அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் இந்தியாவில் பல்வேறு துறைகள் இருந்து வந்தாலும் அதில் மிகவும் பழமையான ஒன்று “இந்திய அஞ்சல் துறை”. அஞ்சல் துறையின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்து வருகின்றன. இந்தத் துறையை லாபத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று தகவல் தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சரான “ஜோதிராதித்ய சிந்தியா” அவர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Table of Contents
அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – Digital Banking in Post Offices
இந்திய அஞ்சல் துறையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பற்றி கலந்துரையாட தகவல் தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சரான சிந்தியா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இவர்களின் சந்திப்பானது இந்திய அஞ்சல் துறையை 2029-ஆம் ஆண்டிற்குள் லாபத்திற்குக் கொண்டுவரும் நோக்கில் நடைபெற்றுள்ளது.

மூலதன செலவினத்தின் கோரிக்கைகள்:
இந்திய அஞ்சல் துறையை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கு, அந்தந்த அதிகாரிகள் தங்களின் மூலதன செலவினக் கோரிக்கைகளை நிதியமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். அஞ்சல் துறை அதிகாரிகள், நிதி அமைச்சகத்தின் துணைக்குழுவுடன் சேர்ந்து புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை மாற்றி அமைப்பதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்காகத் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
2025 புதிய விதிகள்
அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – Digital Banking in Post Offices
புதிய திட்டங்கள்
சிந்தியா இந்திய அஞ்சல் துறைக்கான புதிய மேம்பாட்டுத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளார். இந்தத் திட்டங்கள்:
அனைத்து செயல்முறைகளையும் டிஜிட்டல் மயமாக்கி மக்களின் தேவையை அதிகரிக்கச் செய்வது.
செலவுகளைக் குறைத்தல்:
செயல்முறைக்கான சிக்கனத்தைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது.
உள்கட்டமைப்பு மேம்பாடு:
தபால் நிலையங்கள் மற்றும் பணியாளர்களின் குடியிருப்பு தரத்தை மேம்படுத்துதல்.
பிபிஆர் மற்றும் வணிக வளர்ச்சி – Business Process Reengineering
பிபிஆர் (Business Process Reengineering) பயிற்சி மூலம் துறைகளில் திருத்தங்கள் ஏற்படும். மேலும், சேவைக்கான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக B2B மற்றும் B2C சேவைகளின் தரத்தை உயர்த்துகின்றது. அது மட்டுமில்லாமல், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இது இருக்கும். இந்தியாவின் வழிகாட்டுதல்களின் கீழ் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தி இந்திய அஞ்சல் துறையை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்!
Post Office Financial Services India – பங்கை அதிகரித்தல்
இந்திய அஞ்சல் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் இந்திய அஞ்சல் துறை தனது பங்குகளை 5-7 ஆண்டுகளில் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல், இது அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளுக்கான தரத்தை மேம்படுத்தும். மேலும், வருவாய் வளர்ச்சிக்கான புதிய பாதையாக இது அமையும்.
அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – வாடிக்கையாளர்களின் திருப்தி
வாடியக்கையாளர்களின் திருப்தியைக் கருத்தில் கொண்டு துறையின் செயல்பாடுகளை நேர்த்தியான மற்றும் திறமையான சேவைகளின் மூலம் சேவைகள் கொண்டுவரப்படும். இந்தத் தொடர் செயல்முறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருங்காலத்தில் அதிக வருவாயை ஈட்டும் வகையில் இருக்கும்.
சிந்தியா 2007-இல் இணையமைச்சராக இருந்தபோது, தபால் நிலையங்களின் தரத்தை உயர்த்தியுள்ளார். தற்போது, புதிய தலைமுறைக்கான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். 2029-ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் செயல்திறனை அதிகரிக்கும் திட்டங்களை முன்வைத்துள்ளார்.
இந்த செயல்முறைகள் மூலம் இந்திய அஞ்சல் துறையின் புகழும், வருமானமும் அதிகரிக்கும். மேலும், இது வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு செல்வதை உறுதி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மூலம் ஆபத்து!
- இந்திய அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ இணையதளம் – India Post Digital Services
- இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) அதிகாரப்பூர்வ இணையதளம் – IPPB Digital Banking
- தொலைத்தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு – Postal & Telecom Updates
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வ இணையதளம் – RBI Digital Payments
- மாற்றம் தொடர்பான அரசு அறிவிப்புகள் – பத்திரிக்கை தகவல் பணியகம் (PIB) – Latest Government Announcements
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
Quick English Recap – Key Insights & Best Takeaways!
India Post is undergoing a digital transformation, integrating AI, automation, and fintech solutions to enhance efficiency. New digital banking services and cashless transactions are being introduced, making post offices a key part of India’s financial network. The government is also focusing on rural digital post office growth, ensuring seamless access to modern postal and banking services. Stay updated with India Post and Digital India initiatives for the latest advancements in postal digitalization.














