவும் சரியான நேரம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

2) உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் எந்த அரிசியைத் தவிர்க்க வேண்டும்?

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெள்ளை அரிசியைக் குறைக்க வேண்டும். மேலும், இரவு நேரங்களில் அரிசியைத் தவிர்ப்பது நல்லது.

3) நீரிழிவு நோயாளிகள் வெள்ளை அரிசிக்குப் பதிலாக எதைச் சாப்பிடலாம்?

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெள்ளை அரிசிக்குப் பதிலாகப் பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி அல்லது கருப்பு அரிசி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

The article emphasizes that while rice is a staple source of Carbohydrates and energy, its benefits depend heavily on timing and portion control. The best time to consume rice is during the afternoon (lunch), and those focused on weight loss should strictly avoid rice at night. Furthermore, individuals with diabetes or those seeking more fiber and nutrients should opt for healthier alternatives like brown rice or red/black rice over commonly consumed white rice, which rapidly increases blood sugar levels.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top