சீனாவில் HMPV வைரஸ்! மீண்டும் மீண்டுமா?

சீனாவில் HMPV வைரஸ் பரவல் – China HMPV Virus Outbreak

சீனாவில் HMPV வைரஸ் :

2019-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஒரு புள்ளியாக பரவத் தொடங்கிய “கொரோனா வைரஸ்” உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இது மக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாக மாற்றியது. கொரோனா வைரஸ் பரவிய போது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குக் கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகின. ஆனால், பல குடும்பங்களில் இதனால் இழப்பு ஏற்பட்டது. இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது.

சீனாவில் HMPV வைரஸ் பரவல்!

தற்போது சீனாவில் மற்றொரு வைரஸ் பரவிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் இப்போது HMPV என்ற “மனித மேட்டா நிமோ வைரஸ்” மக்களிடையே வேகமாகப் பரவிக் கொண்டு வருகின்றது. இது கொரோனாவை அடுத்து பெருந்தொற்றாக மாறுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் பற்றியும், இதன் தாக்கத்தைக் குறித்தும் இங்கு விரிவாகப் பார்ப்போம்.

சீனாவில் பரவிக் கொண்டிருக்கும் வைரஸின் பெயர் “ஹியூமன் மெட்டா நிமோ வைரஸ்”(HMPV). இந்த வைரஸ் 2001-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கோவிட் போலவே சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் ஆகும். சாதாரண சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளில் தொடங்கி, பிறகு நுரையீரலைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டது.

HMPV யாரைப் பாதிக்கும்?

HMPV வைரஸ் அறிகுறிகள் – Symptoms of HMPV Virus in Children
குழந்தைகள் HMPV வைரஸால் பாதிக்கப்படுவதில் அதிக சதவிகிதம்

இந்த வைரஸ் பெரும்பாலும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கும். குறிப்பாக, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய தன்மை உடையது. அத்தோடு, 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களையும் பாதிக்கும். மேலும், நுரையீரல் பாதிப்பு அல்லது சுவாசக் கோளாறு உள்ளவர்களை இந்த வைரஸ் பாதிக்கும். அது மட்டுமில்லாமல், இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களைப் பாதிக்கக் கூடும். 

HMPV அறிகுறிகள்

இந்த வைரஸ் தொற்று பரவி 3 முதல் 6 நாட்களுக்குள் இருமல், சளி, மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் முதற்கட்டமாக வரத் தொடங்கும். இதற்கு அடுத்தக் கட்டமாக காய்ச்சல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் வரும். மேலும் சுவாசப் பிரச்சனை, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இது மூலமாக வரத் தொடங்கும். அது மட்டுமில்லாமல் நிமோனியா, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லதாகும்.

7 Days Diet Plan – உடல் எடை குறைக்க தமிழ் டிப்ஸ் 2025! 7 Days Diet Plan – உடல் எடை குறைக்க சிறந்த தமிழ் டிப்ஸ் 2025 | Weight Loss Tips in Tamil

எவ்வாறு பரவும்?

இந்த வைரஸ் மனிதர்களுக்கிடையே பரவக்கூடியதால் ஒருவருக்கு இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது அவர்களுடன் நெருங்கி பழகுவதன் மூலம் இது பரவ வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தொடுதல் மூலமாகவும், அசுத்தமாக கைகளை வைத்திருப்பதாலும், பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்பு கொள்வதாலும் இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.

சீனாவில் HMPV வைரஸ் எப்படி தடுக்கலாம்?

கொரோனா வைரஸ் வந்தபோது பின்பற்றிய தற்காப்பு நடவடிக்கைகளையே இப்போதும் பின்பற்ற வேண்டும். 

1) சோப் அல்லது சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2) அசுத்தமான கைகளால் முகத்தைத் தொடாமல் இருக்க வேண்டும்.

3) முகக் கவசம் அணிவது அவசியமாகும்.

4) தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5) அடிக்கடி தொடும் இடங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் பரவக்கூடிய தொற்றைத் தடுக்கலாம்.

மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மூலம் ஆபத்து! வாய்ஸ் மெயில் மூலம் மோசடி – Voice Mail Scam Warning 2025

இதற்கு சிகிச்சை என்ன?

இந்த வைரஸ் தொற்றிற்கு குறிப்பிட்ட சிகிச்சை முறையோ, மருந்தோ இல்லை. சாதாரணமாக காய்ச்சல், சளி மற்றும் வலி நிவாரணத்திற்கான மருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

முக்கியமாக, பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக ஓய்வு எடுதுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் 1 வாரத்திற்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த பெருந்தொற்று?

முன்னதாக சீனாவில் ஊஹான் வைரஸ்தான் கொரோனாவாக உருப்பெற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த HMPV வைரஸ் வந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிலையமும் இதைத் தீவிர நோய் பரவலாக அறிவிக்கவில்லை என்றாலும், இதன் பரவலை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

“போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் – இரட்டிப்பு லாபம்!” போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் – Double Profit Investment Scheme

Key Insights & Best Takeaways!

  • HMPV (Human Metapneumovirus) is spreading rapidly in parts of China, especially during the winter season.
  • It mostly affects children and elderly people, causing symptoms like fever, cough, breathing trouble, and cold-like conditions.
  • Though not as dangerous as COVID-19, it still requires early detection and proper care.
  • China’s hospitals are witnessing a rise in HMPV cases, but authorities claim the situation is under control.
  • No need to panic, but awareness and precautions are important, especially in crowded areas or travel hubs.
  • Global health experts are monitoring the outbreak closely for any major developments.

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox  

Comment Box

    Scroll to Top