TRAI பணம் மோசடி அலர்ட் : மக்களே உஷார்!

TRAI பணம் மோசடி அலர்ட் 2025 | TRAI Money Fraud Alert Tamil

TRAI பணம் மோசடி அலர்ட் – TRAI அதிகாரிகள் என கூறி மோசடி” : இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருந்தாலும், அதைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி செயல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

மக்களும் தங்களின் அறியாமையால் சில மோசடி கும்பல்களிடம் சிக்கி தங்களின் பணத்தை இழந்து விடுகிறார்கள். இதைத் தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது டிராய் அதிகாரிகள் போல் அழைத்து பணம் பறிக்கும் மோசடி செயல்கள் நடந்து வருகின்றன. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

TRAI பணம் மோசடி அலர்ட்

டிஜிட்டல் பண மோசடி எச்சரிக்கை 2025 | Digital Money Scam Warning Tamil
டிஜிட்டல் மோசடியில் விழிப்புடன் இருங்கள்!
TRAI பணம் மோசடி அலர்ட் – அதிகாரிகளைப் போல் மோசடி

+977-422478388 என்ற எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணானது இந்தியாவில் இருந்து வரவில்லை, நேபாளத்தைச் சேர்ந்தது என்று தெளிவாகத் தெரிகிறது.

கோவிட்-19 அல்லது டிஜிட்டல் கைது மோசடிகள் பற்றிய சமீப விழிப்புணர்வு அழைப்புகள் போலவே இந்த மோசடியாளர்களின் அழைப்புத் தொனி இருக்கின்றது.

ஆனால், இந்த அழைப்பு அதிகாரப்பூர்வ டிராய் அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி! 2025 AI தொழில்நுட்ப வளர்ச்சி – Impact of AI on Human Life
மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்

கடந்த ஆகஸ்ட், 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஒருவரை டிராய் (TRAI) அதிகாரி போல் ஏமாற்றி சுமார் ரூ. 11 லட்சத்தைப் பறித்துள்ளனர். மற்றொரு வழக்கில் 25 வயதான ஐஐடி பம்பாய் பட்டதாரி ஒருவர் இதே போன்ற மோசடியில் ரூ. 7 லட்சத்தை இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோல் பயனர்கள் சமீபத்தில் இது போன்ற ஃபோன் அழைப்புகளைப் பெற்று மோசடி வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

தனி நபர்கள் எவ்வாறு பணத்தை இழக்கிறார்கள்?

தனிநபர்கள் தங்களுக்கு வருகின்ற அழைப்பு உண்மையானது என்று நம்பி அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக, பயனர்களின் ஃபோனில், “உங்கள் எண் செயலிழக்கப்படுவதைத் தவிர்க்க விரும்பினால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மேலும் விவரங்களுக்கு எண் 9-ஐ அழுத்தவும்” என்று அழைப்பு வருகிறது.

தனிநபர்கள் இந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்கும்போது, மோசடி செய்பவர்கள் சிபிஐ அதிகாரிகளைப் போல் ஏமாற்றித் தொடர்பு கொள்கின்றனர். மேலும், மக்கள் “டிஜிட்டல் கைது” செய்யப்படுவதாக அச்சுறுத்தப்படுகின்றனர். இந்த டிஜிட்டல் கைதில் இருப்பவர்களை வீடியோ அழைப்புகளுக்கு வருமாறு மோசடி செய்பவர்கள் கூறுகின்றனர்.

மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மூலம் ஆபத்து! வாய்ஸ் மெயில் மூலம் மோசடி – Voice Mail Scam Warning 2025

மேலும், அவர்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கின்றனர். பின்பு மோசடியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் வங்கி விவரங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பகிருமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

சில சமயங்களில் நேரடியாகவே பண மோசடியில் ஈடுபடுவதாகக் கூறி பணத்தைத் தருமாறு கட்டாயப்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்தும் வகையில் மோசடி கும்பல்கள் “போலீஸ் அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும், உச்ச நீதிமன்ற ஆய்வாளர்களாகவும்” பேசுகின்றனர்.

இது தெரியாமல் மக்கள் தங்கள் மீது இருக்கும் அவதூறு வழக்கிலிருந்து வெளியே வருவதற்கு தங்களது முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

TRAI பணம் மோசடி அலர்ட் – மோசடி கும்பலிடமிருந்து தப்பிப்பது எப்படி?

TRAI பணம் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு இது போன்ற அழைப்புகளை நம்பாமல் இருப்பது நல்லதாகும்.

மேலும், டிராய் (TRAI) அல்லது காவல்துறை போன்ற நிறுவனங்கள் தொலைபேசியில் தனிப்பட்ட விவரங்களைக் கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கூடுதலாக, “டிஜிட்டல் கைது” என்னும்  சொல்லைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், அது போன்ற சட்டப்பூர்வ விதிமுறைகள் எதுவும் இல்லை.

இதைத் தாண்டி யாராவது மிரட்டினால் அந்த அழைப்பைத் துண்டித்து விடுவது நல்லது.

Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam

குறிப்பாக, ஒருவரின் தனிப்பட்ட வங்கி அல்லது பிற முக்கியமான தகவல்களைத் தெரியாத அழைப்பாளர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லதாகும். மோசடி செய்யப்படுவதாக சந்தேகித்தால் உடனடியாக உள்ளூர் காவல்துறை அல்லது சைபர் கிரைம் பிரிவைத் தொடர்பு கொள்வது நல்லதாகும்.

இது போன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பதன் மூலம் மற்ற பயனாளர்களை மோசடிக்காரர்களிடம் சிக்காமல் இருக்க வைக்க உதவியாக இருக்கும்.

Official TRAI Website – Click Here..

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • In 2025, scammers impersonating TRAI officials are targeting the public for money scams.
  • Be extremely cautious of unknown calls claiming to be from TRAI, asking for personal or financial details.
  • Digital money scams are increasing rapidly — verify all official communications directly.
  • TRAI never asks for payment or sensitive information via phone calls or messages.
  • Stay alert, protect your money, and spread awareness to your friends and family!

Comment Box

    Scroll to Top