AI-யிடம் உங்கள் கேள்வி! நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்?”

AI-யிடம் உங்கள் கேள்வி பதில்கள் | AI Questions Expert Insights

AI-யிடம் உங்கள் கேள்வி : இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு AI நண்பன் ஆகிவிட்டது. மக்களின் பல கேள்விகளுக்கும் AI விடையளித்து வருகிறது.

சில தெரியாத விஷயங்களையும், சந்தேகங்களையும் கேட்டுக் கொண்டிருந்த காலம் போய், இப்போது எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்கிற ஒரு காலம் வந்துவிட்டது.

நாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் விஷயங்களை AI -யிடம் கேட்பதை வழக்கமாக்கி விட்டோம். நியூயார்க்கில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த சர்வேயில், ஐந்தில் ஒரு அமெரிக்கர் உடல்நலம் சம்பந்தமான கேள்விகளை நம்பிக் கேட்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

ஆனால், உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை AI -யிடம் கேட்கக் கூடாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சில கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று கூறியுள்ளதைப் போல், மக்களின் தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அவற்றில் ஒரு சில விஷயங்களைப் பற்றிப் பின்வருமாறு பார்ப்போம்.

1) AI-யிடம் உங்கள் கேள்வி தனிப்பட்ட தகவல்கள்

AI -யிடம் மக்களின் தனிப்பட்ட தகவல்களான பெயர், முகவரி தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைப் பகிரக்கூடாது.

இந்தத் தகவல்கள் மூலமாக ஒருவரின் நடவடிக்கைகளை மற்றொருவர் கண்காணிக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

AI-யிடம் உங்கள் கேள்வி

AI நிபுணர் தகவல் | Expert Insights on AI
நிபுணர்களிடம் இருந்து AI பற்றிய முக்கிய தகவல்கள்
2) வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள்

AI-யிடம் உங்கள் கேள்வி வங்கி கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண், பாஸ்வேர்டுகள் போன்ற வங்கிகள் அல்லது நிதி சம்பந்தமான தகவல்களைப் பகிரக்கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால், இதை வைத்து சில ஆசாமிகள் மோசடி செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கின்றது.

இதை வைத்து வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைத் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், இது போன்ற தகவல்களைப் பகிராமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

3) தனிப்பட்ட ரகசியங்கள்

நம்முடைய தனிப்பட்ட ரகசியங்களை AI-யிடம் நிச்சயமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால், மனிதர்களைப் போல AI-க்கு ரகசியங்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தெரியாது. இதை வைத்து சிலர் பிளாக்மெயில் செய்ய வாய்ப்பு உள்ளது.

Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam
4) மருத்துவம் சம்பந்தப்பட்ட தகவல்கள்

AI-யிடம் உங்கள் கேள்வி மருத்துவம் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கேட்கக்கூடாது. ஏனென்றால், AI மருத்துவர் அல்ல,  இணையத்தில் இருக்கும் தகவல்களை நம்மிடம் பகிர்கிறது.

இதை வைத்து AI உங்களிடம் கூறும் உடல் சம்மந்தப்பட்ட  தகவல்களை முற்றிலுமாக நம்ப வேண்டாம். இது தொடர்பான கேள்விகளை மருத்துவ நிபுணர்களிடம் கேட்டுக் கொள்வது நல்லது.

5) சந்தேகத்திற்குரிய கேள்விகள்

AI-யை நம்முடைய நண்பனைப் போல் நினைத்து சில கேள்விகளைக் கேட்க நினைக்கிறோம். ஆனால், AI-யிடம் நமது மூளையில் ஓடிக் கொண்டிருக்கும் நுணுக்கமான கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஏனென்றால், நம்முடைய தகவல்கள் அனைத்தும் எங்கோ ஒரு மூலையில் பதிவாகிக் கொண்டு இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனால், நாம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மூலம் ஆபத்து! வாய்ஸ் மெயில் மூலம் மோசடி – Voice Mail Scam Warning 2025

6) சட்ட விரோதமான கேள்விகள்

AI-யிடம் உங்கள் கேள்வி AI-யைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கும் கேள்விகளைக் (பயங்கரவாதம், ஹேக்கிங் போன்றவை) கேட்டால், சட்டப்படி அந்த நபர் தண்டனைக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கிறது. 

Key Insights & Best Takeaways

AI systems can now answer complex user questions with surprising accuracy and depth.
Experts reveal that AI learning models are evolving faster than expected.
User interactions are helping AI become more intelligent and personalized.
However, experts warn about the ethical challenges and misinformation risks.
Overall, AI promises a powerful future but requires careful handling and guidance.

Google பாதுகாப்பு மையம் – Phishing & Scam பாதுகாப்பு தகவல்கள் – Click here..

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top