சிறந்த ரோபோக்கள் 2024 – மனிதர்களை மிஞ்சும் AI

சிறந்த ரோபோக்கள் 2024 மிஞ்சும் ரோபோக்கள் (Best Robots of 2024 – Human-like)
மனிதர்களை மிஞ்சுமா?

சிறந்த ரோபோக்கள் 2024 : தற்போதைய காலகட்டத்தில் மக்களின் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் அதற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இது மக்களின் வேலையைக் குறைக்கும் படியாகப் பயனுள்ள வகையில் இருக்கின்றது. மக்களின் தேவைக்கு ஏற்ப ரோபோடிக் தொழில்நுட்பங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களின் சாயலில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறந்த ரோபோக்கள் 2024 படைத்த சாதனைகள்

கடந்த 2024-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சாக்கர் பாட் (Soccer Bots) ரோபோட் முதல் மனிதத் தோல் செல்களால் உருவாக்கப்பட்ட மெஷின்கள்  (Machines with Human Skin Cells) வரை உள்ள வளர்ச்சிகள் புதிய தொழில்நுட்பத்தின் மற்றொரு பாதையை உருவாக்கியுள்ளன. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

சாக்கர் பாட்

சாக்கர் பாட் என்பது கால் பந்து விளையாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு AI தொழில்நுட்ப ரோபோட் ஆகும். இது பந்து எந்த திசைக்குச் செல்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு துல்லியமாக இலக்குகளை அடையும் திறனைக் கொண்டது. இது பந்தின் வேகம், கோணம் மற்றும் எந்த திசைக்குச் செல்கின்றது என்பவற்றைக் கண்காணித்து அதன்படி செயல்படுவதில் மிகவும் திறமை வாய்ந்தது. மேலும், விளையாட்டின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு அந்த அணியின் செயல்திறனை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டது.

“வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!” "வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை – WhatsApp Scam Mistakes Tamil 2025"

பயன்பாடுகள்

கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ளும் மனித வீரர்களுக்குத் துல்லியமான பயிற்சியை இந்த ரோபோட்கள் வழங்கும்.

இதன் மூலமாக விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் ரோபோக்களுக்கும், மனித வீரர்களுக்கும் இடையே போட்டிகள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.

மனித தோல் செல்கள் கொண்ட மெஷின்கள்
2024-இல் AI மூலம் இயக்கப்படும் மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள் (AI-powered Human-like Robots of 2024)
AI மூலம் இயக்கப்படும் மனிதர்களை மிஞ்சும் 2024-இல் சிறந்த ரோபோக்கள்

இந்த சிறந்த ரோபோக்கள் 2024 மீது தோலின் உயிரியல் பண்புகளான அழுத்தம், வெப்பநிலை, உணர்திறன், செல்கள் போன்றவை இருக்கும். இந்த ரோபோக்கள் “ஸ்டெம் செல்கள் மற்றும் பயோ ப்ரிண்ட்” தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மனித தோலின் இயல்புகளைக் கொண்டிருப்பதால் இவை மனிதர்கள் செய்யும் செயல்களைச் செய்யும் தன்மை உடையவை. மேலும், மனிதர்களின் முகபாவனைகளையும் இது வெளிப்படுத்தும்.

பயன்பாடுகள்

இந்த ரோபோக்களை மருத்துவப் பரிசோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், மனிதர்கள் போல் இருக்கும் Humanoid ரோபோக்களையும் உருவாக்க முடியும்.

அது மட்டுமில்லாமல், மனித உணர்ச்சிகள் மற்றும் மனிதத் தோலின் செயல்பாடுகளை ஆராய்வதற்கு இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்கும்.

சிறந்த ரோபோக்கள் 2024 – எதிர்காலம்?

2024-யில் வெளிவந்த “சாக்கர் பாட் மற்றும் மனித தோல் செல்கள் கொண்ட மிஷின்கள்” ஆகியவை ரோபோடிக்ஸ் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளன.

2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி! 2025 AI தொழில்நுட்ப வளர்ச்சி – Impact of AI on Human Life

இந்த ரோபோக்களின் கண்டுபிடிப்பு மூலமாக மனிதர்களுக்கும், இயந்திரத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து ஒரு புதிய வருங்காலத்தை உருவாக்க முடியும்.

மேலும், இந்தக் கண்டுபிடிப்புகள் உலக அளவில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு ஆணிவேராக இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Key Insights & Best Takeaways

The best robots of 2024 showcase groundbreaking advancements in AI-powered robotics, designed to replicate human-like robots in various industries. These robots are transforming sectors like healthcare and manufacturing by improving efficiency. As AI robots continue to evolve, their role in robotics technology will reshape both personal and professional landscapes, creating new opportunities and challenges in the tech industry.

2025 நுண்ணறிவு வளர்ச்சி – MIT Technology Review : https://www.technologyreview.com

சுகாதாரத்தில் AI பயன்பாடு – உலக சுகாதார அமைப்பு (WHO) – https://www.who.int

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Comment Box

    Scroll to Top