இஸ்ரேல் ஈரான் போர் தொடங்கியது : பெட்ரோல் முதல் தங்கம் வரை! இந்தியப் பொருளாதாரத்திற்கு வரவிருக்கும் பேராபத்து!

Israel Iran War Impact on India - தங்கம் மற்றும் பெட்ரோல் விலை ஆகிய விலைவாசி உயர்வு குறித்த விளக்கம்!

Israel Iran War Impact on India: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நேரடித் தாக்குதல்கள் உலக அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இந்தப் போர்ச் சூழல், உலக நாடுகளைத் தாண்டி, இந்தியாவின் பொருளாதாரம், பெட்ரோல் விலை, தங்கம் விலை மற்றும் பங்குச்சந்தையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இந்தியா தனது 50% கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகள் வழியாகவே இறக்குமதி செய்கிறது. போரினால் சப்ளை பாதிக்கப்படுவதால், 60 டாலராக இருந்த கச்சா எண்ணெய் 66 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் (பணவீக்கம்) உயர வாய்ப்புள்ளது.

உலகளாவிய பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையில் குறுகிய கால வீழ்ச்சிகள் ஏற்படலாம். எனினும், மற்ற நாடுகள் தலையிட்டு இந்தப் போரைக் கட்டுக்குள் கொண்டுவந்தால், சந்தை விரைவில் சீரடைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளது.

உலக நாடுகள் இடையே போர் போன்ற பதற்றங்கள் வரும்போது, அது முதலில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் தங்கம் விலை தாறுமாறாக உயர்வதற்குப் பொதுமக்கள் அதிகம் வாங்குவது காரணம் அல்ல. பல நாடுகளின் அரசாங்கங்கள் அமெரிக்க டாலருக்குப் பதிலாகத் தங்கள் பொருளாதாரப் பாதுகாப்பிற்காகத் தங்கத்தை அதிக அளவில் வாங்கிச் சேர்ப்பதுதான் முக்கியக் காரணம்.

ஆனால், கடந்த ஜனவரி மாதத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத அளவுக்கு ஒரு பெரிய உச்சத்தைத் தொட்டுவிட்டன. அதனால், இனியும் தங்கம் விலை அந்த உச்சத்தைத் தாண்டிப் பெரிய அளவில் தொடர்ச்சியாக உயர்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மாறாக, இந்த விலையேற்றத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே தங்கம் வாங்கி வைத்திருப்பவர்கள் லாபத்திற்காக அதை விற்கத் தொடங்குவார்கள் என்பதால், இனி வரும் நாட்களில் மார்க்கெட்டில் தங்கம் விற்பனை (Selling Pressure) அதிகரிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

இந்தப் போர்ச் சூழலைச் சமாளிக்க இந்தியாவிடம் போதுமான பொருளாதார பலம் உள்ளது. குறிப்பாக, நமது அந்நியச் செலாவணி (Foreign Exchange) கையிருப்பு 725 பில்லியன் டாலர்களாக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. எனவே, போர் மிக நீண்ட காலம் நீடிக்காத வரை, பொருளாதார வீழ்ச்சி குறித்து இந்தியா இப்போதைக்கு அச்சப்படத் தேவையில்லை.

(Updated பிப்ரவரி 28, 2026 – 5:00 PM)

இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 15,550 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 16,964 ஆகவும், 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 13,300 ஆகவும், 9 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 6,362 ஆகவும் உள்ளது.

(Updated பிப்ரவரி 28, 2026 – 5:15 PM)

இன்று வெள்ளி விலை 1 கிராம் ₹ 320 ஆகவும், 1 கிலோ வெள்ளி விலை ₹ 3,20,000 ஆகவும் உள்ளது.

1) இஸ்ரேல் ஈரான் போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

கச்சா எண்ணெய் விலை 60 டாலரிலிருந்து 66 டாலராக உயர்ந்துள்ளதால், வருங்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

2) இஸ்ரேல் ஈரான் போர் பதற்றத்தால் இனி வரும் நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா?

தங்கம் ஏற்கனவே வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுவிட்டதால், இனி விலை உயருவதை விட லாபத்திற்காக விற்கும் நிலையே (Selling Pressure) அதிகம் காணப்படும்.

3) இந்த உலகளாவிய போர் பதற்றத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுமா?

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 725 பில்லியன் டாலர்களாக மிகவும் வலுவாக உள்ளதால், இப்போதைக்கு எந்தவிதப் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படாது.

Israel Iran War Impact on India: The escalating Israel-Iran conflict has triggered immediate volatility in energy markets and global logistics, evidenced by a rise in crude oil prices and significant disruptions to West-bound flight paths. While these tensions have pushed gold and silver to record highs in early 2026, India remains fundamentally resilient due to its record-breaking foreign exchange reserves of approximately $725 billion, which provide a robust buffer against external shocks. Short-term market fluctuations and inflationary pressures on essential goods are expected; however, the domestic economy is well-positioned to stabilize provided the conflict remains contained and does not lead to a prolonged closure of vital trade routes.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top