TN Schemes
தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் எளிதில் சென்றடையும் வகையில், மாணவர்களின் கல்வி முதல் விவசாயிகளின் வாழ்வாதாரம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான தகவல் பெட்டகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Schemes – வகை வாரியாக பட்டியல்
பெண்கள் நலத்திட்டங்கள்
| Scheme | யார் பயன்பெறலாம்? | பயன்கள் |
|---|---|---|
| ➜ விடியல் பயணம் | பெண்கள் மட்டும் | இலவச பேருந்து பயணம் |
| ➜ அரசு சேவை இல்லங்கள் | பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். | பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் சத்தான உணவு. |
| வேலை பார்க்கும் பெண்களுக்கு விடுதி ➜ | வேலைக்காக வெளிநகரம் செல்லும் பெண்கள். | குறைந்த செலவு, அதிக பாதுகாப்பு. |
| திருமண நிதி உதவி ➜ | பெற்றோரை இழந்த ஏழை பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்கள். | திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யம் தங்கம் வழங்கப்படும். |
| EVR Maniammaiyar திருமண நிதி உதவி ➜ | ஏழை விதவைப் பெண் அவரின் மகளுக்காக விண்ணப்பிக்கலாம். | திருமண நிதி உதவி மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துதல். |
| Tamil Nadu Inter Caste Marriage Assistance Scheme ➜ | கலப்பு சாதி திருமண ஜோடி | நிதி உதவி மற்றும் தங்க நாணயம் |
| Dr Muthulakshmi Reddy Maternity Benefit Scheme ➜ | ஏழை கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள். | நிதிப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய மகப்பேறு. |
| Tamil Nadu Cradle Baby Scheme ➜ | பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றோர். | பாதுகாப்பான குழந்தை ஒப்படைப்பு மற்றும் பெண் குழந்தை உரிமை பாதுகாப்பு. |
| Girl Child Protection Scheme ➜ | பெண் குழந்தைகளின் பெற்றோர். | கல்வி பாதுகாப்பு மற்றும் நிதி. |
| கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ➜ | குடும்பத் தலைவி பெண்கள். | மாதம் ரூ.1000 உதவி மற்றும் பெண்கள் நலன் உறுதி |
விவசாய நலத்திட்டங்கள்
| Scheme | யார் பயன்பெறலாம்? | பயன்கள் |
|---|---|---|
| Integrated Horticulture Development Scheme TN ➜ | தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள். | சாகுபடிக்கு அரசு மானியம். |
| Strategic Rice Production Programme ➜ | அனைத்து நெல் சாகுபடி விவசாயிகள். | நெல் விளைச்சல், வருமான உயர்வு. |
| National Agricultural Development Programme ➜ | விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். | இயந்திரங்கள் மற்றும் விதைகளுக்கு மானியம். |
| Maize Development Scheme ➜ | மக்காச்சோளம் விவசாயிகள் மற்றும் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டோர். | சாகுபடி அறிவு மேம்பாடு மற்றும் வருமானத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி |
| Kalaignar All Villages Integrated Agriculture Scheme ➜ | கிராமப்புற விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நில உரிமையாளர்கள் | விவசாய வளங்கள் மேம்பாடு மற்றும் கிராமப் பொருளாதார வளர்ச்சி |
| TNIAMP Tamil Nadu Irrigation Scheme ➜ | வணிக அனுபவம் கொண்டவர்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழிலாளர்கள். | வணிக விரிவாக்க உதவி மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆதரவு. |
| குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் ➜ | குறுவை விவசாயிகள் மற்றும் அரசு பதிவு செய்யப்பட்டோர். | விதைகள், உரங்கள் வழங்குதல் மற்றும் வருமானத்தை உயர்த்துதல். |
| மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திர மானியத் திட்டம் ➜ | விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் | விளைபொருள் மதிப்பைக் கூட்டுதல் மற்றும் அதிக லாபம் ஈட்டுதல். |
| உழவர் நலத்துறை திட்டம் ➜ | அனைத்து கிராம விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட உழவர்கள் | நேரடி விவசாய ஆலோசனை மற்றும் வருமானத்தைப் பெருக்குவதற்கான உதவி. |
| வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் ➜ | சிறு, குறு விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாடகை மையங்கள். | இயந்திரங்கள் 50% மானியம் மற்றும் நேரமும் உழைப்பும் குறைதல். |
| நம்மாழ்வார் விருது ➜ | உயிர்ம விவசாயத்தில் ஈடுபட்டோர் மற்றும் குறைந்தது 1 ஏக்கர் வைத்திருக்க வேண்டும். | ரூ.2 லட்சம் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம். |
கல்வி நலத்திட்டங்கள்
| Scheme | யார் பயன்பெறலாம்? | பயன்கள் |
|---|---|---|
| ➜ 8 ஆம் வகுப்புக்கு மேல் மாணவர்களுக்கு அரசு உதவி! | மாற்றுத்திறனாளிகள் | மாற்றுத்திறனாளி மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவித்தல். |
| Perarignar Anna Memorial Award ➜ | BC MBC DNC மாணவர்கள் மற்றும் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்கள். | ஆண்டுதோறும் ஊக்கத் தொகை மற்றும் கல்வி ஊக்குவிப்பு விருது. |
| Post Matric Scholarship ➜ | 10ஆம் வகுப்புக்குப் பிந்தைய மாணவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன மாணவர்கள். | கல்விக் கட்டண உதவி மற்றும் மாதாந்திரப் பராமரிப்பு உதவித்தொகை. |
| முதலமைச்சர் காலை உணவு திட்டம் ➜ | அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்கள். | இலவச சத்தான காலை உணவு. |
| மதிய உணவு திட்டம் ➜ | அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள். | இலவச சத்தான மதிய உணவு. |
| வானவில் மன்றம் ➜ | அரசு பள்ளி 6–8 மற்றும் நடுநிலை அரசு மாணவர்கள். | செய்முறை அறிவியல் கற்றல் மற்றும் STEM ஆர்வம் வளர்ச்சி. |
| எண்ணும் எழுத்தும் திட்டம் ➜ | அரசுப் பள்ளி ஆரம்ப மாணவர்கள். | அடிப்படை வாசிப்பு, கணிதத் திறன். |
| தமிழ் புதல்வன் ➜ | அரசுப் பள்ளி மாணவர்கள். | மாதம் ரூ.1000 கல்வி உதவி. |
| அன்புக் கரங்கள் திட்டம் ➜ | பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள். | மாதந்தோறும் ரூ.2000 உதவி. |
| LIC Golden Jubilee Scholarship Scheme ➜ | பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்கள். | உயர்கல்விக்கான நிதி உதவி. |
| நான் முதல்வன் உதவித்தொகைத் திட்டம் ➜ | தமிழகப் பட்டதாரி UPSC மாணவர்கள். | இலவச பயிற்சிக்கான நிதியுதவி. |
வேலைவாய்ப்பு & திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
| Scheme | யார் பயன்பெறலாம்? | பயன்கள் |
|---|---|---|
| கலைஞர் கைவினைத் திட்டம்! ➜ | கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் | ரூ. 3 லட்சம் வரை மானியம். |
| TABCEDCO Loan Scheme ➜ | BC / MBC / DNC பிரிவினர்கள். | குறைந்த வட்டியில் கடன். |
| Tamil Nadu youth loan scheme ➜ | தமிழக இளம் தொழில்முனைவோர். | மானியத்துடன் வங்கிக் கடன். |
| New Entrepreneur-cum-Enterprise Development Scheme ➜ | முதல் தலைமுறைத் தொழில்முனைவோர். | மானியத்துடன் வங்கி கடன். |
| Annal Ambedkar Business Champions Scheme ➜ | SC/ST முதல் தலைமுறை தொழில்முனைவோர். | 35% அரசு மூலதன மானியம். |
| நீயே உனக்கு ராஜா திட்டம் ➜ | கலை ஆர்வமுள்ள தமிழக இளைஞர்கள். | இலவச பயிற்சி மற்றும் மாத உதவித்தொகை. |
| ELITE திட்டம் ➜ | தமிழ்நாட்டில் தகுதியுடைய விளையாட்டு வீரர்கள். | ரூ.30 லட்சம் வரை விளையாட்டு வீரர்களுக்கு உதவி. |
சமூக நலத்திட்டங்கள்
| Scheme | யார் பயன்பெறலாம்? | பயன்கள் |
|---|---|---|
| ➜ பசுமை வீடு திட்டம் – இலவச சூரிய சக்தி வீடு! | நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளித்தல். | 100% அரசு நிதியில் வீடு வழங்குதல். |
| ➜ உங்க கனவ சொல்லுங்க திட்டம் : தமிழக அரசின் புதிய முயற்சி! | பட்டா மாறுதல், சான்றிதழ்கள், மின் இணைப்பு போன்ற 15-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த குறைகளைத் தீர்த்தல். | மக்களின் நீண்டகாலத் தேவைகளைத் தொகுத்து வருங்காலத் திட்டங்களைத் தீட்டுதல். |
| ➜ கலைச்செம்மல் விருது வழங்கும் திட்டம் – ரூ. 1 லட்சம் பரிசு! | சிறந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் | சாதனை படைத்த மூத்த கலைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பளித்தல். |
| ➜ தமிழக அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் உறுதி | தமிழக அரசு ஊழியர்கள் | ஊழியர்களுக்கு நிலையான மற்றும் கௌரவமான ஓய்வூதியத்தை உறுதி செய்தல். |
| ➜ பூம்புகார் மாநில விருது திட்டம். | அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்தல். | சிறந்த கலைஞர்களுக்கு மாநில அளவிலான அங்கீகாரம் அளித்தல். |
| ➜ Free Sewing Machine சுயதொழில் தொடங்க சிறந்த வாய்ப்பு! | தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். | வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் |
| ➜ Visually Impaired Marriage Assistance Scheme TN | ஒரு நபர் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவராகவும், மற்றொருவர் மாற்றுத்திறனாளி அல்லாத நபராகவும் இருக்க வேண்டும். | தங்கம் மற்றும் நிதியுதவி. |
| ➜ Kaaval Karangal Scheme | பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். | ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு உதவி. |
| ➜ Enadhu Gramam Scheme Tamil Nadu | வெளிநாடு வாழ் தமிழர்கள். | கிராம உள்கட்டமைப்பு மேம்பாடு. |
| ➜ THAI Scheme | கிராமப்புற மக்கள் மட்டுமே. | வாழ்க்கைத் தரம் உயர்வு. |
| ➜ Tamil Nadu New Health Insurance Scheme | அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள். | பணமில்லா மருத்துவக் காப்பீடு. |
| ➜ CM Solar Rooftop Subsidy திட்டம் | தமிழ்நாடு வீட்டு உரிமையாளர்கள். | மின்சாரம் செலவு குறைப்பு. |
| ➜ அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகைத் திட்டம் | வயதான தமிழறிஞர்கள் மட்டுமே. | மாதாந்திர நிதி உதவி. |
| ➜ நீங்கள் நலமா திட்டம் | அனைத்து பொதுமக்கள். | நலத்திட்டப் பலன்கள் நேரடியாக கிடைக்கும். |
| ➜ தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் | அனைத்து தொழிலாளர்கள். | வேலை இடங்களில் ஆரோக்கிய சேவை. |
Tamil Nadu Government Schemes பக்கத்தில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் திட்டத்திற்கான தகுதி, அதற்கான பயன்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவற்றை அதிகாரப்பூர்வத் தகவல்களுடன் இங்கே துல்லியமாக அறிந்துகொள்ளலாம். அரசின் சலுகைகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்தி, உங்கள் உரிமைகளைப் பெற்று வளமான வாழ்வு பெற இந்தப் பக்கம் உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
Trending Schemes
Tamil Nadu Government Schemes A to Z
Tamil Nadu Government Schemes எதற்காக உருவாக்கப்பட்டது?
தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த சரியான தகவல்கள், சரியான நேரத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே இந்த Tamil Nadu Government Schemes பக்கத்தின் நோக்கமாகும்.
- ஒரே இடத்தில் அனைத்துத் திட்டங்கள்: கல்வி, விவசாயம், மகளிர் நலம், வேலைவாய்ப்பு & திறன் மேம்பாடு, சமூக நலம் என அரசின் அனைத்து முக்கியத் திட்டங்களும் எளிய தொகுப்பாக இங்கே கிடைக்கும்.
- துல்லியமான தகவல்: தேவையற்ற விளம்பரங்களோ அல்லது குழப்பமான தகவல்களோ இன்றி, உங்களுக்கு நேரடியாகப் பயன்படும் விவரங்கள் மட்டுமே பகிரப்படும்.
- நம்பகத்தன்மை: ஒவ்வொரு தகவலும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.
- தொடர் அப்டேட்ஸ்: அரசு வெளியிடும் புதிய திட்டங்கள் மற்றும் விதிமுறை மாற்றங்கள் உடனுக்குடன் இங்கே புதுப்பிக்கப்படும்.
உங்களுக்கான Tamil Nadu Government Schemes-களைத் தேர்வு செய்வது எப்படி?
| தலைப்பு | செய்ய வேண்டியவை |
|---|---|
| தகுதிச் சரிபார்ப்பு | உங்கள் வயது, கல்வி மற்றும் வருமான வரம்பு திட்டத்திற்குப் பொருந்துகிறதா எனச் சரிபார்க்கவும். |
| பிரிவைத் தேர்வு செய்தல் | மாணவர், விவசாயி, மகளிர் அல்லது தொழிலாளர் என உங்களைச் சார்ந்த சரியான பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். |
| திட்டங்களை ஒப்பிடுதல் | உங்கள் பிரிவில் உள்ள பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து, அதிக பயன் தரும் திட்டத்தைத் தேர்வு செய்யவும். |
| அதிகாரப்பூர்வ உறுதி | விண்ணப்பிக்கும் முன், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தகவல்களைச் சரிபார்க்கவும். |
Tamil Nadu Government Schemes எப்போது புதுப்பிக்கப்படும்?
| தலைப்பு | விவரம் |
|---|---|
| தினசரி அப்டேட்ஸ் | TNNewsBox தளத்தில் பதிவேற்றப்படும் அனைத்து அரசுத் திட்டங்களும் உடனுக்குடன் இங்கும் சேர்க்கப்படும். |
| புதிய திட்டங்கள் | தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிவித்த உடன் இங்கே சேர்க்கப்படும். |
| விதிமுறை மாற்றங்கள் | தகுதி அல்லது விண்ணப்பிக்கும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாகத் திருத்தப்படும். |
| நடைமுறை மாற்றங்கள் | ஏதேனும் பழைய திட்டங்கள் நிறுத்தப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ அவை நீக்கப்படும். |
உள்ளடக்கம்,
Tamil Nadu Government Schemes – FAQs
1) ஒரே நபர் பல அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாமா?
ஆம், தகுதியுள்ள பட்சத்தில் ஒரு நபர் பல திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரே தேவைக்காக (உதாரணமாக வீடு கட்டுவதற்கு) இரண்டு வெவ்வேறு திட்டங்களில் நிதியுதவி பெற முடியாது. வெவ்வேறு தேவைகளுக்கான திட்டங்களில் (கல்வி, மருத்துவம், மாதாந்திர உதவித்தொகை) தாராளமாகப் பயன் பெறலாம்.
2) ஒரு திட்டத்திற்கான தகுதியை (Eligibility) அதிகாரப்பூர்வமாக எப்படிச் சரிபார்ப்பது?
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tn.gov.in அல்லது அந்தந்தத் துறைகளின் பிரத்யேக இணையதளங்களில் வெளியிடப்படும் அரசாணைகள் (Government Orders) மற்றும் திட்ட வழிகாட்டுதல்களை (Scheme Guidelines) வாசிப்பதன் மூலம் தகுதிகளைத் துல்லியமாக உறுதி செய்துகொள்ளலாம். மேலும், இந்தத் திட்டங்கள் குறித்த எளிமையான விளக்கங்கள் மற்றும் தற்போதைய செய்திகளைத் தெரிந்துகொள்ள TN News Box தளத்தில் உள்ள Tamil Nadu Government Schemes பக்கத்தைப் பயன்படுத்தியும் விரிவான தகவல்களைப் பெறலாம்.
3) திட்டங்களுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் – எது சிறந்த விண்ணப்ப முறை?
தற்போது தமிழ்நாடு அரசு பெரும்பாலான திட்டங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளதால், e-Sevai மையங்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழி விண்ணப்பிப்பதே சிறந்தது. இதன் நேரடி லிங்க்-களை TN News Box தளத்தில் உள்ள Tamil Nadu Government Schemes பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். நேரடி விண்ணப்பங்கள் (Offline) பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
4) விண்ணப்பித்த பிறகு நிலையை (Application Status) எப்படித் தெரிந்துகொள்வது?
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் Acknowledgement Number அல்லது விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட இணையதளத்தின் ‘Track Status’ பகுதியில் உங்கள் நிலையை அறியலாம். மேலும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்திகள் மூலமும் தகவல்களைப் பெறலாம்.
5) ஆவணங்களில் பிழை இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுமா?
ஆவணங்களில் சிறிய எழுத்துப்பிழைகள் அல்லது தெளிவற்ற நகல்கள் இருந்தால், அவை உடனே நிராகரிக்கப்படாது. மாறாக, அதிகாரிகள் அவற்றைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க (Re-submit) விண்ணப்பதாரருக்கு வாய்ப்பு வழங்குவார்கள். இருப்பினும், தகுதியே இல்லாத ஆவணங்களைச் சமர்ப்பித்தாலோ, உண்மைகளை மறைத்தாலோ அல்லது தவறான தகவல்களை (False Information) வழங்கினாலோ விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்
Key Insights & Best Takeaways
The Tamil Nadu Government Schemes A to Z guide serves as a comprehensive roadmap for social equity, integrating multi-sectoral welfare initiatives that target diverse demographics from students to farmers. These programs are strategically designed to bridge the gap in resource accessibility, offering a structured framework for financial aid, educational support, and professional skill-building. By centralizing information on gender-specific and vocational benefits, the guide empowers citizens to navigate the administrative ecosystem efficiently, ensuring that grassroots development is both inclusive and sustainable.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
















