OnePlus 13 & 13R: புதிய மொபைல்கள் அறிமுகம்! OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகிய புதிய மாடல் மொபைல் ஃபோன்கள் ஜனவரி 7, 2025 அன்று இந்தியா உட்பட பல உலகளாவிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வரப்போகும் இந்த புதிய மொபைல் ஃபோன்களின் வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள் மற்றும் இதன் பல முக்கிய அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
சீனாவில் வெளியிடப்பட்ட மாடல்கள்
OnePlus 13:
இந்த மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகமானது.
OnePlus 13R:
இது சீன சந்தையில் OnePlus Ace 5 என்ற பெயரில் டிசம்பர் 26, 2024 அன்று வெளியிடப்பட்டது. இந்த மாடல் “மறுபெயரிடப்பட்ட மாடல்” என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
1) உயர்தர கேமரா அமைப்பு வசதி இருக்கின்றது.
2) நீண்ட காலத்திற்கான பேட்டரி திறனைக் கொண்டது.
3) துரித சார்ஜிங் வசதி உடையது.
4) “ஸ்னாப் டிராகன் சிப்செட்” அல்லது “மீடியா டெக் டைமெண்சிட்டி சிப்செட்டின்” ஆதரவைக் கொண்டுள்ளது.
OnePlus 13 & 13R

கேஸ் விருப்பங்கள்
OnePlus நிறுவனம் தற்போது தொலைபேசிகளுக்கான அதிகாரப்பூர்வ கேஸ் விருப்பங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கேஸ்கள் “மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங்” உடன் வருவதால் இது கூடுதல் வசதிகளை வழங்குகின்றன.
1) வூட் கிரேன் மேக்னடிக் ஹாஃப் பேக் (Woot Crate Magnetic Half Pack)
இந்த கேஸ் ஒரு மரத்தின் தோற்றத்தை மாதிரியான வடிவமைப்புடன் வரும். இது தொலைபேசிக்கு இயற்கையான தோற்றத்தை அளிக்கும். மேலும், மொபைலுக்குப் பாதுகாப்பை வழங்குவதுடன் “மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங்” வசதியுடனும் இருக்கும்.
2) அராமிட் ஃபைபர் மேக்னடிக் கேஸ் (Aramid Fiber Magnetic Case)
இந்த கேஸ் மெல்லியதாக இருப்பதுடன் எளிதாக கையாளக்கூடிய வசதியும் இருக்கின்றது. இது சிறந்த தொழில்நுட்ப தோற்றத்தைக் கொண்டிருக்கும். இந்த கேஸின் எடை குறைவாக இருப்பதால் கையாளுவதற்கு எளிமையாக இருக்கும். இதுவும் “மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங்” வசதியுடன் இருக்கும்.
Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்!
சிப் செட்டின் சிறப்பம்சங்கள்
OnePlus 13:
இது Snapdragon 8 Elite SoC மூலம் இயக்கப்படும். இது சிறந்த செயல்திறனையும், பயன்பாட்டையும் உறுதி செய்யும்.
OnePlus 13R:
இந்த மாடல் Snapdragon 8 Gen 3 SoC-யைக் கொண்டிருக்கும். இது புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் வகையில் இருக்கும்.
தோற்றம் மற்றும் வண்ணங்கள்
OnePlus 13:
1) இது IP68 மற்றும் IP69 சான்றுகளைக் கொண்டது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறனைக் கொண்டது.
2) Arctic Dawn, Black Eclipse, மற்றும் Midnight Ocean ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
OnePlus 13R:
1) இதுவும் IP68 மற்றும் IP69 சான்றுகளைக் கொண்டது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறனைக் கொண்டது.
2) Astral Trail மற்றும் Nebula Noir வண்ணங்களில் கிடைக்கும்.
பேட்டரி வசதிகள்
இரு மாடல்களிலும் 6000mah பேட்டரி கெப்பாசிட்டி இருக்கின்றது. AI மூலம் புகைப்படங்களை எடிட் செய்து கொள்ளலாம். மேலும், இது பயனர்களுக்கு சிரமமற்ற அனுபவத்தை அளிக்கும்.
சிறந்த ரோபோக்கள் 2024 – மனிதர்களை மிஞ்சும் AI
எங்கு கிடைக்கும்?
இந்த புதிய மொபைல் மாடல்களை OnePlus இந்தியா இணைதளம் மற்றும் அமேசான் வழியாக வாங்கலாம். முந்தைய மாடல்களை ஒப்பிடும்போது, இந்தப் புதிய மாடல்கள் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways!
OnePlus 13 & 13R are making waves with powerful Snapdragon 8 Gen 4 chips, a sleek design, and upgraded camera technology.
These phones are expected to offer smoother performance with OxygenOS 15 and 5G optimization.
If you’re looking for a premium Android phone in 2025, OnePlus might just take the crown.
With OnePlus 13 series launch, the brand continues to compete strongly with Samsung and iQOO.