AI America vs China 2025 – மனிதரை விட புத்திசாலியாக?

AI America vs China in 2025 (மனிதரை விட AI)

AI America vs China : 2025-ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள் AI மற்றும் கிரிப்டோகரன்சிகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி 20, 2025 அன்று டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்கப் போகும் நிலையில், அவர் தலைமையில் ஏற்படப்போகும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

AI America vs China!

2025-யின் புதிய மாற்றங்கள்
டொனால்டு ட்ரம்பின் வணிகம் மற்றும் தொழில்நுட்பக் குழுவில் மிக முக்கிய நபர்களான “எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி” போன்ற பிரபல ஆலோசகர்கள் உள்ளனர். இந்தக் குழு, AI மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற தொழில்நுட்பங்களை வளர்ப்பது குறித்தும், ஒழுங்குபடுத்துவது குறித்தும் முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அமெரிக்காவின் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சியை அடையும். மேலும், AI துறையின் ஒழுங்கு முறைகள் புதிய அடித்தளத்துடன் உருவாக்கப்படும். அது மட்டுமில்லாமல், கிரிப்டோகரன்சிகளை சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த புதிய விதிமுறைகள் வரக்கூடும்.

AI வளர்ச்சியில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேறுபாடுகள்

AI outsmarting humans (AI vs Human Intelligence 2025)
2025: AI மனிதரை விட புத்திசாலி

AI ஒழுங்குமுறைத் திட்டத்தில் வரப்போகும் மாற்றங்கள் அட்லாண்டிக்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை அணுகுமுறையையும், பிரிட்டனின் புதிய தளர்வான கொள்கை வழிமுறையையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுங்குமுறை அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்கிறது. மேலும், இது “மைல்கல் AI” சட்டங்களை உருவாக்குகிறது.

பிரிட்டன் “லைட் டச்” அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் குறைந்த கட்டுப்பாடுகளுடன் நெருக்கடி இல்லாத வழியாக இருக்கும். அமெரிக்கா அதிக சுதந்திரமான கொள்கைகளை உருவாக்குவதன் மூலமாக சர்வதேச AI வளர்ச்சியில் ஒரு முன்னணியாக இருக்கக்கூடும்.

2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி! 2025 AI தொழில்நுட்ப வளர்ச்சி – Impact of AI on Human Life

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா-சீனா நிலை என்ன?

ட்ரம்ப்பின் அரசியல் திட்டம்
ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அடுத்த அமெரிக்க நிர்வாகத்தில் பயனடையும் முக்கிய துறைகளில் ஒன்றாக AI இருக்கும் என்று கூறினார்.

அதற்கு மின்சாரக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான “எலான் மஸ்க்கை” ஒரு முக்கியப் பொறுப்பில் நியமித்தார்.

மேலும், ட்ரம்ப்பை ஆதரிக்கும் அமெரிக்க பயோடெக் தொழில் முனைவோரான விவேக் ராமசாமி, 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு, டிரம்ப்பின் அரசாங்கத் துறைகளை முன்னேற்றுவதற்கு இணைந்துள்ளார்.

இதன் மூலம் ட்ரம்ப் தன்னுடைய நிர்வாகத்தில் AI போன்ற புதிய துறைகளில் முன்னேற்றம் காட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க-சீனா போட்டி: AI America vs China !
AI தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை வீழ்த்த சீனா கடுமையாக முயற்சி செய்து வருகின்றது. அதே நேரத்தில், AI வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான தொழில்நுட்பங்களுள் ஒன்றான “என்விடியா” நிறுவனம் தயாரிக்கும் சிப்ஸ்களை(chips) சீனாவிற்கு கிடைக்காமல் அமெரிக்கா தடை செய்துள்ளது.

“வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!” "வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை – WhatsApp Scam Mistakes Tamil 2025"

இதனால், சீனா தனது சொந்த சிப்ஸ்களை உருவாக்க முயற்சித்து வருகின்றது. இந்தப் போட்டியின் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பதற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள், “இந்தப் போட்டியில் மனிதரை விடப் புத்திசாலியாக செயல்படும் AI உருவாக வாய்ப்பு இருக்கின்றது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

2025 நுண்ணறிவு வளர்ச்சி – MIT Technology Review : https://www.technologyreview.com

சுகாதாரத்தில் AI பயன்பாடு – உலக சுகாதார அமைப்பு (WHO) – https://www.who.int

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox  

Key Insights & Best Takeaways!

America and China are in a fierce race for AI dominance, with both nations investing heavily in AI technologies.
AI is now surpassing human intelligence in areas like machine learning, data analysis, and automation.
This competition is not just about technology but also about global economic power and security.
The future of AI supremacy will determine the balance of power between the world’s largest economies in 2025 and beyond.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *